Skip to main content

இன்றைய காந்தி

இன்றைய காந்தி

இன்றைய தினம் அக்டோபர் 2, காந்தியாரின் பிறந்த தினம்.

Courtesy: Wikipedia

  

 மகாத்மா காந்தி, தேசப்பிதா. தன்னைப்போல ஆயிரம் காந்திகளை உருவாக்கிய பிரஜாபதி. சுதந்திர போருக்கு அகிம்சை ஆயுதம் ஏந்தியவர். ஒருபோதும் வன்முறைக்கு என் 30 கோடி மக்களை இட்டுச்செல்லாதவர். சுதந்திர வேள்வியில் சிந்தவிருந்த பல்லாயிரக்கணக்கான குருதி துளிகளை தடுத்தவர். நேற்று இன்று நாளை என்று என்றென்றைக்குமான சிந்தனைகளை விட்டு சென்றவர்.இன்றைய தினம் அவர் சிலைக்கு மாலை அணிவித்து கற்பூரம் காட்டி காந்தி சாமி என்று தொன்மமாக ஆக்குவது ஒருவகை விளக்கத்தையே அளிக்கும். நேற்று நேருவிற்கு காந்தி முக்கியமாக இருந்தார். இன்று எனக்கும் முக்கியமாக இருக்கிறார். நாளை வரப்போகும் ஒருவனுக்கும் காந்தி முக்கியம்.  

21ம் நூற்றாண்டிற்கு காந்தி விழுமியங்கள் என்று சிலவற்றை சிந்தித்து பார்க்கிறேன்.

Us vs them ! 

இருபதாயிரம் ஆண்டுகளாக மனித சமுதாயம் உருவாக்கிய நாம், அவர்கள் (Us Vs Them ) என்ற கட்டமைப்பை தகர்த்தெறிந்தவர் காந்தி. என் பிடரியில் பூட்ஸ் கால்களை வைத்து முன்னூறு ஆண்டுகாலம் அமிழ்த்திக்கொண்டிருந்த அந்த பிரித்தானியனுக்காகவும் சேர்த்து சிந்தித்தவர் காந்தி. ஒவ்வொரு மேம்பாலங்கள் இந்நகரில் எழுப்படும்போதும், புஷ்பரக விமானமாக மெட்ரோ ரயில்கள் பறந்து செல்லும்போதும். அதற்கு பலி கொடுக்கப்பட்ட தொழிலார்களின் ஆன்மாவை நினைத்து பார்க்கிறேன். அதி மூர்க்கமான தற்பெருமை கொண்ட மொழி சண்டைகள், சாதி சண்டைகளில் ஒருபோதும் என் மனம் குவியாதிருக்க செய்தவர் காந்தி. இது அனைத்திற்கும் ஊற்றுக்கண் என் மொழி பெரிது என் இனம் பெரிது, உலகத்திற்கே அறிவை கடன் கொடுத்தது என் இனம் என்ற வெற்று பெருமிதங்கள். இந்த பெருமிதங்களின் இன்னொரு முகம். பிறன் என்ற கட்டமைப்பை உருவாக்கி அவர்களை தாழ்த்துவது, தூற்றுவது.

பொறுப்பான நுகர்வு 

ஒருபோதும் சலுகை இருப்பதற்காக எந்த ஒரு பண்டத்தையும் நுகர்வது தவறு என்று. ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கனக்கான லாரிகளில் குப்பைகள் பெங்களூரு நகரின் புறநகரில் கொண்டு குவிக்கப்படுகிறது. இன்னும் நூறாண்டுகளில் மொத்த நகரமும் வாழ்வதற்கு இடமிலாது வெறும் குப்பை மேடாகக்கூடும். அனைத்து பெரு நகரங்களிலும் இதே நிலைதான். ஒவ்வொரு பண்டத்திலும் உணவு, உடை, போக்குவரத்து, கேளிக்கை, திரைப்படங்கள் வரைக்கும் நுகர்வு புரையோடியிருக்கிறது. மானுடம் தான் செய்வது Over consumption என்ற பிரக்ஞையை இழந்து நெடுநாட்கள் ஆகிறது.

