விஷ்ணுபுரம் விருது விழா பங்கேற்பனுபவம் வருடம் தோறும் அங்கீகாரம் கிடைக்கப் பெறாத இலக்கிய ஆளுமைகளுக்கு சிறப்பு செய்யும் விதமாக நடைபெறும் விஷ்ணுபுரம் விருது விழா இவ்வாண்டு டிசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் கோவையில் நடைபெற்றது. துவக்க நிலை இலக்கிய வாசகனாக முதல் முறை இவ்விழாவில் பங்கேற்ற அனுபவத்தை இங்கே பதிவு சேய்கிறேன். இதுவரை படித்த இன்னும் படிக்க விரும்புகிற அத்தனை ஆளுமைகளையும் சந்தித்து, உரையாடி, விவாதித்து, எழுத்தாளனை அறிந்துகொள்ளும் முயற்சியில் இன்னும் ஓர் அடி முன்வைக்க உதவும் பரந்துபட்ட வெளி தான் இவ்வகையான இலக்கிய கூட்டங்கள். அவ்வகையில் முதல் நாள் முழுவதும் எழுத்தாளர் வாசகர் சந்திப்புகள் நடைபெற்றன. நேரடியாக வாசகர்கள் தங்கள் வினாக்களை எழுத்தாளர்களிடம் கேட்கவும் அனுபவத்தை ஒரு துளி சுவைத்துப் பார்க்கவும் வழிவகை செய்தது. பொதுவாக இலக்கிய விழாக்களுக்கு சென்றால் அங்கு நிறைய புதிய நண்பர்களை கண்டடைவோம். ஆனால் நான் அரங்கிற்கு செல்லும் பேருந்திலேயே ஒரு புதிய நண்பரை கண்டு கதைத்துக் கொண்டு சென்றோம். காலை விழா அரங்கில் நுழைந்த உடனேயே முதலில் சந்