Skip to main content

Posts

Showing posts with the label Non-fiction

தித்திக்கும் தற்செயல்கள் ❤️

எண்ணியிராத தற்செயல் நிகழ்வு பயணத்தின் பிரதான நினைவாக எஞ்சுவது பல பயணங்களில் நிகழ்ந்துள்ளது. புகழ்பெற்ற blogger வேலுதரன் அவர்களை துடையூர் கோயிலில் சந்தித்தது அப்படி ஒரு நிகழ்வு.  வேலுதரனுடன்  இன்றிரவு பெங்களூர் புறப்படுவதால் அரை நாளை வீணாக்க வேண்டாம் என்று கலைக்கோவனின் எறும்பியூர் துடையூர் சோழர் தளிகள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு துடையூர் கோயில் சென்று வந்தேன். அகிலாண்டேஸ்வரி சந்நிதியில் இருந்து வீட்டிற்கு 200 மீட்டருக்குள் தான் இருக்குமென்றாலும் ஆடிவெள்ளி அன்று இரவு தரிசனம் முடித்து வர 11 மணி ஆகிவிட்டது. காலை 6.30 மணிக்கு எழுந்து கிளம்பி பேருந்து பிடித்து கோயில் அடைய 8.30 க்கு மேல் ஆகிவிட்டது. டோல்கேட்டில் நொச்சியம் வழி செல்லும் ஒவ்வொரு பேருந்திலும் துடையூர் போகுமா என்று கேட்க துறையூர் தானே போகும் போகும் என்று சொன்ன பல நடத்துனர்களிடம் போராடவேண்டி இருந்தது. துடையூர் விஷமங்களேஸ்வரர் கோயில் சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சோழர் கால சிவன் கோயில். சுந்தரசோழர், ராஜராஜன், ராஜேந்திரன் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. அப்பரின் அடைவு திருத்தண்டகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வைப்பு தலம். கொள்ளிடத்...

ஜனநாயக சோதனை சாலையில் - நூல்குறிப்பு

சென்ற சனிகிழமையன்று திருவாரூர் செல்ல திட்டமிட்டிருந்தோம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் “பரபரப்பான” சூழலில் இருந்து விடுபடவும், தகவல் என்ற பெயரில் நொடிக்கொரு செய்தியை “தயாரித்து” பதட்டத்தில் வைத்திருந்த  செய்தி ஊடகங்களில் இருந்து மீட்பும் அளித்த பயணம்.  காலை ஜெ தளத்தில் ஜனநாயக சோதனை சாலையில் புத்தகத்தை குறித்த கட்டுரை எழுதியிருந்தார். கிண்டிலில் வாங்கி படிக்க தொடங்கினேன். 2016ம் ஆண்டுவாக்கில் தினமலரில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதுவரை அரசியல் என்று புரிந்துவைத்திருந்த ஏறத்தாழ அத்தனையும் தவறான புரிதல்கள் என்று புத்தகத்தை படித்து முடிக்கும்போது தோன்றியது.  வெளிச்சத்தின் பின்னணியில் கரிய x Ray அர்த்தப்படுவதை போல, ஒரு சமகால அரசியல் நிகழ்வு வரலாற்று, தத்துவ பின் புலத்தில் புதிய அர்த்தத்தை கொடுக்கிறது. முதலில் இந்நூல் அன்றாட தேர்தல் அரசியலில் இருந்து வாக்களிக்கும் ஒருவனுக்கு இந்த ஜனநாய முறைக்கு நாம் வந்தடைந்த வரலாற்று பின்னணியை விளக்குகிறது. ஒவ்வொரு கட்டுரையும் மலைமுடியை மட்டுமே தொட்டு சிறிய சிந்தனை துளியை மட்டும் சொல்லி செல்வதாக இருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலும்...

துளிநிறைவு - குருகு கட்டுரை ✨

          குருகு இதழில் அடியேனின் கட்டுரை பிரசுரமாகியுள்ளது. குருகு கலை, பண்பாடு, வரலாற்று, நிகழ்த்து கலை ஆகிய தளங்களில் செயல்படும் இணைய இதழ். அ கா பெருமாள், ஜெயமோகன் போன்ற தமிழ் பண்பாட்டின் முக்கியமான முகங்களின் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. ஆய்வாளர் வேதாச்சலம், David attenbrough குறித்த சிறப்பிதழ்கள் வந்துள்ளன. மூன்றாண்டுகளாக தொடர்ந்து வெளி வரும் இந்த இதழின் 25ம் இதழ்  கோயில் கலை செல்வர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.           இந்தியாவில்  பேரரசுகளின் சரிவிற்கு பின் காலனியாதிக்க கால கட்டம் வரையில் கோயில் கலை வரலாற்றில் ஒரு அகழி இருந்தது. அதற்கு பல்வேறு அரசியல் சமூக காரணங்கள் உள்ளன. மேற்கத்திய ஆய்வாளர்கள் எழுந்து வந்து இந்த ஆய்வுகளை தொடங்கும் வரை அந்த அகழி நிரப்பப்படாமல் இருந்தது.  Hultzsch ,  கல்வெட்டு அறிஞர் ராவ் பகதூர் Venkaiyya இருவரும் தஞ்சை பெரியகோயிலை கட்டியவர் ராஜராஜன் என்று வெளிக்கொணர்ந்தனர்.           அன்றிலிருந்து தொடங்கிய கல்வெட்டிய...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