உண்மையின் பல முகங்கள் 

உண்மை என்பது எப்போதும் ஒரு முகம் கொண்டதல்ல. நான் ஒரு உண்மையை கண்டடைந்திருக்கிறேன். அதே போல் நீ கண்டடைந்த உண்மையும் அதே அளவு முக்கியமானதே என்பது காந்தியத்தின் மிக முக்கிய விழுமியம். என் உண்மை பெரிது என்று ஒருபோதும் மார் தட்டிக்கொள்ள மாட்டேன்.

மையத்திற்கு எதிரான சிந்தனை 

அன்றாடம் அலுவலகத்தில் பார்க்கும் ஒரு நிகழ்வு. எந்த தலைமை நல்லதொரு படிநிலையை கொண்டுள்ளதோ அங்கு முடிவுகள் விரைவாக எட்டப்படும் என்பது. 100 பேரை தலைமை தாங்கும் ஒருவர் அவருக்கு கீழ் சிறு குழுக்கள் அமைத்து அதற்கு தலைவர்களை நியமிக்கும்படி தான் அமைப்பு இருக்கிறது. ஆனால், முடிவுகள் அவ்வாறு எட்டப்படுவதில்லை. அனைத்திற்கும் நூற்றுவர் தலைவரின் ஒப்புதலுக்காய் காத்திருப்பது இந்த அமைப்பை குலைக்கும் செயல். இதே கட்டமைப்பு ஆட்சி அதிகாரம் அரசு என்று எங்கும் பொருந்தும்.


சிறு வயதில் இருந்து காந்தியின் மீது கொண்ட பொய்யான சித்திரத்தை மாற்ற எனக்கு உதவிய புத்தகங்கள்.
1. உரையாடும் காந்தி - ஜெயமோகன். காந்தி குறித்தது  வாசகர் கடிதங்களின் பதில்கள், கட்டுரைகளின் தொகுப்பு 
2. காந்தியின் நிழலில் - S ராமகிருஷ்ணன். 
3. நாளைய காந்தி - சுனில் கிருஷ்ணன்






Comments

Popular posts from this blog

செய்நன்றி ❤️✨

எனது கல்லூரி துறைத்தலைவர் இப்போது Pollachi Institute of Engineering and Technology கல்வி ஆலோசகராக பணியாற்றுகிறார். அவர் அழைப்பின் பேரில் Pollachi Institute of Engineering and Technology என்ற கல்லூரியில் சென்ற திங்கள் அன்று முதலாம் ஆண்டு, மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களிடம் உரையாற்றினேன். இதை சொன்னபோது சில நண்பர்கள் ஆர்வத்துடன் என்ன பேசப்போகிறேன் என்று கேட்டனர், 2 நாட்கள் உழைத்து தயார் செய்த உரையென்பதாலும் பொதுவான உரையென்பதாலும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் ஆற்றிய உரையை இங்கு எழுதுகிறேன். (இது உரையின் எழுத்து வடிவம், சென்ற வாரம் கேட்டுக்கொண்டார்கள் என்பதை, “போன வாரம் கேட்டாங்க” என்று வாசிக்கவும்)  Dear Boys and girls சென்ற வாரம் mam அழைத்து முதலாம் ஆண்டு மாணவர்களிடம் பேசவேண்டும் என்று சொன்னபோது நான் கேட்ட முதல் கேள்வி ஆங்கிலத்திலா தமிழிலா என்று, பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள் அதனால் தமிழ் ஆங்கிலம் கலந்து பேசும்படி சொன்னார். முழுதும் தமிழில் பேசினாலும் செயற்கையாக இருக்கும், முழுதும் ஆங்கிலத்தில் பேசினாலும் பின் தொடர்வதில் சிக்கல் இருக்கும். மறுநாள் தான் ஒப்புக்கொண்ட...

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...