Skip to main content

Posts

Showing posts with the label kurugu

திருவாரூர் ஆழித்தேர் - குருகு கட்டுரை

குருகு 26வது இதழில் திருவாரூர் தேர் குறித்த எனது கட்டுரை பிரசுரமாகியுள்ளது.  திருவாரூர் ஆழித்தேர் தமிழகத்தின் நீண்ட திருவிழாக்களில் தலையாயது. வசந்த விழாவிற்கு முன்னும் பின்னுமாக 55 நாட்கள் நடைபெறும் நீண்ட பிரம்மோற்சவம். எழுத்து வடிவில் கிடைக்கும் ஆவணங்களாகவே தஞ்சை சரஸ்வதி மகால் நூலத்தில் உள்ள மோடி ஆவணங்களில் திருவாரூர் தேர் திருவிழா குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. தேவாசிரியன் மண்டப விதான ஓவியங்களிலும் திருவிழா ஆவணப் படுத்தப் பட்டுள்ளது.  நண்பர்களுடன் சென்று வந்த அனுபவக் குறிப்புகளும் திருவிழா பத்ததி குறித்தும் தேருக்கு முதல் நாள் புறப்பாடு குறித்தும் ஆவணப் படுத்த முயற்சித்துள்ளேன். இவற்றை இன்னும் நீண்ட பதிவாக ஒவ்வொருநாளும் நடைபெறும் நிகழ்வுகளை புகைப்படங்களுடன் தொகுக்கும் திட்டமும் உள்ளது. அரசன் என்ற தொல்படிமம் அதன் உட்சபட்ச சாதியத்தை எவ்வாறு  அடைகிறது என்று புரிந்துகொள்ள முயன்றிருக்கிறேன். கட்டுரையை படித்து செழுமை செய்ய உதவிய நண்பர் லால்குடி தினேஷ் மற்றும் புதுவை தாமரைக்கண்ணன் ஆகியோருக்கு நன்றியும் அன்பும்.  இந்த இதழில் பண்டைய இசைக்கருவிகளை ஆவணப் படுத்தும் சரவண ப...