நீரதிகாரம் ஆனந்த விகடனில் வாரம் தோறும் எழுத்தாளர் அ வெண்ணிலா அவர்கள் நீரதிகாரம் என்னும் தொடரை எழுதிவருகிறார். முல்லை பெரியாறு அணையின் நெகிழ்ச்சியான சரித்திரத்தை விவரிக்கும் தொடராக வெளிவருகிறது. தாது வருடப் பஞ்சத்தில் (1870 களில்) தேசம் முழுதும் 2 கோடி மக்கள் செத்து மடிந்தனர். மெட்ராஸ் ப்ரெசிடென்ஸியில் மட்டும் லட்சக் கணக்கில் மனிதப் பிணங்கள் குவித்துவைக்கப் பட்டன.குலக்கொடி வையை முழுதும் பொய்த்துப் பொய் தென் மாவட்ட மக்கள் மலையகத் தீவுகளுக்கு கப்பலில் அடிமைகளாகவும் பஞ்சம் பிழைக்கவும் ஆயிரக் கணக்கில் தினந்தோறும் வெளியேறிக் கொண்டிருந்தனர். பஞ்சத்தில் இருந்து எஞ்சிய மக்களை காக்கும் பொருட்டு மேற்காக ஓடும் பேரியாற்றை மதுரைக்கு திருப்ப அணை கட்டப் படுகிறது. ஒரு அணைக் கட்டுமானம் அதுவும் நூறாண்டுகளாக கிடப்பில் இருக்கும் திட்டம் தொடங்குவதற்கு முன்னும், தொடங்கியபிறகும் அதனை சார்ந்துள்ள அத்தனை ஜீவராசிகளையும் எவ்வகையில் தொட்டு செல்கிறது ...