Skip to main content

Posts

துளிநிறைவு - குருகு கட்டுரை ✨

          குருகு இதழில் அடியேனின் கட்டுரை பிரசுரமாகியுள்ளது. குருகு கலை, பண்பாடு, வரலாற்று, நிகழ்த்து கலை ஆகிய தளங்களில் செயல்படும் இணைய இதழ். அ கா பெருமாள், ஜெயமோகன் போன்ற தமிழ் பண்பாட்டின் முக்கியமான முகங்களின் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. ஆய்வாளர் வேதாச்சலம், David attenbrough குறித்த சிறப்பிதழ்கள் வந்துள்ளன. மூன்றாண்டுகளாக தொடர்ந்து வெளி வரும் இந்த இதழின் 25ம் இதழ்  கோயில் கலை செல்வர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.           இந்தியாவில்  பேரரசுகளின் சரிவிற்கு பின் காலனியாதிக்க கால கட்டம் வரையில் கோயில் கலை வரலாற்றில் ஒரு அகழி இருந்தது. அதற்கு பல்வேறு அரசியல் சமூக காரணங்கள் உள்ளன. மேற்கத்திய ஆய்வாளர்கள் எழுந்து வந்து இந்த ஆய்வுகளை தொடங்கும் வரை அந்த அகழி நிரப்பப்படாமல் இருந்தது.  Hultzsch ,  கல்வெட்டு அறிஞர் ராவ் பகதூர் Venkaiyya இருவரும் தஞ்சை பெரியகோயிலை கட்டியவர் ராஜராஜன் என்று வெளிக்கொணர்ந்தனர்.           அன்றிலிருந்து தொடங்கிய கல்வெட்டிய...

கண்ணனூர் கோயில்கள் ✨

          நீண்ட விடுமுறைக்கு முதலில் வைத்திருந்த திட்டம் வேறு, இதனை தொடர்ந்து மாற்றிய திட்டத்தையும் மாற்றி இன்று திருச்சி பள்ளிவிடைக்கு அருகில் உள்ள V துறையூரில் உள்ள கோயில்களுக்கு சென்று வந்தேன்.  வாலீஸ்வரர் கோயில்           மூன்று மாதத்திற்கு முன் கண்ணனூர் போசளீஸ்வரம் மற்றும் முக்தீஸ்வரம் கோயிலுக்கு சென்றிருந்தபோது கையில் ஆய்வாளர், ராசமாணிக்கனார் ஆய்வு மைய நிறுவனர், கலைக்கோவன் புத்தகம், வெயிலுக்கு தொப்பி, பேனா சகிதமாக சென்றதும் தொல்லியல் துறையிலிருந்து வந்திருப்பதாக நினைத்து இப்போது கோயில் வேலைகள் நடக்கின்றன அதனால் இப்படி உள்ளது என்று குவிந்திருந்த கற்களை காமித்து சொன்னார்கள்.           முக்தீஸ்வரர் கோயிலை பார்த்து முடித்து கிளம்பும்போது வாலீஸ்வரர் சோழீஸ்வரர் என்று அருகில் இரண்டு கோயில்கள் உள்ளன என்றனர். அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவு இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று வந்துவிட்டேன்.           இன்றொரு நாள் கிடைத்ததால் காலையே கிளம்பி பள்ளிவிடை பேருந்து...

நந்திபுரம் எனும் தொன்னகரம்

நந்திபுரம் எனும் தொன்னகரம்            1992ல் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) நிறுவனம் வெளியிட்ட நந்திபுர நகரத்தை குறித்த குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு நூல். கண்டியூர் வீராட்டனத்தில் உள்ள வாகீசர்             கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் 2ம் நந்திவர்மன் நந்திபுரம் என்ற நகரத்தை தோற்றுவித்திருக்கலாம். இது பல்லவ ஆளுகைக்குட்பட்ட சோழ நாட்டில் அமைத்த கடிநகரம். சித்ரமாய பல்லவராஜன் 2ம் தந்திவர்மனை நந்திபுர மாளிகையில் முற்றுகையிட்டபோது உதயசந்திரன் எனும் படைத்தலைவனின் உதவியோடு தப்பியதாக உதயேந்திரம் செப்பேடு கூறுகிறது. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயிலில் இதனை நந்திபுர முற்றுகையை விவரிக்கும் சிற்பத் தொகை உள்ளது.           நந்திபுர விண்ணகரம் இன்னும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தையும் திருக்கோடிக்காவல் கோயில் கல்வெட்டுக்களையும் கொண்டு மா. ராசமாணிக்கனார், தி. வை. சதாசிவ பண்டாரத்தார், KA நீலகண்ட சாஸ்திரி, R கோபாலன் போன்ற அறிஞர்கள் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாதன்...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...