ஒரு குட்டி வாழ்க்கை கன்னிமாரா நூலகம் கன்னிமாரா நூலகம் செல்லவும் ராஜாவின் simphony கச்சேரிக்குமாக சென்ற வெள்ளி இரவு நண்பர்களுடன் மெட்ராஸ் சென்றுவந்தோம். சென்னை குறித்த எனது முதல் நினைவென்பது AIPMT (All India Pre Medical Test)தேர்வுக்காக 2015ம் ஆண்டு அப்பாவுடன் அண்ணா நகர் கேந்திரிய வித்யாலயா வந்தது தான். இந்த தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றால் அகில இந்திய அளவில் மருத்துவக்கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் மருத்துவ இடம் கிடைக்கும் என்று செய்தித்தாள்களில் படித்து அதற்காக வந்திருந்தோம். அப்போது பலருக்கும் இருப்பதை போன்று ஒரு பிரமிப்புணர்வு தான் இருந்தது. பின்பு பல முறை மாமா வீட்டிற்கும் உணர்வினர் வீட்டிற்கும் கடந்த சில ஆண்டுகளாக புத்தக கண்காட்சிக்கும் என சென்னை பழக்கப்பட்ட நகரமாகிவிட்டது. சென்னை எனக்கு எப்போதுமே தொன்மையின் நகரம். Robert Bruce Foot பல்லவரத்திற்கு அருகில் பழங்கற்காலத்தை சேர்ந்த கல் கருவிகளை கண்டுபிடித்தார். கற்காலத்திலிருந்து காலனியாதிக்க காலகட்டம் வரை மெட்ராஸ்ற்கு ஒரு அறுபடாத வரலாற்று தொடர்ச்சி இருக்கிறது. சுந்தரர் திருத்தொண்டத்தொகையில் மயிலாப்பூரின் வாயிலர் ந...