Skip to main content

Posts

Showing posts from April, 2026

ஜெ எனும் பிரஜாபதி ✨

இந்திய புராண மரபில் பிரஜாபதி என்பவன் தன்னில் இருந்து தன்னை போல பிரஜாபதிகளை உருவாக்குபவர். பெருந்தந்தை. காந்தி தன்னைப்போல பல காந்திகளை உருவாக்கியதால் அவர் பிரஜாபதி. ஜெ ஒரு பிரஜாபதி. புனைவெழுத்தாளர்கள், அபுனைவு எழுத்தாளர்கள், களசெயல்பாட்டார்களென நூற்றுகணக்கானோரை உருவாக்கியவர்.  இன்று ஆசான் ஜெயமோகனின் பிறந்தநாள். ஆசான் என்று சொல்வதில் ஜெ க்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். காந்தி இறுதி வரை தன்னை மகாத்மா என்று அழைப்பதை கண்டித்துக் கொண்டுதான் இருந்தார். 6 மாதத்திற்கு முன் நண்பன் ஒருவனுக்கு அறம் கதையை அனுப்பி ஜெ வை அறிமுகம் செய்தபோது இவரு சங்கி னு சொல்றாங்களே என்றான். ஒருவரி கூட அவர் எழுதியதை படித்ததில்லை. எத்தனை எளிய உயிர் என்று தான் தோன்றியது. இது போன்ற எண்ணற்ற எறும்புகளையும் ஈசல்களையும் பெருங்கருணையுடன் குனிந்து பார்க்கும் மலை சிகரம் என நின்றிருக்கும் ஒரு பெரும் கலைஞன், ஜெ. முழுமை அறிவு காணொளிகள் ஒன்றில் உங்கள் கொள்ளுபேரன் கொள்ளு பேத்தி காலத்தில் தமிழகம் நினைவில் வைத்திருக்கும் என்று சொல்லியிருப்பார். அதை கேட்டபோது பெரும் சிலிர்புணர்வை அடைந்தேன். இந்த கர்வம் ஒவ்வொரு நாளும் தவமென 40 ஆண்டு...