Skip to main content

சோழர் கால செப்பு படிமங்கள்

        சோழர் கால செப்பு படிமங்கள் மூலம் - I ஜோப் தாமஸ் தமிழில் தியோடர் பாஸ்கரன்.


        ஆலயக்கலை ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள் பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று. உலகின் மிக சிறந்த அருங்காட்சியகங்கள் பலவற்றிலும் நிச்சயம் ஒரு சோழர் கால ஆடல்வல்லானின் செப்பு சிற்பம் இடம்பெற்றிருக்கும். சோழர் காலத்தைய கலை படைப்பின் உச்சங்களுள் என்று போற்றப்படுவது நடராஜர் சிற்பம். செப்பில் செய்யப்பட்ட வார்ப்பு படிமங்கள் இன்றும் பல சிவாலயங்களில் உற்சவர் சிற்பமாக அமைந்துள்ளது.

        ஒவ்வொரு செப்பு  படிமமும் முதலில் தேன் மெழுகில் செய்யப்பட்டு பின் அதை வண்டல் மண் கலந்த கலவையை கொண்டு மூடி அதை அனலிலிட்டு மெழுகை உருகவைத்து அந்த பகுதியில் ஐம்பொன்னாலான உலோக குழம்பை ஊற்ற மெழுகு இருந்த இடத்தை உலோகம் நிரப்பிக்கொள்ளும். உலர்ந்த பின் பூச்சை உடைத்து பின் சில நகாசு வேலைகள் செய்து கண் திறப்பர். இம்முறை Lost wax எனப்படுகிறது. பிரபந்த வகுப்பின் போது ஆண்டாள் பாசுரத்தில் வந்த ததைத்துக்கொள்ளுதல் என்ற வார்த்தை என்னை உருக்கி உன்னை ஊற்றுவது என்ற பொருளில் செப்பு படிமங்களை சொன்னார் ஆசிரியர்.

    

நடராஜர் சிற்பம், வாலீஸ்வரன் கோயில் - வாலிகண்டபுரம் 

        ஐ ஜாப் தாமஸ் அவர்களின் Thiruvenkaadu Bronzes என்ற நூலின் விரித்த தமிழ் வடிவம் சோழர் கால செப்பு படிமங்கள். திருவெண்காடின் சில தெய்வ செப்பு படிமங்கள், நாயன்மார்களின் படிமங்கள் அதன் அமைப்பு முறை (Iconography ) மற்றும் ஆடை அணிகலன்கள் குறித்து விவரித்துள்ளார். செப்பு படிம வார்ப்பு முறையையும், படிமங்களின் பாணியையும், இறுதியாக அவற்றின் இன்றைய நிலையையும் விவரித்துள்ளார்.

        திருவெண்காடின் செப்பு படிமங்களான ரிஷபவாகன தேவர், அர்த்தநாரீஸ்வரர், பைரவர், காளி, பிச்சாண்டவர், கல்யாண சுந்தரர் மற்றும் கண்ணப்பர் போன்ற நாயன்மார்களின் உருவங்களும் அதன் அமைப்பு முறையும் பேசப்பட்டுள்ளன. 

        செப்பு படிம வார்ப்பு முறைகள் என்ற இயலில் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட செப்பு சிலையை கொண்டு இந்த நிலபரப்பில் 3000 ஆண்டுகளாக செப்பு சிற்ப பாரம்பரியம் உள்ளது என்று விளக்கப்பட்டுள்ளன. 

        சிற்பங்களின் தற்போதைய நிலை இயலில் இதுவரை அழிந்த அல்லது தொலைந்துபோன சிற்பங்களின் காரணங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன.

        செப்பு சிற்பங்கள் மற்றும் அதன் வரலாற்றை அறிய விரும்பும் ஒருவருக்கு நல்லதொரு நுழைவாயிலான நூல்.

வெளி இணைப்புகள் 

  1. செப்பு சிலை ஆவணப்படம் 

Comments

  1. Well written mano

    ReplyDelete
  2. மிக அருமை! வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...