Skip to main content

Posts

சோழ அரசும் சமூகமும் - நூல் குறிப்பு

Recent posts

உலக அரங்கில் நம்மை முன்வைத்தல் !!

தமிழிலக்கியத்தில் சிற்றிதழ் சூழலுக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. கறாரான அளவுகோல்களுடன் அவை தங்களுக்குள் உரையாடிக் கொள்பவை. அந்த உரையாடல்களே விமர்சன மரபை உருவாக்கி நிலை நிறுத்தின. சமீபத்தில் புக்கர் விருது பெற்ற பானு முஷ்டாக் அவர்களின் புத்தகம் நம்முடைய அளவுகோலில் ஒரு குழந்தை விளையாட்டு என்று கூட மதிப்பிட தக்கதல்ல.  பேரிலக்கியங்களை தன் சொந்த மொழியிலேயே வாசிக்கும் பெரும் பேறு பெற்ற சில இனங்களில் ஒன்று தமிழினம். அதை எத்தனை பேர் வாசிக்கிறோம் எனது பெரிய கேள்வி வாசிப்பவரும் மற்ற பண்பாட்டின் முன் அதை முன்வைப்பதில்லை.  ஆனால் நமது சாதனைகள் பலவும் இந்திய மொழிகளுக்கே தெரியாத நிலையில் தற்பெருமை பேசும் குழுவாக இன்றும் இருக்கிறோம். உலக மொழிகளுக்கும் தமிழ் பண்பாட்டிற்குமான இடைவெளியை குறைக்கும் பொருட்டு விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் southboundreview என்ற வாராந்திர ஆங்கில இணைய இதழை தொடங்கியுள்ளனர். ஆசிரியர்கள் பலர் நம் நண்பர்கள். அடுத்த பத்தாண்டுகளாவது தொடர்ந்து இந்த இதழ் வெளி வரவேண்டும் என்னும் முனைப்புடன் பெரும் பணியை தொடங்கி இருக்கின்றனர்.   ஒவ்வொரு ஞாயிறும் ஒரு இதழ் வெளி வருக...

தந்தை பெருமரம் நூல் குறிப்பு - லால்குடி தினேஷ்

தந்தை பெருமரம் நூல் குறிப்பு - லால்குடி தினேஷ்   1.தந்தை பெருமரம் Baobab மரம் எனும் பெரும் மரத்தை குறித்த கட்டுரை இது. ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் பகுதியை பூர்விமாகக் கொண்டது இந்தியாவில் சுமார் 1500 மரங்களுக்கு மேல் இருப்பதாகவும் மத்திய பிரதேஷ் பகுதியில் குறிப்பிட்ட ஒரு மாவட்டத்தில் அதிக அளவில் இருப்பதாகவும். பிற பகுதிகளில் ஆங்காங்கே சில பகுதிகளில் மட்டும் உள்ளது. எவ்வாறு இந்தியாவிற்கு வந்தது என்பது மர்மமாகவே உள்ளது என்று கூறுகிறார், பல ஊகங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. இந்த மரம் ஒரு மலை போல் வளரக்கூடிய தனிப் பெரும்பரம். இதன் அத்தனை பகுதிகளும் மனிதர்கள் பயன்படுத்தக்கூடியவை எனவேதான் இதை தந்தை பெரும் மரம் என்னும் அர்த்தத்தில் பாவோபாப் என்று அழைக்கின்றனர். இந்த சொல்லின் வேறு சொல் அரபு லத்தின் மொழியை சார்ந்தது.‌   2. காய்ச்சல் மரம்-சின்கோனா உலகை பல நூற்றாண்டுகளாக வாட்டி வதைத்த தொற்றுநோய் மலேரியா. அந்த மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் முக்கிய மருந்தாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டது சின்கோனா மரத்தின் பட்டை. பெருநாட்டின் ஆன்டிஸ் மலைத்தொடரில் பூர்விம...