திருவரங்கம் பெருங்கோயிலில் உள்ள ஒரு கோயில் ஸ்ரீ வேணுகோபாலன் சந்நிதி. திருவானைக்காவல் குறித்த வரலாற்று குறிப்புகளுக்காக Later Chola Art என்ற SR பாலசுப்ரமணியம் அவர்களுடைய புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தபோது சோழ - ஹோய்சாள கட்டிடக்கலைகளில் சந்திப்பில் நிற்கும் சில கோயில்கள் என்ற இயலில் திருவரங்கம் கோயிலில் உள்ள வேணுகோபாலன் சந்நிதியை குறிப்பிட்டிருந்தார். Later Chola Temples S R Balasubrahmanyam, Chola Pallava Phase(Later Pallavas) Part II Contributions of the later pallavas to the chola- pallava phase. 7.Srirangam மறுநாள் மாலை (நண்பர் வட்டத்தில் சிலர் அப்போதே சென்றிருப்பர் நான் Late ) சென்று வந்தேன். கூட்டத்தில் வழி தவறி திரியும் குழந்தையை போல் நின்று கொண்டிருக்கும் கோயில். ஹொய்சளர்களின் காலகட்டம் 11-14ம் நூற்றாண்டிற்குள் இந்த சந்நிதி எழுப்பப்பட்டிருக்க கூடும். சோழ பேரரசின் பிற்பகுதி அல்லது பிற்கால பாண்டியர் ஆட்சியின்...