Skip to main content

வெண்முகில் நகரமும் கந்த சஷ்டியும்

இன்று 2 நவம்பர், 2024

ஆசான் ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு தமிழ் விக்கி நாவல் நிறை படித்துக்கொண்டிருக்கிறேன். தற்போது ஆறாவது நாவல் வெண்முகில் நகரம். நீண்ட விடுமுறை தினம் என்பதால் மீதமிருக்கும் கடைசி 10 அத்யாயத்தையும் முடித்துவிடவேண்டும் என்று படித்துக்கொண்டிருந்தேன்.

இதில் இன்று படித்த அத்தியாயம்(அணிபெருவாயில், 88ம் அத்யாயம்) கந்த சஷ்டி நாளான இன்று சுப்ரமணியரை தாரகன் வதத்தை குறித்ததாக அமைந்தது. இதே போன்று தமிழ் புத்தாண்டு அன்று ஒரு இனிய தற்செயல் நிகழ்ந்தது கொன்றையும் முரசும்


இத்தகைய இனிய தற்செயல்கள் வாசிப்பை இன்னும் அணுக்கமான அகவயப்பயணமாக மாற்றுகின்றன. புடவிக்கு நன்றி !!

Comments

Popular posts from this blog

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது.      17 காலை பாதாமியில் இறங்கியவுடன் சென்ற நூற்றாண்டு கிராம பகுத

கொட்டுக்காளி - Subtlety 🤍

இன்று மாலை கொட்டுக்காளி படம் பார்த்தேன். அதனை பற்றிய ரசனைக்குறிப்பு. வெகு நாட்களுக்குப்பின் ஒரு முழு தமிழ் படம் பார்த்த உணர்வு. சமீபத்தில் பார்த்த ஏறத்தாழ அனைத்து தமிழ் படங்களிலும் துப்பாக்கி குண்டுகள் முழங்கியவண்ணம் இருந்தன. சண்டைக்காட்சிகளின் மொத்த தொகுப்பாகவும் இடைச்செருகலாக சிறு வசனங்களாகவும் இருந்தன. கொட்டுக்காளி உண்மையில் பாலமலைக்கு ஷேர் ஆட்டோவில் நானும் நெருக்கி பிடித்துக்கொண்டு சென்று வந்த உணர்வை கொடுத்தது. ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால்  பல அடுக்குகள் கொண்ட உண்மைக்கு மிக நெருக்கமான சினிமா,  கொட்டுக்காளி . பின்னணி இசை இல்லை என்பது படத்தின் இன்னொரு தனித்துவம். அந்த இடைவெளியை இயற்கையின் சப்தத்தையும், நிசப்தத்தையும் கொண்டு நிரப்பியிருக்கிறார்கள். ஒரு பேட்டியில் படத்தொகுப்பாளர் கதை ஒரே நாளில் நடப்பதால் வெயிலின் தொனி(tone) ஒன்றாக இருப்பதற்காக மெனக்கெட்டோம் என்று சொல்லியிருந்தார். ஒவ்வொரு காட்சியின் ஒளிக்கலவையிலும் ஒவ்வொரு புல்லின் அசைவில் வரும் ஒலியிலும் மெனக்கெடல் தெரிந்தது.   முதல் காட்சியில் மீனாவிற்கு வைக்கப்படும் திருநீறு நெற்றிப்பொட்டிற்கு நேராக அல்லாமல் வலப்பக்கம் சற்று

பொன்னியின் செல்வன் - அரை நூற்றாண்டுக் கனவின் காட்சி வடிவம்

Image Courtesy : asianet  அனேகமாக இது எனது முதல் திரைப்பட காட்சி அனுபவக் குறிப்பாக இருக்கக் கூடும். வேலை நிமித்தமாக பெங்களூருவில் தங்கியிருந்த தொடக்க காலத்தில் பல நேரங்களில் துணையாக இருந்தது பாப்புலர் கிளாசிக் ஆன பொன்னியின் செல்வன் நாவல். திருச்சியை பற்றிய நாவல் என்ற குறிப்போடு பார்த்திபன் கனவை கல்லூரி நாட்களில் படித்து முடித்த நினைவு இருக்கிறது. பார்த்திப சோழனின் கனவை விக்ரமன் தொடங்கி பிற்கால சோழர்கள் ஆகிய ராசராசன் காலத்தில் நனவாகியது என்று பார்த்திபன் கனவு முடிவுறும்.  ஏறத்தாழ படித்து முடித்த அதே கால கட்டத்தில் தான்  வேலைக்காக  பெங்களூரு சென்றேன். ஆடிப்பெருக்கு நாளில் தொடங்கியது நாவல். எம்மை போன்ற காவிரி கரையோரம் வாழும் மக்களுக்கு ஆடிப்பெருக்கு மகா மங்கலமான ஒரு பெருவிழா. வாலான் அரிசியையும், வெல்லத்தையும், கீறிப்போட்ட தேங்காய் சில்லுகளையும் மஞ்சள் தடவிய கையோடு என் பாட்டி கிளறுகின்ற காட்சி இன்றும் என் மனக்கண்ணில் விரிகின்றது.  பள்ளி அரைநேரம், அலுவலகங்கள் உள்ளூர் விடுமுறை,திருவரங்கம் திருவானைக்காவல் வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்,  பூக்கள், பழங்களின் விலை உயர்வு என்று ஊரே விழாக் கோ