எனக்கு மட்டும் ஏன் அமைதி அத்தனை வசீகரமாய் இருக்கிறது ? எவ்வித பதட்டமும் இன்றி கண்னை கசக்கி எழும் சிறு மகவு போன்ற அதிகாலை நெடுஞ்சாலைகள். அரங்கேற்றத்தில் இரண்டு பாடல்களுக்கிடையில் நர்த்தனமாடி அமர்ந்திருக்கும் சலங்கை பாதங்கள். Marathon innings ஆடி அமரும் டிராவிட் - இன் தெளிந்த முகம். ஒரு இலை கூட ஒழுக்கை கலைத்து விடாதபடிக்கு ஓடிக்கொண்டிருக்கும் காவிரியின் கிளை நதி. வாசிப்பு முடிந்தும் அதிர்ந்து கொண்டிருக்கும் யாழின் தந்தி. பேரிலக்கியம் எழுதிய ஒரு படைப்பாளனின் அதிகாலை நடை. காற்று புரட்டிபார்த்துவிட்டுப் போன புத்தக பக்கங்கள். இடியோசை இல்லாது கலைந்து போகும் முகில்குவைகள். பெருமழை ஓய்ந்த பின் சொட்டிக்கொண்டிருக்கும் தளிர் இலைகள். ஒருவேளை ஆடல்வல்லான் இடக்காலை கீழிறக்கி, கைக்குட்டையில் முகம்புதைத்து இளைப்பாறுவாரெனில் ? - மனோ 4 Aug 2023 சென்னை