சோழர் கால செப்பு படிமங்கள் மூலம் - I ஜோப் தாமஸ் தமிழில் தியோடர் பாஸ்கரன்.
ஆலயக்கலை ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள் பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று. உலகின் மிக சிறந்த அருங்காட்சியகங்கள் பலவற்றிலும் நிச்சயம் ஒரு சோழர் கால ஆடல்வல்லானின் செப்பு சிற்பம் இடம்பெற்றிருக்கும். சோழர் காலத்தைய கலை படைப்பின் உச்சங்களுள் என்று போற்றப்படுவது நடராஜர் சிற்பம். செப்பில் செய்யப்பட்ட வார்ப்பு படிமங்கள் இன்றும் பல சிவாலயங்களில் உற்சவர் சிற்பமாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு செப்பு படிமமும் முதலில் தேன் மெழுகில் செய்யப்பட்டு பின் அதை வண்டல் மண் கலந்த கலவையை கொண்டு மூடி அதை அனலிலிட்டு மெழுகை உருகவைத்து அந்த பகுதியில் ஐம்பொன்னாலான உலோக குழம்பை ஊற்ற மெழுகு இருந்த இடத்தை உலோகம் நிரப்பிக்கொள்ளும். உலர்ந்த பின் பூச்சை உடைத்து பின் சில நகாசு வேலைகள் செய்து கண் திறப்பர். இம்முறை Lost wax எனப்படுகிறது. பிரபந்த வகுப்பின் போது ஆண்டாள் பாசுரத்தில் வந்த ததைத்துக்கொள்ளுதல் என்ற வார்த்தை என்னை உருக்கி உன்னை ஊற்றுவது என்ற பொருளில் செப்பு படிமங்களை சொன்னார் ஆசிரியர்.
நடராஜர் சிற்பம், வாலீஸ்வரன் கோயில் - வாலிகண்டபுரம் |
ஐ ஜாப் தாமஸ் அவர்களின் Thiruvenkaadu Bronzes என்ற நூலின் விரித்த தமிழ் வடிவம் சோழர் கால செப்பு படிமங்கள். திருவெண்காடின் சில தெய்வ செப்பு படிமங்கள், நாயன்மார்களின் படிமங்கள் அதன் அமைப்பு முறை (Iconography ) மற்றும் ஆடை அணிகலன்கள் குறித்து விவரித்துள்ளார். செப்பு படிம வார்ப்பு முறையையும், படிமங்களின் பாணியையும், இறுதியாக அவற்றின் இன்றைய நிலையையும் விவரித்துள்ளார்.
திருவெண்காடின் செப்பு படிமங்களான ரிஷபவாகன தேவர், அர்த்தநாரீஸ்வரர், பைரவர், காளி, பிச்சாண்டவர், கல்யாண சுந்தரர் மற்றும் கண்ணப்பர் போன்ற நாயன்மார்களின் உருவங்களும் அதன் அமைப்பு முறையும் பேசப்பட்டுள்ளன.
செப்பு படிம வார்ப்பு முறைகள் என்ற இயலில் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட செப்பு சிலையை கொண்டு இந்த நிலபரப்பில் 3000 ஆண்டுகளாக செப்பு சிற்ப பாரம்பரியம் உள்ளது என்று விளக்கப்பட்டுள்ளன.
சிற்பங்களின் தற்போதைய நிலை இயலில் இதுவரை அழிந்த அல்லது தொலைந்துபோன சிற்பங்களின் காரணங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.
செப்பு சிற்பங்கள் மற்றும் அதன் வரலாற்றை அறிய விரும்பும் ஒருவருக்கு நல்லதொரு நுழைவாயிலான நூல்.
வெளி இணைப்புகள்
Well written mano
ReplyDeleteமிக அருமை! வாழ்த்துக்கள்.
ReplyDelete