சென்ற பதிவில் இலக்கியம், செய்தி, கட்டுரைகள் குறித்த சில இணைய தளங்களை பகிர்ந்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக சில தளங்கள். இவ்வகை தளங்கள் அனைத்தும் அன்றாடத்தில் அமிழ்ந்திருப்பவர்களுக்கானதல்ல. விழிப்பு, வேலை ,உறக்கம் என்னும் பெர்முடா வட்டத்தில் மகிழ்ந்திருப்பவர்கள் மேலே(கீழே) படிக்கவேண்டியதில்லை. உங்கள் வாழ்வு நலமாகுவதாகுக. இந்த அன்றாடத்திலிருந்து ஒரு மீட்சியும், வாழ்வை மீறிய ஒரு அனுபவத்தை அடைய விழைபவர்களுக்கானதே கலை, இலக்கியம். படைப்பாளனாக அல்ல ரசிகனாக ஆவதற்கே தன்னளவில் பெரும் முயற்சியும் உழைப்பும் நேரமும் வேண்டும். படைப்பிற்கு தன்னை ஒப்புக்கொடுத்தல் வேண்டும். அதற்காக முனைவோருக்கென சில குறிப்புகள்.
- சாரு நிவேதிதா அவர்களின் இணையதளம், நவீன தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமை, பிறழ்வெழுத்து என்னும் வடிவத்தை முன்வைத்து எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரைகள், புனைவுகள், அபுனைவுகள், இசை மற்றும் சினிமா விமர்சனங்கள் பயணக் கட்டுரைகள் என்று பல்வேறு தளங்களில் பயனளித்து வரும் படைப்பாளி.
- சொல்வனம் இணையதளம், அ முத்துலிங்கம் ஐயா, சுனில் கிருஷ்ணன் உட்பட பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
- நீலி மின்னிதழ், சமகால எழுத்தாளர்கள் பலருடைய கதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள் போன்ற படைப்புகள் இடம்பெற்றுள்ளது.
- Madras paper இணையதளம், எழுத்தாளர் பா ராகவன் ஆசிரியராக இருக்கும் தளம் அரசியல், சினிமா இலக்கியம் என பலதரப்பட்ட கட்டுரைகள் பிரசுரமாகி வருகிறது.
இவை தவிர Notion press என்னும் android செயலியிலும் பல்வேறு புனைவு படைப்புகள் மற்றும் கட்டுரைகள் பிரசுரமாகியிருக்கின்றன. சமீபத்தில் சாருவின் நான் தான் ஒளரங்கசீப் என்னும் நாவல் நூறு அத்தியாயங்களை தாண்டி இச்செயலியில் வெளியானது.
பி கு 1: இவற்றில் பல கட்டுரைகள் 15-20 நிமிட தொடர் வாசிப்பிற்கு உரியவை. 30 முதல் அறுபது நொடிகள் மட்டுமே கவனத்தை தக்க வைக்கும் reels, shorts போன்றவற்றிற்கு நம் மூளைகள் பழகிப்போய் இருப்பதால் இதுவே கூட பிரம்ம பிரயத்தனமாக இருக்க கூடும்.
பி கு 2: இன்று நான் படித்த சுவாரசியமான கட்டுரை ஒன்று.
- மனோ
This comment has been removed by the author.
ReplyDelete"விழிப்பு, வேலை ,உறக்கம் என்னும் பெர்முடா வட்டத்தில் மகிழ்ந்திருப்பவர்கள் மேலே(கீழே) படிக்கவேண்டியதில்லை. உங்கள் வாழ்வு நலமாகுவதாகுக. "
ReplyDelete:-(
தொகுத்தமைக்கு நன்றி !! #Bookmarked