அனாகத நாதம் செந்தில் ஜெகந்நாதனின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு. அனாகத நாதம் கதையில் சாமிநாதன் பேருந்தில் எறியபோதே இவர எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று சிந்தித்து கொண்டே வாசித்து முடித்தேன். 2023 மார்ச் தமிழினியில் கதை வந்தபோதே படித்திருக்கிறேன். இப்போது தான் கதை எனக்கு திறந்திருக்கிறது. கதை படித்து முடித்த பின்னும் மழை கொட்டிக்கொண்டிருப்பது போன்று நாதம் கேட்டுகொண்டே இருக்கிறது. எத்தனையோ நாட்கள் வாசிக்க முயன்று முயன்று திரும்பி வந்தவன் அந்த ஒருநாளுக்குள் சாமிநாதன் உள்ளும் புறமுமாக வெகுதூரம் பயணித்து வந்திருக்கிறான். அலகிலா விளையாட்டு கதையில் பதின் பருவத்தின் மனநிலையை லகுவாக கை கூடி வந்திருக்கிறது. எம் ஜி ஆர் பிறந்த நாட்களின்போது தெருவை அடைத்தபடி மேடையிட்டு நடக்கும் கட்சி நாடகங்கள் பொதுக்கூட்டங்கள் "நான் ஆணையிட்டால்" போன்ற பாட்டுகளுக்கு குறைந்த விலை எம் ஜி ஆர்களின் நடனம் போன்ற நினைவுகளை மீட்டியது. புடவியின் அலகிலா விளையாட்டு ஆச்சியை கொண...