Skip to main content

ஜனநாயக சோதனை சாலையில் - நூல்குறிப்பு



சென்ற சனிகிழமையன்று திருவாரூர் செல்ல திட்டமிட்டிருந்தோம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் “பரபரப்பான” சூழலில் இருந்து விடுபடவும், தகவல் என்ற பெயரில் நொடிக்கொரு செய்தியை “தயாரித்து” பதட்டத்தில் வைத்திருந்த  செய்தி ஊடகங்களில் இருந்து மீட்பும் அளித்த பயணம். 

காலை ஜெ தளத்தில் ஜனநாயக சோதனை சாலையில் புத்தகத்தை குறித்த கட்டுரை எழுதியிருந்தார். கிண்டிலில் வாங்கி படிக்க தொடங்கினேன். 2016ம் ஆண்டுவாக்கில் தினமலரில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதுவரை அரசியல் என்று புரிந்துவைத்திருந்த ஏறத்தாழ அத்தனையும் தவறான புரிதல்கள் என்று புத்தகத்தை படித்து முடிக்கும்போது தோன்றியது. 

வெளிச்சத்தின் பின்னணியில் கரிய x Ray அர்த்தப்படுவதை போல, ஒரு சமகால அரசியல் நிகழ்வு வரலாற்று, தத்துவ பின் புலத்தில் புதிய அர்த்தத்தை கொடுக்கிறது.

முதலில் இந்நூல் அன்றாட தேர்தல் அரசியலில் இருந்து வாக்களிக்கும் ஒருவனுக்கு இந்த ஜனநாய முறைக்கு நாம் வந்தடைந்த வரலாற்று பின்னணியை விளக்குகிறது. ஒவ்வொரு கட்டுரையும் மலைமுடியை மட்டுமே தொட்டு சிறிய சிந்தனை துளியை மட்டும் சொல்லி செல்வதாக இருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு தவறான கற்பிதம் உடைபட்டுகொண்டே இருந்தது. இதிலிருந்து வெகு தொலைவு சென்று நாமே சிந்திக்க முடியும்.

ஜனநாயகம் எதற்காக - Spotifyல் mission ISRO with harsha Bhogle என்றொரு podcast உள்ளது. இந்திய விண்வெளி துறையின் வரலாற்றை பற்றியது. அதன் தொடக்க அத்தியாயங்கள் கண்களில் கண்ணீர் இல்லாமல் கேட்கமுடிவதில்லை. எங்கும் பஞ்சமும் பட்டினியும் நிறைந்த நிலையில் நேரு பிரதமராக போற்றுப்பெற்றுகொண்டார். அப்போதே விண்வெளி துறை வளர்ச்சி குறித்த கனவு அவரிடம் இருந்தது. சோற்றுக்கே வழியில்லாத மக்கள் இருக்கும்போதும் விண்வெளி கனவை கண்டவர் நேரு. 

தனிப்பட்ட முறையில் காந்தியை படிக்கும்போது ஏற்படும் உணர்ச்சிகொந்தளிப்பு எனக்கு நேருவை படிக்கும்போது வருவதுண்டு. ஜனநாயகம் எதற்காக என்ற கட்டுரையும் அதே கொந்தளிப்பை கொடுத்தது. Berkley பல்கலைக்கழகத்தில் உள்ள நேருவின் கடிதம் தன் மக்களுக்காக மன்றாடிய தலைவனின் சான்று. அப்படிப்பட்ட தலைவனை கொடுத்தது ஜனநாயகம். நமக்காக சிந்திக்கும் நமது தலைவனை கொடுத்தது. இன்றிருக்கும் தலைவர்கள் அவ்வாறு இல்லையென்றால் அது வாக்காளர்களாகிய நமது தவறன்றி இந்த அமைப்பின் தவறல்ல.  

வளர்ச்சியை முன்னிறுத்திய ஆட்சி என்பது வலிமையான பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட ஒற்றை ஆளுங்கட்சி இருக்கும்போது தான் நடைபெறும் என்பது எனது புரிதல். அது தான் இன்றும் கற்பிக்கப் படுகிறது. ஒற்றை பெரும்பான்மையாக மத்தியில் அமைந்திருக்கும் ஆட்சியின் விளைவுகள் கண் முன்னே இருக்கின்றன. கூட்டணி ஆட்சியில் தான் பல குரல்கள் ஒலிக்கும். ஒவ்வொரு சட்டத்தின் போதும் கலந்தலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் சாத்தியம் இருக்கும். இது நான் யோசித்திராத கோணம்.

