Skip to main content

Posts

Showing posts with the label அரசியல்

ஜனநாயக சோதனை சாலையில் - நூல்குறிப்பு

சென்ற சனிகிழமையன்று திருவாரூர் செல்ல திட்டமிட்டிருந்தோம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் “பரபரப்பான” சூழலில் இருந்து விடுபடவும், தகவல் என்ற பெயரில் நொடிக்கொரு செய்தியை “தயாரித்து” பதட்டத்தில் வைத்திருந்த  செய்தி ஊடகங்களில் இருந்து மீட்பும் அளித்த பயணம்.  காலை ஜெ தளத்தில் ஜனநாயக சோதனை சாலையில் புத்தகத்தை குறித்த கட்டுரை எழுதியிருந்தார். கிண்டிலில் வாங்கி படிக்க தொடங்கினேன். 2016ம் ஆண்டுவாக்கில் தினமலரில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதுவரை அரசியல் என்று புரிந்துவைத்திருந்த ஏறத்தாழ அத்தனையும் தவறான புரிதல்கள் என்று புத்தகத்தை படித்து முடிக்கும்போது தோன்றியது.  வெளிச்சத்தின் பின்னணியில் கரிய x Ray அர்த்தப்படுவதை போல, ஒரு சமகால அரசியல் நிகழ்வு வரலாற்று, தத்துவ பின் புலத்தில் புதிய அர்த்தத்தை கொடுக்கிறது. முதலில் இந்நூல் அன்றாட தேர்தல் அரசியலில் இருந்து வாக்களிக்கும் ஒருவனுக்கு இந்த ஜனநாய முறைக்கு நாம் வந்தடைந்த வரலாற்று பின்னணியை விளக்குகிறது. ஒவ்வொரு கட்டுரையும் மலைமுடியை மட்டுமே தொட்டு சிறிய சிந்தனை துளியை மட்டும் சொல்லி செல்வதாக இருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலும்...