Skip to main content

மரக்கட்டை மாமியார் முதலிய கதைகள் - லால்குடி தினேஷ்

மரக்கட்டை மாமியார் முதலிய கதைகள்



நண்பர் லால்குடி தினேஷ் எழுதிய ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்களின் "மரக்கடை மாமியார் முதலிய கதைகள்" நூலின் மதிப்புரை. 

தமிழில் செவ்வியல் இலக்கியம் எந்த அளவு உள்ளதோ அதே அளவிற்கு நாட்டார் இலக்கியமும் உள்ளது. சுவடிகளில் மறைந்து கிடந்த செவ்விலக்கியத்தை தேடிக் கண்டடைந்து பதிப்பிக்கப்பட்டு அதன் மறுமலர்ச்சி உருவான காலத்திற்கு சற்று பிந்தி நாட்டார் இலக்கியமும் அதிக அளவில் பதிப்பிக்க படுகிறது.


அதில் முதலில் நாட்டார் மரபில் வாய்மொழியாக பல வடிவங்களில் உலவும் கதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாட்டார் ஆய்வுகள் என நீளும் மரபில் இப்போது இருக்கும் பெரும் ஆளுமை அ.கா.பெருமாள் அவர்கள். அவர் தொகுத்த 29 கதைகள் அடங்கிய நூல் இது. இதை பரிசல் புத்தக நிலையம் 2024-ம் ஆண்டு வெளியிட்டுள்ளனர். இந்த தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகளை அ.கா.பெருமாள் அவர்களுக்கு தோல் பாவை கூத்து கலைஞர்கள் சுப்பையா ராவ் மற்றும் பரமசிவராவ் கூறியுள்ளனர்.


அ.கா.பெருமாள் இந்த இரு கலைஞர்களுடனும் நெருங்கி பழகி அவர்களோடு கூத்து நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்றுள்ளார். அப்போது அவர்கள் நேரிடையாக பல கதைகளை அதன் பல்வேறு வடிவங்களை அ.கா.பெருமாளுக்கு கூறியுள்ளனர். மேலும் நாட்டார் கதை சேகரிப்பாளர் கழனி ஊரான், தேவதாசியான சின்னகுட்டி,  தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வா.அய்.சுப்பிரமணியம் ஆகியோர் பல கதைகளை அ.கா.பெருமாள் அவர்களுக்கு கூறியுள்ளனர். அது மட்டுமின்றி அவர் கீழ்காணும் நூல்களில் இருந்தும் பல கதைகளை படித்துள்ளார்.


  1. 1912-ல் திருநெல்வேலி லோகாம்பாள் பதிப்பகம் வெளியிட்ட “கட்டுவாக்கிய கதைகள்”.

  2. ரத்தின நாயக்கர் சன்ஸ் வெளியிட்ட கட்டுவாக்கிய கதை (1930).

  3. ரத்தின நாயக்கர் சன்ஸ் வெளியிட்ட வேடிக்கை கதைகள் (1939).

  4. ஸ்ரீ மகள் கம்பெனி வெளியிட்ட பழங்கதைகள்(1962) தொகுப்பு.

  5. திருச்சி அஞ்சனா பிரஸ் வெளியிட்ட கதைகதையாம் காரணமாம் (1936) தொகுப்பு.

 

தோல் பாவை கூத்தில் ராமாயணம், மகாபாரதம் மற்றும் இதர புராணங்கள் தான் பெரும்பாலும் நடத்தப்படும். அதில் இத்தகைய கதைகள் வருவதற்கு அதிக இடமில்லை எனவே கூத்து இடைவெளியில் உச்சிக்குடும்பன் மற்றும் உளுவத்தலையன் என்ற நகைச்சுவை கதாபாத்திரங்கள் தோன்றி இத்தகைய வேடிக்கை கதைகளை கூறும்படி அமைப்பர். இந்த பழக்கம் தோல் பாவை கூத்தில் மட்டுமல்ல கரகாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைகளிலும் இத்தகைய நகைச்சுவை கதைகளை இடையிடையே கூறுவர். இந்த கதைகளின் பேசுபொருளாக இருப்பவை மறதி, மந்த புத்தி, மனிதர்களின் அறியாமை, பொறாமை, கேலி, பிடிவாதம், கணவனை கொடுமை படுத்தும் மனைவி, சோரம் போகும் மனைவி என நமது அன்றாட வாழ்க்கை சுழற்சியில் நாம் காணும் கருக்களே உள்ளன. பல கதைகள் தேர்ந்த கதைச் சொல்லியால் தகுந்த திருப்பங்களுடன் அமைந்தவை போலும் பல கதைகள் எந்த திருப்பமுமின்றி நேரிடையாகவும் அமைந்துள்ளது.‌மேலும் இக்கதைகள் சொல்லப்படும் சூழல் மற்றும் சொல்பவரின் கற்பனை சார்ந்து புதுப் புது வடிவங்கள் எடுக்கின்றன.  ஒரே கதை அக்பர்-பீர்பால் கதையாகவும் தெனாலி ராமன் கதைகயாகவும் வருகிறது. சில கதைகள் மகாபாரதத்தில் கூட இடம்பெற்றுள்ளது.  அவை செவ்வியலிலிருந்து நாட்டார் இலக்கியத்திற்கு சென்றதா அல்லது நாட்டார் கதையில் இருந்து செவ்வியல் கதையாக வந்ததா என்று தெரியவில்லை.

