Skip to main content

Posts

Showing posts with the label பயணம்

தித்திக்கும் தற்செயல்கள் ❤️

எண்ணியிராத தற்செயல் நிகழ்வு பயணத்தின் பிரதான நினைவாக எஞ்சுவது பல பயணங்களில் நிகழ்ந்துள்ளது. புகழ்பெற்ற blogger வேலுதரன் அவர்களை துடையூர் கோயிலில் சந்தித்தது அப்படி ஒரு நிகழ்வு.  வேலுதரனுடன்  இன்றிரவு பெங்களூர் புறப்படுவதால் அரை நாளை வீணாக்க வேண்டாம் என்று கலைக்கோவனின் எறும்பியூர் துடையூர் சோழர் தளிகள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு துடையூர் கோயில் சென்று வந்தேன். அகிலாண்டேஸ்வரி சந்நிதியில் இருந்து வீட்டிற்கு 200 மீட்டருக்குள் தான் இருக்குமென்றாலும் ஆடிவெள்ளி அன்று இரவு தரிசனம் முடித்து வர 11 மணி ஆகிவிட்டது. காலை 6.30 மணிக்கு எழுந்து கிளம்பி பேருந்து பிடித்து கோயில் அடைய 8.30 க்கு மேல் ஆகிவிட்டது. டோல்கேட்டில் நொச்சியம் வழி செல்லும் ஒவ்வொரு பேருந்திலும் துடையூர் போகுமா என்று கேட்க துறையூர் தானே போகும் போகும் என்று சொன்ன பல நடத்துனர்களிடம் போராடவேண்டி இருந்தது. துடையூர் விஷமங்களேஸ்வரர் கோயில் சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சோழர் கால சிவன் கோயில். சுந்தரசோழர், ராஜராஜன், ராஜேந்திரன் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. அப்பரின் அடைவு திருத்தண்டகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வைப்பு தலம். கொள்ளிடத்...

அருமணிகளும் அணியாரமும் 💎 ❤️

அருமணிகளும் அணியாரமும் தீவிர வாசிப்பும் பயணமும் தொடங்கியதில் இருந்து கொண்டிருக்கும் உறுதி வார இறுதி நாட்களை ஒருபோதும் ஒழுகிச்செல்ல விட கூடாது என்பது. திரிபுவனம் கம்பஹரேஸ்வரர் ஆலயம்  அதற்காகவே வெள்ளி இரவே கொஞ்சம் இழுத்து பிடித்து வேலை எல்லாவற்றையும் முடித்து விடுகிறேன். 5 நாட்களை சாமிக்கு விட்டு விட்டு இரண்டு நாட்கள் மட்டும் தான் நாம் எடுத்துகொள்கிறோம். பயண திட்டம் இல்லாத நாட்களில் கூட முரளி காப்பிக்காகவாவது சீக்கிரம் எழுந்துவிடுவேன். "இது ஒரு வினோத பிறவி வார நாள்ல தான் சீக்கிரம் எந்திரிப்பாங்க இது லீவு நாள்ல rest எடுக்காம சீக்கிரம் எந்திரிக்கும்" என்று அம்மா வைதுகொண்டிருப்பாள்.   5.30 மணி தாம்பரம் ரயிலை பிடிப்பதாக திட்டம். திருவானைக்கோவிலில் இருந்து சத்திரம் வரையில் ஆட்டோ, அதன் பின் பேருந்து, திருச்சி முதல் கும்பகோணம் ரயில், கும்பகோணத்தில் இருந்து திருவிசநல்லூர்(திருவிசலூர்) வரை சிற்றுந்து திருவிசநல்லூர் இருந்து கைகாட்டி வரை லிஃப்ட் அதன் பின் 1 கிலோமீட்டர் நடை என்று பயணம் செய்து திருவிசநல்லூர் சிவயோகநாதர் கோயிலுக்கு வந்து சேர்ந்தேன்.  இ ரவு பெய்த கன மழையால் எங்கும் ...

ஒரு குட்டி வாழ்க்கை ✨

ஒரு குட்டி வாழ்க்கை கன்னிமாரா நூலகம் கன்னிமாரா நூலகம் செல்லவும் ராஜாவின் simphony கச்சேரிக்குமாக சென்ற வெள்ளி இரவு நண்பர்களுடன் மெட்ராஸ் சென்றுவந்தோம். சென்னை குறித்த எனது முதல் நினைவென்பது AIPMT (All India Pre Medical Test)தேர்வுக்காக 2015ம் ஆண்டு அப்பாவுடன் அண்ணா நகர் கேந்திரிய வித்யாலயா வந்தது தான். இந்த தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றால் அகில இந்திய அளவில் மருத்துவக்கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் மருத்துவ இடம் கிடைக்கும் என்று செய்தித்தாள்களில் படித்து அதற்காக வந்திருந்தோம். அப்போது பலருக்கும் இருப்பதை போன்று ஒரு பிரமிப்புணர்வு தான் இருந்தது. பின்பு பல முறை மாமா வீட்டிற்கும் உணர்வினர் வீட்டிற்கும் கடந்த சில ஆண்டுகளாக புத்தக கண்காட்சிக்கும் என சென்னை பழக்கப்பட்ட நகரமாகிவிட்டது.  சென்னை எனக்கு எப்போதுமே தொன்மையின் நகரம். Robert Bruce Foot பல்லவரத்திற்கு அருகில் பழங்கற்காலத்தை சேர்ந்த கல் கருவிகளை கண்டுபிடித்தார். கற்காலத்திலிருந்து காலனியாதிக்க காலகட்டம் வரை மெட்ராஸ்ற்கு ஒரு அறுபடாத வரலாற்று தொடர்ச்சி இருக்கிறது. சுந்தரர் திருத்தொண்டத்தொகையில் மயிலாப்பூரின் வாயிலர் ந...