Skip to main content

Posts

Showing posts from August, 2022

ஆதி வெள்ளறை

            மூன்றாவது முறையாக அலாரத்தை அனைத்தபோது மணி 6 அடித்திருந்தது, இங்க் பில்லெரில் ஒவ்வொரு துளியாக உரிவது போல் நீளம் நீங்கி வானம் வெளுத்துக் கொண்டிருந்தது. சட்டென்று கிளம்பி பேருந்து நிறுத்தத்தில் ஒரு டீ குடித்துவிட்டு பேருந்துக்காக காத்திருந்தபோது  துறையூர் பேருந்து வந்ததும் 2 மூட்டைகளை ஏற்றுக்கொள்ள சொல்லி நடத்துனரிடம் பாட்டி சண்டை பிடித்துக் கொண்டிருந்தார். சுவாரசியமா நடந்து கொண்டிருந்த சண்டையை இடைமறித்து திருவெள்ளறை கோவில் போகுமா என்று கேட்டபோது "போகும் பின்னாடி ஏறுப்பா" என்றவர் கடைசி படியில் கால்வைத்தபோது என்ன நினைத்தாரோ தெரியவில்லை "கோவில் போகாது வளைவுல இருந்து நடந்து போங்க" என்றார் சரி என்று சொல்லி, ஏறி கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டேன் நல்லவேளையாக பேருந்தில் ஒலிபெருக்கி ஒன்றுமில்லை. காலை அமைதியை குலைக்காமல் ஊர்ந்து சென்றது.           இருபுறமும் கரைதொட்டு ஓடும் கொள்ளிடத்தை பார்த்தபோது வாழ்நாள் முழுக்க வறுமையில் வாடிய ஒரு மனிதன் ஊருக்கெல்லாம் செல்வம் கொழித்து பெருகுவது போன்று கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது. ஓட்டுநரும் வேடிக்கை பார்த்தபடியே பொறுமையாக மி