வரலாற்றின் மீது எப்போதுமே எனக்கு தீராத ஆர்வம் உண்டு. நாளைய கேள்வியின் பதிலை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு நேற்று தான் வரலாறு. ஒருமுறை S.Ra அவர்கள் அமரிக்காவில் மிகத் தொன்மையான பொருள் என்றால் அதற்கு 500 ஆண்டுகள் தான் ஆகியிருக்கும். அனால் நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு மரக்காபடி பத்து தலைமுறையாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு பொருள் என்று கூறியுள்ளார். நாம் மட்டுமல்ல வரலாற்றில் எந்த தலைமுறையுமே தனது வரலாற்றின் மீது அதீத ஆர்வம் கொண்டதாக இருந்ததில்லை.
பள்ளி நேரத்தில் படித்து மறந்து போன யுவன் சுவாங் அவர்களின் இந்தியப் பயணத்தில் தொடங்கி ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் வரை கிட்ட தட்ட மூவாயிரம் ஆண்டுகால வரலாற்றை இந்த புத்தகத்தில் தொகுத்திருக்கிறார் எஸ்.ரா.
எஸ்.ரா வின் பெரும்பாலான புத்தகங்கள் சாமானியனுக்கானவை. எளிய நடையில் அதே நேரம் காலத்தை தாண்டி நிற்கும் ஒரு படைப்புலகம் எஸ்.ரா வுடையது.
புத்தகத்தில் உள்ள சில சுவாரசிய வரலாற்று குறிப்புகள்:
- உஷா மெத்தா என்ற பெண் 1942ம் ஆண்டே ரகசிய ரேடியோ ஒன்றை நடத்தி வந்து அதற்காக ஆங்கிலேய அரசால் கைதும் செய்யப் பட்டிருக்கிறார்.
- பார்சி இன மக்கள் பூர்விகம் மற்றும் அவர்கள் சென்னையில் வழிபாட்டிற்காக கட்டியுள்ள நெருப்பு ஆலயம்.
- டில்லியில் வானவியல் ஆய்வுக்காக கட்டப்பட்ட ஜந்தர் மந்தர் மற்றும் அதில் உள்ள கருவிகள்.
- இந்த விடுத்தலைக் காக முதன் முதலில் ஜப்பானில் வான்வழி தாக்குதல் பயிற்சி பெற்ற நேதாஜி தேர்வு செய்த படைப் பிரிவு.
- தங்கள் ஆலயத்துள் பூட்ஸ் கால்கள் பதிய காரணமாக இருந்த பிரதமர் மீது குரோதம் கொண்ட சீக்கியர்களின் தாக்குதல்.
- பெங்கால் பஞ்சம், காலிஸ்தான் போராளிகள்
Comments
Post a Comment