ஒரு ஆட்சியோ கட்சியோ ஏன் ஊழல் மிகுந்ததாக இருக்கிறது என்பதற்கு தர்க்கரீதியிலான காரணம் அந்த கட்சியின் தொண்டர் படைக்கு வாழ்வாதரத்தை கொடுக்கவேண்டும் என்ற காரணம் எற்புடையதாக்கத்தான் இருக்கிறது. நான் இது வரை நினைத்திருந்தது எந்த ஒரு அமைச்சரும் என் இவ்வளவு ஊழல் புகார் கொண்டவராக இருக்கிறார் என்று. ஊழல் செய்து ஈட்டிய பணம் அந்த பிரமிடின் இறுதி வரிசை வரை ஒவ்வொரு நிலைக்கும் பகிர்ந்தளிக்கப் படுகிறது என்ற தெளிவை அளித்தது. முழு நேர ஊழியர்களுக்கு வாழ்வாதாரமும் மாத ஊதியமும் கொடுக்கவேண்டியது கட்சியின் பணி. அதற்கென்றே அவர்கள் பெருந்தொகையை செலவழிக்கவேண்டும் அதை ஆட்சியின் போதே ஈட்டுகின்றனர். இந்த சமூக ஊடக காலகட்டத்தில் தேர்தல் நேரத்தில் Booth agent போன்ற நேரடி இருப்பு தேவை படும் பணிகளில் அன்றி முழு நேர ஊழியர்கள் தனியாக தேவை இல்லை என்பதே நிதர்சனம். ஒரு கட்சிக்கு நிலைப்படை போல எவ்வளவு பெரிய தொண்டர் படை உள்ளதோ அந்த அளவிற்கு ஊழலின் அளவும் இருக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக  ஜெ வை படித்துகொண்டிருப்பவன் என்ற முறையில் எனது சிந்தனை முறையில் அவரது பாதிப்பு உண்டு. நான் வாக்களிக்க செல்லும்போது கொண்டிருந்த முதல் அளவு கோள் அந்த வேட்பாளர் குற்றப்பின்னணி கொண்டிருக்ககூடாது என்பது தான். எனது திருவரங்கம் தொகுதியில் அதன் அடிப்படையில் தான் வாக்களித்தேன். “யார் குற்றவாளி ?” என்ற கட்டுரையின் சாரமும் இது தான். குற்றப்பின்னணி கொண்ட ஒரு வேட்பாளாரை எந்த சாக்கு சொல்லி ஆதரிப்பீர்கள் என்றாலும் அந்த குற்றத்தை உளமாற ஏற்றுக்கொள்கிறோம் என்று தான் அர்த்தம்.

கோவிட் காலத்தில் குறுகிய கூட்டத்தில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்னும் நான் என்று ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற போது உணர்ச்சி வசப்பட்டு  மிகுந்த கொந்தளிப்புடன் இருந்தேன்.40 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட ஒருவர் இன்று பதவி ஏற்றிருக்கிறார். நாளை காலையில் இருந்து நாம் வளர்ந்த ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடப்படுவோம் என்று எண்ணியிருந்தேன். இன்று விஜய் பதவி ஏற்கும்போதும் அதே கொந்தளிப்பை அடைகிறேன். 

இரண்டு கொந்தளிப்புகளுமே தேவையற்றது (இன்று பதவி ஏற்கும் இந்த அரசில் பல நேர்மறை அம்சங்கள் இருக்கின்றன என்றாலும்). மாற்றம் என்பது அப்படி ஒற்றை இரவில் நிகழ்வதல்ல என்பது கண்கூடாக காண முடிந்தது. சென்ற ஆட்சி என்பது நிறைய சமரசங்களும் வளர்ச்சி திட்டங்களும் அவற்றை செயல் படுத்துவதாகவும் சில குறைகள் கொண்டதாகவும் தான் இருந்தது. என்னுள் இருக்கும் சிறுவன் இன்னுமும் ஒற்றை இரவில் புரட்சி நிகழ்ந்து முதல்வன் பட இறுதி காட்சியை போல் காலியான புகார் பெட்டிக்குள் கொன்றை மலர்கள் விழுவதாக இருக்கும் என்று தான் நம்பிக்கொண்டிருக்கிறான். ஆனால் அரசு, ஆட்சி என்பது பல தரப்புகளின் இடையில் ஒரு சமரசத்தை ஏற்படுத்துவதன் மூலமாக ஒவ்வொரு அடியாக நிகழும் ஒன்று என்பது யானை நடை கட்டுரை அளிக்கும் புரிதல். 

ஏன் கத்துகிறார்கள், வயிற்றைப்பற்றி பேசுங்கள் என்ற கட்டுரைகளை பார்க்கும்போது பல தலைவர்கள் நினைவிற்கு வந்து சென்றனர். ஒருமுறையேனும் எனது சிந்தனையை தூண்டுவதாக பேசவில்லை. ஒருவகையான நிகழ்த்துக்கலை காண்பது போன்ற அனுபவமே பலரது உரைகளிலும் காண முடிகிறது. 

தனித்து நடப்பவர்கள் கட்டுரை உள்ளூர கூச வைத்தது - சமூக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமியை சமூக ஊடகத்தின் மூலமாக மட்டுமே அறிந்திருந்த எனக்கு அவர் ஒரு கோமாளி என்ற சித்தரிமே கையளிக்கப் பட்டிருந்தது. எந்த அரசு வந்தாலும் அவரது குற்றங்களை சுட்டிக்காட்டுவதால் இருவருக்கும் எதிரியாக இருந்தவர். உண்மையில் அவரை போன்றவர்கள் தான் மக்களின் மனசாட்சியை நோக்கி பேசுபவர்கள் உடன் நிற்க ஒருவர் இல்லையென்றாலும் தொடர்ந்து குரலெழுப்புபவர்கள் சிரமேற்கொண்டு போற்றத்தகுந்தவர்கள். அவர்களது குரலை கேட்காமல் தவிர்ப்பதென்பது நமது மனசாட்சியை நாமே அஞ்சுவதன்றி வேறில்லை. . 

இன்னும் பல கட்டுரைகள் ஒவ்வொன்றும் விரிவாக சிந்திக்க தக்கவையாக இருக்கும் முக்கியமான தொகுப்பு. தேர்தல் அரசியல் குறித்த எனது சிந்தனையை இந்நூலிற்கு முன் பின் என்று வகுத்துக்கொள்ளலாம். ஜெவின் புனைவல்லாத எழுத்தின் இதை முதல் நூலாக இதை வைப்பேன். 



மனோ,
16 மே 2026

Comments

Popular posts from this blog

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...