ஆழித்தேரில் அமர்பவன் ஆரூர் அமர்ந்த அரசன். வெயில் படாத திருமேனி. ஒவ்வொரு புறப்பாடும் பேரரசனுக்கான உபசாரங்கள். ஆழித்தேர் நடந்த மூன்றாம் நாள் மயிலையில் அறுபத்துமூவர் புடைசூழ வரும் கபாலியை ஒரு சிறுவன் "கபாலி போய்ட்டானா இப்போ எங்க இருக்கான்" என்று கேட்டான். தென் திசை அமர்ந்த ஆலமர் செல்வனிலிருந்து ஊர்த்துவ தாண்டவம் ஆடுவோன் வரைக்கும் எத்தனை ரூபங்கள், எத்தனை தொன்மங்கள்.
Legends of Shiva with Amish என்ற Discovery நிறுவனத்தின் ஆவணப்படம் இந்தியா மற்றும் நேபாளின் சில சிவதொன்மங்களை விளக்கும் மூன்று பகுதி தொடர்.
முதல் பகுதி இமயத்தில் தொடங்கி கேதார்நாத், உத்தர்காண்டில் த்ரியுகிநாராயன், திரிபுராவின் Lost faces, காசியின் விஸ்வநாதர், மாமிசம், மது படையல் ஏற்கும் கால பைரவர், மணிகர்ணிகா காட் இன் சாதுக்கள் பகுதிகளை குறித்தது.
இரண்டாம் பகுதி நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் உள்ள பசுபதிநாதர், குறி இல் உள்ள Shamnas சமூகத்தினர், Gosainkund உஜ்ஜைனி மஹாகாலேஷ்வர், பெருஞ்சிவனிரவின் சில தொன்மங்கள், மத்திய பிரதேசத்தின் சௌராகர், எல்லோரா கைலாசநாதர் குடைவரை கோயில், மஹாராஷ்டிரத்தின் ஜேசூரியில் உள்ள கண்டோபா(மல்லுகான்) என்ற இஸ்லாமியர்கள் வணங்கும் சிவ வடிவம் ஆகியவற்றை குறித்தது.
மூன்றாம் பகுதி தென்னகத்தில் உள்ள சிவ வடிவங்கள். கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், தில்லை மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள French instituteல் ஆகம ஓலைச்சுவடிகளை இணையத்தில் பதிவேற்றும் குழுவை குறித்தும் பேசுகிறது. தில்லை குறித்த பகுதியில் எங்கள் ஆசிரியர் பேசியிருப்பதால் அதை முதலில் பார்த்தேன்.

மொத்த சிவ தொன்மங்களையும் ஒரு ஆவணப்படத்திற்குள் அடக்குவது கடினம். குறுக்குவெட்டாக சில புள்ளிகளை மட்டும் இட்டு செல்கிறது.
ஆவணப்பட சுட்டி Link
பிகு 1: ஆவணப்படத்தை மட்டும் பரிந்துரைக்கிறேன், Shiva triologyயை அல்ல.
பிகு 2: இது ஒரு premimum தொடர், எனது கணக்கை பயன்படுத்திக்கொள்ளவும்.
Comments
Post a Comment