நா பார்த்தசாரதியின் சரித்திர நாவல்களுள் மிக முக்கியமான குறு நாவல் ராணி மங்கம்மாள். வடக்கில் ஜான்சி ராணி பிறப்பதற்கு மூந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒரு வீரப் பெண்மணி. நாயக்க வம்சத்து மன்னரான சொக்கநாத நாயக்கரின் ராணி மங்கம்மாளின் கணவர். சொக்கநாத நாயக்கர், திருமலை நாயக்கரின் பேரன். கணவன் சொக்கநாதன் இறப்பிற்கு பின் உடன் கட்டை ஏறாது தன் மகன் ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கனை வளர்த்து ஆளாக்கி அரியணையில் அமர வைத்தார். (ராஜ மௌலி இவரது கதையை படித்திருக்க கூடும்). முது வீரப்ப நாயக்கரின் இறப்பிற்கு பின் அவரது மகன் குழந்தை விஜயரங்க சொக்கநாதன் பிறந்த உடன் அவனது தாய் தந்தை இருவரும் மறித்து விடவே குழந்தைக்கு மகுடம் சூற்றி ஏறத்தாழ 18 ஆண்டுகள் மங்கம்மாளே ஆண்டு வந்தார். புத்தகத்தின் சுவாரசிய தகவல்களுள் ஒன்று கன்னட அரசன் சிக்கதேவரயனின் மீது முத்து வீரப்பனின் படை எடுப்பு முயற்சி. தமிழகத்திற்கும் கன்னடதிற்குமான காவிரி விவகாரம் அறுநூறு- எழுநூறு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ஒன்று. சிக்கதேவராயர் காவிரியின் குறுக்கே அணை கட்டி தமிழகத்திற்...