ஓவியம் - ஷண்முகவேல்
மகாபாரதத்தின் நவீன ஆக்கமான உலகின் மிகப்பெரும் நாவல் வரிசைகளில் ஒன்றான வெண்முரசு படித்துக்கொண்டிருக்கிறேன். 26 நாவல்கள் 25000 பக்கங்கள் என வாழ்நாள் முழுமைக்கும் துணைவரும் நாவல் தொகுதி, வெண்முரசு. அதில் எனக்கு பிடித்த தருணங்களை தொகுக்கும் பொருட்டு இந்த கட்டுரை வரிசை.
தற்போது படித்துக்கொண்டிருப்பது பிரயாகை, நாவல் 5. வரனாவதத்தின் அரக்கு மாளிகையிலிருந்து தப்பித்த பாண்டவரும் குந்தியும் காட்டில் மறைந்து வாழ்கின்றனர். இடும்பியை மணந்து கடோத்கஜனை பெற்றெடுக்கிறான் பீமன்.
பீமன், இடும்பி, கடோத்கஜன் மூவரும் பொன்னொளிர் வீசும் சூரிய அஸ்தமனத்தை மரத்தின் மீது அமர்ந்து கண்டு கழிக்கின்றனர். பீமன் இடும்பி மற்றும் தன் மகனிடம் மிக நெருக்கமாக உணரும் ஒரு கவித்துவ தருணம் இது அத்தியாயம் - 63. ஒரு மந்தனுக்கு மிகவும் உவப்பான ஒரு Couple goal இந்த தருணம். இத்தனை அத்தியாயத்தில் பீமன் வேறு எந்த மானுடருடனும் அணுக்கமாக இருக்கும் காட்சி நான் படித்ததில்லை.
அந்த பொழுது விடிவதற்குள் அவர்கள் காட்டை விட்டு விலகும்படி ஆகிறது. இரவில் இடும்பர் குலத்தில் எவரும் காட்டை விட்டு விலகக்கூடாது என்பது அவர்கள் நெறி. காடொத்கஜன் பாண்டவரிடம் ஆசி வாங்கி விடைபெறுகிறான். காட்டிற்குள் முழுவதுமாக இடும்பியும் காடொத்கஜனும் நுழைவதை பார்த்துக்கொண்டிருக்கும் பீமனை தேற்ற வார்த்தையின்றி குந்தி அமர்ந்திருக்கிறாள்.
Comments
Post a Comment