நட்சத்திரவாசிகள் - 2021ம் ஆண்டிற்கான சாகித்ய யுவ புரஸ்கார் விருதுபெற்ற நாவல், ஆசிரியர் கார்த்திக் பாலசுப்ரமணியன்.காலச்சுவடு பதிப்பக வெளியீடு, நூலின் வாசிப்பனுபவம். இத்தலத்தில் நான் பகிரும் அனைத்து நூல் குறித்த பதிவுகளுக்கும் நூலிலிருந்து நான் கண்ட அனுபவப் பகிர்வு மட்டுமே. விமர்சனம் எழுதும் அளவிற்கு என் வாசிப்பு தளம் விரிவடையவில்லை. 2019ம் ஆண்டில் பொறியியல் படித்து முடித்தேன். இதுவரை மூன்று மென்பொருள் நிறுவனங்களில் பணி செய்திருக்கிறேன், செய்துகொண்டிருக்கிறேன். கார்த்திக் எந்த அலுவலகத்திலிருந்து என்னை பின் தொடர்ந்து வருகிறார் என்று எனக்கும் ஐயம் உள்ளது. தோராயமாக நான் கடந்து வந்த எந்த ஒரு நண்பனை குறித்து பதிவெழுதினாலும் அது நித்திலனையோ, சாஜுவையோ, வேணுவையோ, சத்தியையோ, அர்ச்சனாவையோ, பனிமலரையோ அல்லது ராமசுப்புவையோ குறித்த பதிவாகவோ இருக்கக் கூடும், கண்ணடிக்கு அந்த பக்கம் இருக்கும் மனிதர்களின் முகங்கள் சாயம் பூசப்பட்ட கண்ணாடிகளால் தடுத்துவைக்கப் பட்டிருப்பதைப்போல அவரது வாழ்கைகளையும் வெளி உலகத்திலிருந்து மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது. இன் நாவல் அந்த அத்தனை மனிதர்களின் வா...