Skip to main content

ஒரு துளி இலக்கியம்

ஒரு துளி இலக்கியம்

வாசிப்பு நேரம் - 4 நிமிடங்கள்  

        ஒவ்வொரு புலரியும் புதிய தன்னளவில் முழு வாழ்க்கை. நாளின் முதல் ஒரு மணி நேரம் தான் அந்நாளை முழுமையாக எவ்வாறு கடக்கப் போகிறோம் என்பதை தீர்மானிக்கும் என்பர். முதல் ஒரு மணி நேரத்தை ஆக்கப் பூர்வமாக நேர்மறையான எண்ணங்களை கொண்டு நிரப்பிடுவது இன்றியமையாத ஒன்று. 

        நம்மில் பெரும்பாலானோர் அந்த முதல் ஒரு மணி நேரத்தை பெரும்பாலும் சமூக வலைதளத்தில் கழிக்கின்றோம். பற்குச்சியையும், செல்பசியையும் ஒரு சேர கையில் எடுக்கின்றோம். சமூக விலங்கான மனிதனுக்கும் உலகத்தோடு ஒன்றி இருக்க சமூக வலைத்தளங்கள் பெரும் பங்காற்று கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் நாளில் முதல் வேலையான முகம் காட்ட தயங்கும் கோழையோடு சண்டையிடுதல் இருபத்தி நான்கு மணி நேரத்தை தீயிட்டு கொழுத்துவதற்கு சமம்.

        சமூக வலைத்தளங்கள் வசை தலங்களாக பெருகி வருகின்றன. (வன்மமாருகளால் நிரம்பி வழிகின்றன). அவ்வாறு தொடங்கும் நாள் ஒருவகையான இறுக்கத்தை கொடுத்துவிடும். 

        அதற்கு மாற்றாக ஒரு துளி இலக்கியத்தை புசிக்க அழைப்பதே இப்பதிவு. தமிழ் இலக்கியம் வாய் மொழிகளாக, பாறை ஓவியங்களாக, கல்வெட்டுகளாக , ஓலைகளாக, புத்தகங்களாக பல வடிவங்களை கடந்து வந்துள்ளது. இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் வடிவமான இணையத்தையும் ஏற்றுக் கொள்ள தொடங்கியுள்ளது. 

        எந்த ஒரு இலக்கிய படைப்பும், புத்தகமோ கவிதையோ சிறுகதையோ நம் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடுமா என்றல் இல்லை. ஒரு சிறிய மாற்றத்தை தான் கொடுக்கும். வெய்யோன் அளவுக்கல்லாது சிறிய தீபத்தின் வெளிச்சத்தை தான் பாய்ச்சும். அவ்வெளிச்சம் மனிதத்தை இயற்கையை அதன் மேன்மைகளை ஒரு படி அதிகம் போற்ற வழி கோலும்.

        நான் அறிந்த அன்றாடம் வாசிக்கின்ற இணைய பக்கங்களை பகிர விழைகிறேன்.

  • ஜெயமோகன் அவர்களின் இணையதளம் அன்றாடம் வாசகர் கடிதங்களும் அவற்றிற்கான ஆசிரியர் பதில்களும் ஒவ்வொரு நாளும் பகிரப்படும்
  • S ராமகிருஷ்ணன் அவர்களின் இணையதளம். உலக இலக்கிய அறிமுகம், சிறந்த படைப்புகளின் விமர்சனம் அருளும் தளம்.
  •  அ முத்துலிங்கம் ஈழத்து ஐயா முத்துலிங்கம் அவர்களின் இணையதளம் 
  • கனலி பல்வேறு படைப்பாளர்களின் படைப்புகள் பகிர படும் தளம்.
  • அருஞ்சொல் எழுத்தாளர்  சமஸ் அவர்களின் மின்னிதழ் 
  • தமிழினி ஆசிரியர் கோகுல் பிரசாத் அவர்களின் மின்னிதழ், சமீப காலங்களில் அதிக கவனத்தை ஈர்த்துவரும் தளம்.
                                                                                                                    - மனோ 

Comments

Post a Comment

Popular posts from this blog

செய்நன்றி ❤️✨

எனது கல்லூரி துறைத்தலைவர் இப்போது Pollachi Institute of Engineering and Technology கல்வி ஆலோசகராக பணியாற்றுகிறார். அவர் அழைப்பின் பேரில் Pollachi Institute of Engineering and Technology என்ற கல்லூரியில் சென்ற திங்கள் அன்று முதலாம் ஆண்டு, மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களிடம் உரையாற்றினேன். இதை சொன்னபோது சில நண்பர்கள் ஆர்வத்துடன் என்ன பேசப்போகிறேன் என்று கேட்டனர், 2 நாட்கள் உழைத்து தயார் செய்த உரையென்பதாலும் பொதுவான உரையென்பதாலும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் ஆற்றிய உரையை இங்கு எழுதுகிறேன். (இது உரையின் எழுத்து வடிவம், சென்ற வாரம் கேட்டுக்கொண்டார்கள் என்பதை, “போன வாரம் கேட்டாங்க” என்று வாசிக்கவும்)  Dear Boys and girls சென்ற வாரம் mam அழைத்து முதலாம் ஆண்டு மாணவர்களிடம் பேசவேண்டும் என்று சொன்னபோது நான் கேட்ட முதல் கேள்வி ஆங்கிலத்திலா தமிழிலா என்று, பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள் அதனால் தமிழ் ஆங்கிலம் கலந்து பேசும்படி சொன்னார். முழுதும் தமிழில் பேசினாலும் செயற்கையாக இருக்கும், முழுதும் ஆங்கிலத்தில் பேசினாலும் பின் தொடர்வதில் சிக்கல் இருக்கும். மறுநாள் தான் ஒப்புக்கொண்ட...

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...