Skip to main content

திருவாரூர் ஆழித்தேர் - குருகு கட்டுரை

குருகு 26வது இதழில் திருவாரூர் தேர் குறித்த எனது கட்டுரை பிரசுரமாகியுள்ளது. 



திருவாரூர் ஆழித்தேர் தமிழகத்தின் நீண்ட திருவிழாக்களில் தலையாயது. வசந்த விழாவிற்கு முன்னும் பின்னுமாக 55 நாட்கள் நடைபெறும் நீண்ட பிரம்மோற்சவம். எழுத்து வடிவில் கிடைக்கும் ஆவணங்களாகவே தஞ்சை சரஸ்வதி மகால் நூலத்தில் உள்ள மோடி ஆவணங்களில் திருவாரூர் தேர் திருவிழா குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. தேவாசிரியன் மண்டப விதான ஓவியங்களிலும் திருவிழா ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. 

நண்பர்களுடன் சென்று வந்த அனுபவக் குறிப்புகளும் திருவிழா பத்ததி குறித்தும் தேருக்கு முதல் நாள் புறப்பாடு குறித்தும் ஆவணப் படுத்த முயற்சித்துள்ளேன். இவற்றை இன்னும் நீண்ட பதிவாக ஒவ்வொருநாளும் நடைபெறும் நிகழ்வுகளை புகைப்படங்களுடன் தொகுக்கும் திட்டமும் உள்ளது.

அரசன் என்ற தொல்படிமம் அதன் உட்சபட்ச சாதியத்தை எவ்வாறு அடைகிறது என்று புரிந்துகொள்ள முயன்றிருக்கிறேன். கட்டுரையை படித்து செழுமை செய்ய உதவிய நண்பர் லால்குடி தினேஷ் மற்றும் புதுவை தாமரைக்கண்ணன் ஆகியோருக்கு நன்றியும் அன்பும். 

இந்த இதழில் பண்டைய இசைக்கருவிகளை ஆவணப் படுத்தும் சரவண பிரபுவின் நேர்காணலும் திருமுதுகுன்றம் பழமலை நாதர் கோயிலின் தேர் சிற்பங்கள் குறித்த விரிவான ஆவணப் பதிவும் மற்றும் பல நண்பர்களின் பங்களிப்பும் உள்ளன. 

கட்டுரை சுட்டி - https://www.kurugu.in/2026/04/Tiruvarur-Aazhi-Ther-Manoj-Kumar.html

மனோ 

திருச்சி 

10 மே 2026

Comments

Popular posts from this blog

செய்நன்றி ❤️✨

எனது கல்லூரி துறைத்தலைவர் இப்போது Pollachi Institute of Engineering and Technology கல்வி ஆலோசகராக பணியாற்றுகிறார். அவர் அழைப்பின் பேரில் Pollachi Institute of Engineering and Technology என்ற கல்லூரியில் சென்ற திங்கள் அன்று முதலாம் ஆண்டு, மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களிடம் உரையாற்றினேன். இதை சொன்னபோது சில நண்பர்கள் ஆர்வத்துடன் என்ன பேசப்போகிறேன் என்று கேட்டனர், 2 நாட்கள் உழைத்து தயார் செய்த உரையென்பதாலும் பொதுவான உரையென்பதாலும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் ஆற்றிய உரையை இங்கு எழுதுகிறேன். (இது உரையின் எழுத்து வடிவம், சென்ற வாரம் கேட்டுக்கொண்டார்கள் என்பதை, “போன வாரம் கேட்டாங்க” என்று வாசிக்கவும்)  Dear Boys and girls சென்ற வாரம் mam அழைத்து முதலாம் ஆண்டு மாணவர்களிடம் பேசவேண்டும் என்று சொன்னபோது நான் கேட்ட முதல் கேள்வி ஆங்கிலத்திலா தமிழிலா என்று, பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள் அதனால் தமிழ் ஆங்கிலம் கலந்து பேசும்படி சொன்னார். முழுதும் தமிழில் பேசினாலும் செயற்கையாக இருக்கும், முழுதும் ஆங்கிலத்தில் பேசினாலும் பின் தொடர்வதில் சிக்கல் இருக்கும். மறுநாள் தான் ஒப்புக்கொண்ட...

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...