ஒவ்வொரு புத்தகமும் ஒரு பயணம்
என்பர். இன்று நாம் போகவிருக்கும் பயணம் மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் முதுமலை
பகுதியின் டாப் ஸ்லிப்பில் உள்ள யானைகள் காப்பகத்திற்கு. சமகால கதை சொல்லிகளில் மிக முக்கியமான இடத்தில் உள்ள திரு பவா
செல்லதுரை அவர்கள் தான் யானை டாக்டர் புத்தகத்தை
எனக்கு அறிமுகம் செய்துவைத்தவர்.
டாக்டர் K எனப்படும் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை குறித்த ஒரு ஆவணப் படத்தை புனைவு கலந்து எழுதியிருக்கிறார் ஜெயமோகன் அவர்கள். IFS முடித்த ஒரு அலுவலர் டாக்டர் கே அவர்களுக்கு ஒரு பத்ம ஸ்ரீ விருது வாங்கித்தர வேண்டும் என்று முனைந்து தன்னால் இயன்ற வரையில் முயன்று கொண்டிருக்கிறார். காட்டில் வளர்ந்து கட்டின் ஒவ்வொரு பாதையும் தன் நரம்பென கொண்ட டாக்டர் K வெறும் சுழல் குழலில் பெறப்படும் பட்டமும் பதக்கமும் இந்த அறிவொளி பொருந்திய குழந்தைகளின் அன்பிற்கு முன் தூசெனும் சமம் ஆகாது என்று அவரை உணரச் செய்கிறார் என்பதே கதை சுருக்கம். முன்பு ஒருமுறை தனக்கு சிகிச்சை செய்த ஓர் மனிதனின் வாசனயை நினைவிற்கொண்டு அறுபது கிலோமீட்டர்கள் நடந்தே வந்து தன் குழுவில் உள்ள ஒரு குட்டிக்கு சிகிச்சை செய்ய சொல்லி முறையிடும் காட்சி நம்மை மிரட்சி கொள்ளச் செய்யும் கதையின் உச்சம். செல்வாவை டாக்டர் அறிமுகம் செய்யும் தருணமும் செந்நாய்க்கு மருத்துவர் சிகிச்சை செய்யும் காட்சியும் காட்டை பற்றிய அவரின் புரிதலை விவரிக்கும் இடங்கள்.
என்றோ ஒருநாள் டாக்டர் அழுகிய யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து கொண்டிருந்த காட்சியை கண்ட பின் அவர் அதே கைகளால் வழங்கும் தேனீரை குடிக்க தயங்குகிறான் என சாமானியன் காட்டிலிருந்து எப்படி அந்நியப்பட்டிருக்கிறான் என்ற இடத்தில் தொடங்கும் கதை. அவனது உடம்பிற்குள் அவனே அறியாமல் காட்டின் குருதியை மெல்ல மெல்ல செலுத்துகிறார் டாக்டர் K. பத்ம விருதிற்க்கு உதவுவதாய் கூறிய நண்பன் தோல்வி அடைந்து ஏமாற்றிய அமைச்சரை அந்த கிழநரி என்னை ஏமாற்றிவிட்டது என்று கூறும் போது இடை மறித்து "எந்த நரியும் அவ்வாறு தந்திரம் செய்யாது" என்று கூறி தொலைபேசியை துண்டிப்பதாய் கதை முடிவை எட்டுகிறது.
சொல்வேந்திரன் அவர்களின் வசிப்பது எப்படி என்ற புத்தகத்தில் யானை டாக்டர் புத்தகத்தை பற்றி இவ்வாறு எழுதுகிறார். - "ஜெயமோகனின் யானை டாக்டர் புத்தகத்தை படித்த ஒருவன் ஒரு போதும் வனபகுதியில் கண்ணாடி புட்டில்கலை மறந்தும் கூட வீசி எறியமாட்டான்.
காட்டை பற்றியும் யானையை
பற்றியும் மற்றுமொரு பரிமாணத்தை வாசிப்பவர் எய்துவார். அனைவரும்
வசிக்கவேண்டிய நூல் யானை டாக்டர். ஜெயமோகன் அவர்களது இணைய தளத்தில் மின்னூல்
ஆகவும் வெளியிட்டிருக்கிறார்.
Comments
Post a Comment