காலம் உன்னை உயிரோடு வைத்திருக்கிறதென்றால் உனக்காக ஏதோ ஓர் அதிசயத்தை ஒளித்துவைத்திருக்கும். 22-12-2022, வியாழன், மாலை 5 மணி வெறுமனே நடைபயிற்சி சென்று கொண்டிருக்கும் யுவனின்(இளைஞனின்) எதிரில் யுவன் சந்திரசேகர் என்ற ஆதர்ச எழுத்தாளர் எதிர்கொண்டழைத்தால் எப்படியிருக்கும். இரண்டுமணி நேரமளவிற்கு ஜே கிருஷ்ணமூர்த்தியிலிருந்து, தாய் மார்க்ஸிம் கார்க்கி வரை அநேக புள்ளிகள் தொட்டுச் சென்றார். master class என்னும் பதம் இப்போது பிரபலமாகி வருகிறது, மணி ரத்னம் அவர்கள் சினிமா கற்று தருவதுபோல், மெஸ்ஸி கால்பந்து ஆட கற்றுத்தருவதுபோல், மாஸ்டர்கள் தங்கள் துறை பற்றி கத்துக் குட்டிகளுக்கு கற்றுத் தருவது. அப்படியான ஒரு சந்திப்பு இன்று மாலை நிகழ்ந்தது. நன்றி - தமிழ் விக்கி இரண்டாம் சுற்றின் போது தூறிய தூறல்கள் நாங்கள் பேசியதை ஒட்டுக் கேட்டிருக்கக் கூடும். தான் எழுதிய அற்புதமான வரிகள் சிலவற்றை தான் தான் எழுதினோமா என்று என்னக்கூடுமென்றும் பின்னொரு நாள் அது தன்னை போன்ற ஒரு படைப்பாளன் முன்பே கண்டறிந்த ஒரு உச்சம், அது இருவருக்குமானது அல்ல. இப் பிரபஞ்சத்திற்கானது என்றார் . நிழல் பிதுங்கி வழிந்த என்ற வர...