 

இந்த தொகுப்பின் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு கதையையும் எவ்வாறு அ.க.பெருமாள் முதலில் கேள்விப்பட்டார் என்ற சம்பவத்தை துல்லியமாக குறிப்பிடுகிறார். அது படிக்க மிக சுவாரஸ்யமாக உள்ளது. உதாரணமாக “நல்லா தெரியுது” என்றோரு கதை இது சற்று பாலியல் தன்மையான கதை, இக்கதையை தோல் பாவை கலைஞர் பரமசிவராவ் ஒரு ஊரில் சொல்கிறார் அடுத்த நாள் அதே கதையை வைத்து ஊர் பையன்கள் பரமசிவராவின் அக்கா மகளை கேலி செய்கிறார்கள். அன்றோடு அவர் இந்த கதை சொல்வதை நிறுத்திக் கொண்டார்.


இன்னோரு கதை “வாய் கொழுப்பு சீலையில் வடிகிறது” இந்த கதை வாய் கொழுப்பால் ஒருவருக்கு நேரும் விபரீதம் பற்றியது. ஒருமுறை பரமசிவராவ் திருக்குறுங்குடிக்கு அருகில் உள்ள கிராமத்தில் தலித் பிரமூகர் ஒருவரின் ஏற்பாட்டில் தோல் பாவை கூத்து நடத்துகிறார் அப்போது கூத்துக்கு இடையில் பரமசிவராவ் தனக்கு பணம் கெடுத்து உதவிய அந்த தலித் பிரமூகரை “கொடை கொடுப்பதில் இவர் வானத்து தேவர்களுக்கு சமமானவர்” என்று புகழ்ந்து விடுகிறார். அதை கேட்ட அந்த கிராமத்து நிலவுடைமை சமுகத்தை சேர்ந்த ஒருவர் சட்டென கூத்து திரையை வேல் கம்பால் கிழித்து கூத்தே நடக்க விடாமல் செய்து விடுகிறார்.


நாம் திரைப்படங்களில் சாதரணமாக கேட்கும் ஒரு வார்த்தை “டொமர்” என்பது, பிறரை திட்ட பயன்படுத்தபடும் இவ்வார்த்தை வசைச் சொல் அல்ல தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட கழை கூத்தாடும் சமுகத்தின் பெயர். எளிய மக்களின் சமுகப்பெயரை இத்தனை நாள் நமக்கே தெரியாமல் ஒரு கேலியான வசைச் சொல்லாக பயன்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு ஒவ்வொரு கதைக்கும் ஆசிரியர் சொல்லும் சம்பவங்கள் தான் இந்த தொகுப்பை பிற நாட்டார் கதை தொகுப்பில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. “பொண்டாட்டி வருகிறாள் துடைப்பை கட்டையுடன்” என்றொரு கதை இத்தொகுப்பில் உள்ளது அதில் கணவனை தினமும் அவன் மனைவி துடைப்பை கட்டையால் அடிக்கிறாள், கணவன் ஊருக்கு போகும் போது அவன் நட்டு வளர்த்த மரத்தை தன் தம்பியாக கருதி அதை அடிக்கும்படி கூறிவிட்டு செல்கிறான்.


இதில் வரும் அதே கருத்து “நற்றினையின் 172 வது பாடலில்” தலைவி ஒருத்தி தான் நட்டு வளர்த்த மரத்தை தன் தங்கை என்றும், எனவே இந்த மரத்தடியில் நாம் கூட வேண்டாம் என்று தலைவனிடம் கூறுகிறாள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்ட சங்க பாடலில் வரும் உணர்வுநிலை இப்போது பாடப்படும் நாட்டார் பாடலிலும் தொடர்ந்து வருவது தமிழ் சமுகத்தின் ஈராயிரம் ஆண்டு பண்பாட்டுத் தொடர்ச்சியை காட்டுகிறது.

 

செவ்வியல் கதைகள் நம் வாழ்வின் உச்ச தருணங்களுக்கானது என்றால் நாட்டார் கதைகள் நம் வாழ்வின் அன்றாடத்திற்கானது. நம்மை சுற்றி நடக்கும் அபத்தங்களை வேடிக்கைகளை ஒரு கதை மூலம் எளிமையாக கடந்து செல்ல உதவுபவை இவை.

லால்குடி தினேஷ்,
lalgudidinesh@gmail.com


அ கா பெருமாள் தமிழ் விக்கி - விக்கி சுட்டி


Comments

Popular posts from this blog

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...