ஒரு துளி இலக்கியம் வாசிப்பு நேரம் - 4 நிமிடங்கள் ஒவ்வொரு புலரியும் புதிய தன்னளவில் முழு வாழ்க்கை. நாளின் முதல் ஒரு மணி நேரம் தான் அந்நாளை முழுமையாக எவ்வாறு கடக்கப் போகிறோம் என்பதை தீர்மானிக்கும் என்பர். முதல் ஒரு மணி நேரத்தை ஆக்கப் பூர்வமாக நேர்மறையான எண்ணங்களை கொண்டு நிரப்பிடுவது இன்றியமையாத ஒன்று. நம்மில் பெரும்பாலானோர் அந்த முதல் ஒரு மணி நேரத்தை பெரும்பாலும் சமூக வலைதளத்தில் கழிக்கின்றோம். பற்குச்சியையும், செல்பசியையும் ஒரு சேர கையில் எடுக்கின்றோம். சமூக விலங்கான மனிதனுக்கும் உலகத்தோடு ஒன்றி இருக்க சமூக வலைத்தளங்கள் பெரும் பங்காற்று கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் நாளில் முதல் வேலையான முகம் காட்ட தயங்கும் கோழையோடு சண்டையிடுதல் இருபத்தி நான்கு மணி நேரத்தை தீயிட்டு கொழுத்துவதற்கு சமம். சமூக வலைத்தளங்கள் வசை தலங்களாக பெருகி வருகின்றன. (வன்மமாருகளால் நிரம்பி வழிகின்றன). அவ்வாறு தொடங்கும் நாள் ஒருவகையான இறுக்கத்தை கொடுத்துவிடும். ...