புதுப்புனல்

காவேரில தண்ணி வந்துருச்சு என்பது ஜூன் மாதத்தின் இனிய நினைவுகளில் ஒன்று. (பள்ளி திறந்து மீண்டும் நண்பர்களை சந்திப்பது என்பது மற்றொன்று) கோடைவிடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் மாதம். காவிரி நான் அறிந்த நாளிலிருந்து வற்றா நதியாக இருந்ததில்லை. ஜூன் முதல் வாரத்தில் மேட்டூர் திறந்துவிட்டால் 2-3 நாட்களில் முக்கொம்பு வந்து ஓரிரு நாட்களில் கடைமடை அடையும். விநாயகர் சதுர்த்தி முடிந்து 7ம் நாள் Plaster Of Paris விநாயகர் சிலைகளை கரைப்பது வரை நீர் வரத்து இருக்கும். வாய்க்கால் நீரில் சூடமேற்றி வழிபடுவதும் முதல் துளி நீரை அல்லி தலையில் விட்டுக்கொள்வதுமான  சில காணொளிகள்  Instagramல்  உலவி வருகின்றன. காவிரி டெல்டா பகுதியாகிய எங்களுக்கு பொன்னி என்பது விளக்க முடியா மூதன்னை. என் சந்ததி அத்தனைக்கும் அன்னமென்றானவள்.  ரத்தமாக, நினமாக, விழிநீராக உடலெங்கும் வ்யாபித்திருப்பவள். அரங்கனுக்கு காவிரி கொள்ளிடமென்று இரு தோளிலும் மாலையானவள். இரு கரை தொட்டு அகண்ட காவிரியாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஒற்றை உயிரை காண்பதென்பது பரவசமூட்டக்கூடிய ஒரு அனுபவம். கரிகாலன் கண்ட நதியை இங்கு வாழ்ந்த தோல் மனிதன் கண்ட...

ஸ்ரீரங்கத்து ஹொய்சாளர் கற்றளி ✨

                    திருவரங்கம் பெருங்கோயிலில் உள்ள ஒரு கோயில் ஸ்ரீ வேணுகோபாலன் சந்நிதி. திருவானைக்காவல் குறித்த வரலாற்று குறிப்புகளுக்காக Later Chola Art என்ற SR பாலசுப்ரமணியம் அவர்களுடைய புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தபோது சோழ - ஹோய்சாள கட்டிடக்கலைகளில் சந்திப்பில்  நிற்கும் சில கோயில்கள் என்ற இயலில் திருவரங்கம் கோயிலில் உள்ள வேணுகோபாலன் சந்நிதியை குறிப்பிட்டிருந்தார்.           Later Chola Temples S R Balasubrahmanyam, Chola Pallava Phase(Later Pallavas) Part II Contributions of the later pallavas to the chola- pallava  phase. 7.Srirangam            மறுநாள் மாலை (நண்பர் வட்டத்தில் சிலர் அப்போதே சென்றிருப்பர் நான் Late ) சென்று வந்தேன். கூட்டத்தில் வழி தவறி திரியும் குழந்தையை போல் நின்று கொண்டிருக்கும் கோயில். ஹொய்சளர்களின் காலகட்டம் 11-14ம் நூற்றாண்டிற்குள் இந்த சந்நிதி எழுப்பப்பட்டிருக்க கூடும். சோழ பேரரசின் பிற்பகுதி அல்லது பிற்கால பாண்டியர் ஆட்சியின்...

Legends of Shiva ஆவணப்படம்

          ஆழித்தேரில் அமர்பவன் ஆரூர் அமர்ந்த அரசன். வெயில் படாத திருமேனி. ஒவ்வொரு புறப்பாடும் பேரரசனுக்கான உபசாரங்கள். ஆழித்தேர் நடந்த மூன்றாம் நாள் மயிலையில் அறுபத்துமூவர் புடைசூழ வரும் கபாலியை ஒரு சிறுவன் " கபாலி போய்ட்டானா இப்போ எங்க இருக்கான் " என்று கேட்டான். தென் திசை அமர்ந்த ஆலமர் செல்வனிலிருந்து ஊர்த்துவ தாண்டவம் ஆடுவோன் வரைக்கும் எத்தனை ரூபங்கள், எத்தனை தொன்மங்கள்.           Legends of Shiva with Amish என்ற Discovery நிறுவனத்தின் ஆவணப்படம் இந்தியா மற்றும் நேபாளின் சில சிவதொன்மங்களை விளக்கும் மூன்று பகுதி தொடர்.            முதல் பகுதி இமயத்தில் தொடங்கி கேதார்நாத், உத்தர்காண்டில் த்ரியுகிநாராயன், திரிபுராவின் Lost faces,  காசியின் விஸ்வநாதர், மாமிசம், மது படையல் ஏற்கும் கால பைரவர்,  மணிகர்ணிகா காட் இன் சாதுக்கள்  பகுதிகளை குறித்தது.             இரண்டாம் பகுதி நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் உள்ள பசுபதிநாதர், குறி இல் உள்ள Shamnas ...