Skip to main content

Posts

Showing posts from November, 2021

குமரித் துறைவி

  சித்திரையோடு ஓட்டிப் பிறந்தது மதுரைக் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தொடர்ந்து நடை பெற்றுவரும் இந்த பெரு நிகழ்வின் தொடக்கத்தை விவரிக்கும் நூல். தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்திருக்க வேண்டிய, இன்னும் அறிந்திராத வரலாற்றை ஜெ அவரது இயல்பான மொழி நடையிலேயே விவரித்திருக்கிறார். டில்லி சுல்தானியர்கள் படையெடுப்பின் போது தமிழகத்தின் அனேக கோயில்களின் பொன்னும் மணியும் இறைவர் இறைவி விக்கிரகங்களும் போர்படையிடம் சிக்காதிருக்க மக்கள் அவற்றை வெகு தூரம் உள்ள பிற இடங்களில் மறைத்து அடை காத்து வந்தனர் . திருவரங்க பெருமாள் உற்சவர் சிலையும் இதைப் போல தெற்கே கொண்டு சென்ற வரலாற்று கதை உண்டு. அவ்வாறே மாமதுரை நகரின் அரசி அன்னை மீனாட்சி சிலையையும், சொக்கனின் சிலை பிரம்மாண்ட ஸ்வரூபம் ஆததால் ஒரு சிறு கல்லில் அவரை ஆவாகனம் செய்து அந்த கல்லையும் ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா  கோயிலில் மறைத்து வைத்து பூஜித்து வந்தனர், படைகள் முற்றிலும் வடக்கே திரும்பி கூடடைந்தது உறுதியான பின், பாண்டியர் ஆட்சி காலம் தொடங்கியதும் மக்கள் மீண்டும்  அம்மையின் சிலையினை வ