நேற்றும் இன்றும் பெங்களூர் இலக்கிய விழா நடைபெறுகிறது. "இரண்டுவேளை உணவை இந்த சமூகம் எனக்கு கொடுத்திருக்குமாயின் இன்னும் பல நல்ல கதைகளை எழுதியிருப்பேன்" என்று சொன்ன பிரபஞ்சன் வாழ்ந்த தேசத்தில் ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஒரு இலக்கிய விழா. பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள எந்த ஒரு கவிஞனுக்கோ படைப்பாளனுக்கோ இங்கு இடமில்லை. நன்கு குளிரூட்டப்பட்ட அறையில் புத்தக விற்பனை அரங்குகள், மூன்று இலக்கத்திற்கு குறைவான எந்த ஒரு பதார்த்தமும் கிடைக்காத உணவு அரங்குகள், நிரம்பி வழியும் வெள்ளை பலகையிட்ட மகிழுந்து நிறுத்தங்கள் என மேல்தட்டு மக்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இலக்கிய கூட்டமாக அமைந்தது.
மதியம் இரண்டு மணிக்கு VVS லக்ஷ்மன் பங்கேற்ற ஒரு அரங்கில் அமர்ந்து அவரது வாழ்க்கை குறிப்புகளாக 281 and beyond என்ற புத்தகத்தை குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது(இதற்கும் இலக்கியத்திற்கும் என்ன சம்மந்தம் என்று அடியேனும் அறியேன் !).
பின் உவே சாமிநாதய்யர் அவர்களின் கட்டுரைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள புத்தகத்தை குறித்த கலந்துரையாடல் அரங்கு. பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் நூலாசிரியர் பிரதீப் பங்குபெற்றனர். உரையாடலின் நடுவில் சில தமிழ் சொலவடைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பெற்றபோது Wow is it என்று வேற்று மொழி பேசுபவர்களின் சம்பாஷணைகள் கூசச் செய்தன. இவ்வகையேனும் உவேசா உலக அரங்கிற்கு செல்கிறார் என்றவகையில் மகிழ்ச்சி.
மாலை வாலாற்றாசிரியர் ராமச்சந்திர குகா அவர்களின் சொற்பொழிவு. மொத்த விழாவிலும் இந்த அரங்கில் தான் அதிகப் படியான வாசகர்கள் பங்கேற்றனர். Verrier Elwin புத்தகத்தை எழுதும் பொது கண்ட அனுபவங்களையும் காந்தியை குறித்த சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
தமிழில் இருந்து ஒன்று இரண்டு எழுத்தாளர்களே அழைக்கப் பட்டிருந்தனர். இன்று ஜெயமோகன் அவர்களின் அறம் ஆங்கில மொழிபெயர்ப்பான Stories of the true குறித்த அரங்கு நடைபெற்றது. ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதாவும் ஜெ வும் கலந்துகொண்டனர்.
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, s ரா போன்ற வறுமையை துரத்திய மகா கலைஞர்களை, அவர்களது படைப்புக்களை பின் தொடரும் வாசகனுக்கு எல்லா வகையிலும் ஒரு விலகத்தை நேற்றைய தினம் அளித்ததால் இன்று பங்கேற்கச்செல்லவில்லை.
Comments
Post a Comment