நடந்தாய் வாழி காவேரி பயணக்கட்டுரை நூல் வாசிப்பனுபவம். நடந்தாய் வாழி காவேரி சிட்டி, தி ஜானகிராமன் இனைந்து எழுதிய பயணக்கட்டுரை. தமிழ் பயணக்கட்டுரை வரலாற்றில் ஏ கே செட்டியார் அவர்களின் பயணக்குறிப்புகளை போன்று குறிப்பிடத்தக்க ஒரு நூல். தி ஜா நாவல் உலகத்தில் ஒரு ஆசான், சு வேணுகோபால் போன்ற சமகால பல எழுத்தாளர்களுக்கு குருவாக விளங்குபவர். சிட்டி என்கிற பெ கோ சுந்தரராஜன் மணிக்கொடி இதழின் ஆசிரியராக இருந்தவர். சிட்டி, தி ஜா மட்டுமல்லாமல் உடன் ஒரு புகைப்பட கலைஞர், ஓவியர் மற்றும் மகிழுந்து ஓட்டுநர் என்று ஒரு குழுவுடன் செல்லும் பயணம் மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது. 1. தலைக்காவேரி - ஹொகேனக்கல் பயனைக் கொண்டுதான் பெரியவர்கள் தொடங்கும் பணியின் நோக்கங்களையும் நுட்பங்களையும் அறிய முடியும் என்று காளிதாசன் அருளிய வாக்குக்கு ஒரு சான்று வேண்டுமானால் தலை காவேரியின் இந்த மௌனச் சுனையைதான் காணவேண்டும். தலைக்காவேரி தொடங்கி கிருஷ்ணராஜசாகர், ஸ்ரீரங்கப்பட்டணம், மேகதாட் வழியாக ஹொகேனக்கல் வரை சென்றடைந்துள்ளனர். வழியில் ஒரு முதியவரை சந்திக்கும் குழுவை குறித்து நவீன வசதிகளான மின்விசிறி ட்ரான்ஸிஸ்டர் போன்றவற்றை வ