Skip to main content

Posts

Showing posts from May, 2026

பொய்யிலி மாலை - R நாகசாமி நூல் குறிப்பு

பொய்யிலி மாலை - R நாகசாமி நூல் குறிப்பு  மங்கை வீர ராகவன் அவர்களின் தமிழகத்தில் லகுலீச பாசுபதம் புத்தகத்தின் முன்னுரையில் “தமிழ் சைவ மரபின் மூவர் தேவாரங்களை பாசுபத நெறியில் விளக்கும் பொய்யிலிமாலை எனும் நூல் அளித்த R நாகசாமி அவர்களின் முன்னுரைக்கு நன்றி” என்று குறிப்பிட்டிருந்தனர். Kindle Unlimitedல் நூல் கிடைக்க படிக்க தொடங்கினேன்.  R நாகசாமி, தமிழக தொல்லியல் துறையின் முதல் நிறுவனர் இயக்குனர். முதுகலை தமிழ் படித்த மாணவர்களை ஓராண்டு கல்வெட்டு பட்டய படிப்பும் தொல்லியல் துறையில் பணி ஆணையும் வழங்கியவர். வேதாசலம், குடவாயில் பாலசுப்ரமணியன் போன்ற சமகால முக்கியமான ஆய்வாளர்கள் பலருக்கு ஆசிரியராக இருந்தவர். தொல்லியல், கல்வெட்டு, திருமுறை ஆய்வில் பிதாமகர் என்று கருதப்படும் ஆய்வாளர். அவரது தொடக்க கால நூல்களுள் ஒன்று பொய்யிலி மாலை. பிற்காலத்தில் அவரது நூல்கள் முன் முடிவுகளுடன் எழுதப்பட்டதாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நூல் அவர் தினமணி மற்றும் பல இதழ்களில் எழுதிய கட்டுரை தொகுப்பு.     12ம் நூற்றாண்டில் சேக்கிழாரால் பெரிய புராணம் எழுதப்பட்ட பிறகு பல மொழிகளிலும் மொழிபெயர்க்...