சித்திரையோடு ஓட்டிப் பிறந்தது மதுரைக் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தொடர்ந்து நடை பெற்றுவரும் இந்த பெரு நிகழ்வின் தொடக்கத்தை விவரிக்கும் நூல்.
தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்திருக்க வேண்டிய, இன்னும் அறிந்திராத வரலாற்றை ஜெ அவரது இயல்பான மொழி நடையிலேயே விவரித்திருக்கிறார். டில்லி சுல்தானியர்கள் படையெடுப்பின் போது தமிழகத்தின் அனேக கோயில்களின் பொன்னும் மணியும் இறைவர் இறைவி விக்கிரகங்களும் போர்படையிடம் சிக்காதிருக்க மக்கள் அவற்றை வெகு தூரம் உள்ள பிற இடங்களில் மறைத்து அடை காத்து வந்தனர் .
திருவரங்க பெருமாள் உற்சவர் சிலையும் இதைப் போல தெற்கே கொண்டு சென்ற வரலாற்று கதை உண்டு. அவ்வாறே மாமதுரை நகரின் அரசி அன்னை மீனாட்சி சிலையையும், சொக்கனின் சிலை பிரம்மாண்ட ஸ்வரூபம் ஆததால் ஒரு சிறு கல்லில் அவரை ஆவாகனம் செய்து அந்த கல்லையும் ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா கோயிலில் மறைத்து வைத்து பூஜித்து வந்தனர்,
படைகள் முற்றிலும் வடக்கே திரும்பி கூடடைந்தது உறுதியான பின், பாண்டியர் ஆட்சி காலம் தொடங்கியதும் மக்கள் மீண்டும் அம்மையின் சிலையினை வேண்டி அரசற்கு தூது விடுகின்றனர்.
அம்மையின் காலடி பட்ட க்ஷணத்திலுருந்து நாடும் மக்களும் செழித்திருக்க கண்ட மன்னன் அம்மையை அவள் சொந்த மண்ணிற்கே திருப்பி அனுப்புவதில் தயக்கம் காட்டுகிறார். அம்மை சென்றாள் அவளோடு கூட மண்ணின் சௌபாக்யமும் மண்ணை விட்டு பிரிந்து போகும் என்ற ஐயத்தோடு உள்ள அரசர்க்கு நம்பூதிரி மார் ஓர் உபாயத்தை உரைக்கிறார் .
ஒரு பெண் எப்போது வீட்டை விட்டு சென்றாலும் அது அமங்கலம் தான், ஒரு முறையைத் தவிர. மனம் முடித்து தன் கணவனின் இல்லத்திற்கு செல்பவள் தன் பிறந்த வீட்டை லட்சுமி கடாக்ஷத்தோடு விட்டுச் செல்வாள். எனவே, சொக்கநாதருக்கு மனம் முடித்து அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறார். அரசனும் அதற்க்கு ஆமோதிக்கவே. நகரே விழாக்கோலம் பூண்டு மனா நாளிற்கு தயார் ஆகிறது .
அகிலத்தை ஆளும் அம்மைக்கும் அப்பனுக்கும் திருமணம் என்றால் கேட்கவா வேண்டும். ஒரு தகப்பனின் ஸ்தானத்தில் இருந்து அம்மையை தன மடியில் ஏந்தி சொக்கருக்கு மனம் முடித்து வைக்கிறார்.
ஜெயமோகன் கதைகளில் வெளிப்படும் உணர்ச்சிக் குவியல்கள் அனைத்தையும் துறந்து முற்று முழுதாக நேர்மறை செய்திகளே நாவல் முழுதும் காணப் படுகின்றன . ஒரு வளற்று நிகழ்வில் புனைவு என்னும் தேன் சரியான விகிதத்தில் சேர்த்து விருந்து படைத்திருக்கிறார் ஆசிரியர்.
ஜெயமோகன் இணையதளத்தில் மின்னூல் ஆகவும் படிக்க முடியும் ஆறு அத்தியாயங்களாக வெளி வந்துள்ளது .
https://www.jeyamohan.in/145303/
Comments
Post a Comment