ஒரு துளி இலக்கியம்
ஒவ்வொரு புலரியும் புதிய தன்னளவில் முழு வாழ்க்கை. நாளின் முதல் ஒரு மணி நேரம் தான் அந்நாளை முழுமையாக எவ்வாறு கடக்கப் போகிறோம் என்பதை தீர்மானிக்கும் என்பர். முதல் ஒரு மணி நேரத்தை ஆக்கப் பூர்வமாக நேர்மறையான எண்ணங்களை கொண்டு நிரப்பிடுவது இன்றியமையாத ஒன்று.
நம்மில் பெரும்பாலானோர் அந்த முதல் ஒரு மணி நேரத்தை பெரும்பாலும் சமூக வலைதளத்தில் கழிக்கின்றோம். பற்குச்சியையும், செல்பசியையும் ஒரு சேர கையில் எடுக்கின்றோம். சமூக விலங்கான மனிதனுக்கும் உலகத்தோடு ஒன்றி இருக்க சமூக வலைத்தளங்கள் பெரும் பங்காற்று கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் நாளில் முதல் வேலையான முகம் காட்ட தயங்கும் கோழையோடு சண்டையிடுதல் இருபத்தி நான்கு மணி நேரத்தை தீயிட்டு கொழுத்துவதற்கு சமம்.
சமூக வலைத்தளங்கள் வசை தலங்களாக பெருகி வருகின்றன. (வன்மமாருகளால் நிரம்பி வழிகின்றன). அவ்வாறு தொடங்கும் நாள் ஒருவகையான இறுக்கத்தை கொடுத்துவிடும்.
அதற்கு மாற்றாக ஒரு துளி இலக்கியத்தை புசிக்க அழைப்பதே இப்பதிவு. தமிழ் இலக்கியம் வாய் மொழிகளாக, பாறை ஓவியங்களாக, கல்வெட்டுகளாக , ஓலைகளாக, புத்தகங்களாக பல வடிவங்களை கடந்து வந்துள்ளது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் வடிவமான இணையத்தையும் ஏற்றுக் கொள்ள தொடங்கியுள்ளது.
எந்த ஒரு இலக்கிய படைப்பும், புத்தகமோ கவிதையோ சிறுகதையோ நம் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடுமா என்றல் இல்லை. ஒரு சிறிய மாற்றத்தை தான் கொடுக்கும். வெய்யோன் அளவுக்கல்லாது சிறிய தீபத்தின் வெளிச்சத்தை தான் பாய்ச்சும். அவ்வெளிச்சம் மனிதத்தை இயற்கையை அதன் மேன்மைகளை ஒரு படி அதிகம் போற்ற வழி கோலும்.
நான் அறிந்த அன்றாடம் வாசிக்கின்ற இணைய பக்கங்களை பகிர விழைகிறேன்.
- ஜெயமோகன் அவர்களின் இணையதளம் அன்றாடம் வாசகர் கடிதங்களும் அவற்றிற்கான ஆசிரியர் பதில்களும் ஒவ்வொரு நாளும் பகிரப்படும்
- S ராமகிருஷ்ணன் அவர்களின் இணையதளம். உலக இலக்கிய அறிமுகம், சிறந்த படைப்புகளின் விமர்சனம் அருளும் தளம்.
- அ முத்துலிங்கம் ஈழத்து ஐயா முத்துலிங்கம் அவர்களின் இணையதளம்
- கனலி பல்வேறு படைப்பாளர்களின் படைப்புகள் பகிர படும் தளம்.
- அருஞ்சொல் எழுத்தாளர் சமஸ் அவர்களின் மின்னிதழ்
- தமிழினி ஆசிரியர் கோகுல் பிரசாத் அவர்களின் மின்னிதழ், சமீப காலங்களில் அதிக கவனத்தை ஈர்த்துவரும் தளம்.
👏
ReplyDelete🔥🔥🔥
ReplyDelete