எனது கல்லூரி துறைத்தலைவர் இப்போது Pollachi Institute of Engineering and Technology கல்வி ஆலோசகராக பணியாற்றுகிறார். அவர் அழைப்பின் பேரில் Pollachi Institute of Engineering and Technology என்ற கல்லூரியில் சென்ற திங்கள் அன்று முதலாம் ஆண்டு, மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களிடம் உரையாற்றினேன். இதை சொன்னபோது சில நண்பர்கள் ஆர்வத்துடன் என்ன பேசப்போகிறேன் என்று கேட்டனர், 2 நாட்கள் உழைத்து தயார் செய்த உரையென்பதாலும் பொதுவான உரையென்பதாலும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் ஆற்றிய உரையை இங்கு எழுதுகிறேன்.
(இது உரையின் எழுத்து வடிவம், சென்ற வாரம் கேட்டுக்கொண்டார்கள் என்பதை, “போன வாரம் கேட்டாங்க” என்று வாசிக்கவும்)
Dear Boys and girls சென்ற வாரம் mam அழைத்து முதலாம் ஆண்டு மாணவர்களிடம் பேசவேண்டும் என்று சொன்னபோது நான் கேட்ட முதல் கேள்வி ஆங்கிலத்திலா தமிழிலா என்று, பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள் அதனால் தமிழ் ஆங்கிலம் கலந்து பேசும்படி சொன்னார். முழுதும் தமிழில் பேசினாலும் செயற்கையாக இருக்கும், முழுதும் ஆங்கிலத்தில் பேசினாலும் பின் தொடர்வதில் சிக்கல் இருக்கும். மறுநாள் தான் ஒப்புக்கொண்டேன். ஒரு மணி நேரம் வந்து அறிவுரை சொல்லி செல்வதென்பது நம் இருவருக்கும் நேர விரயம். இப்போது உங்களுக்கு சொல்லும் வழிகாட்டல்கள் அனைத்திற்கும் நானும் உடனிருக்கவேண்டும். மாதம் ஒருமுறையேனும் சந்தித்து mock interview மற்றும் சில வகுப்புகள் எடுக்க முடியவேண்டும் அதை யோசித்தே சரியென்று சொன்னேன்.
இப்போது இங்கு கிட்டத்தட்ட 200 பேர் இருக்கிறீர்கள் எனில் எனக்கு 100 மணி நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. நான் இரண்டு நாட்கள் உழைத்து இந்த உரையை தயார் செய்து வந்திருக்கிறேன். உங்கள் நேரத்தை நான் மதிக்கிறேன். எனது நேரத்தை நீங்களும் மதிக்கவேண்டும். நான் உங்களுக்கு internal marks போடப்போவதில்லை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் எழுந்து வெளியில் செல்லலாம்.
முதலில் நான் பேசுவதை நீங்கள் ஏன் கேட்கவேண்டும் என்பதில் இருந்து தொடங்குவோம். sir சொன்னபடி எனது பெயர் மனோஜ் இப்போது Banglore ல் SAP என்ற ஜெர்மன் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். 2015ல் அண்ணா பல்கலைகழக கலைந்தாய்வில் 196.75 பொறியியல் cutoff பெற்று இரண்டாம் நாள் கலந்தாய்வில் PSGItech கல்லூரியில் கணிப்பொறியியல் கிடைத்தது. இப்போது BITS pilani ல் M Tech படித்துகொண்டிருக்கிறேன். நீங்கள் இன்று தொடங்க இருக்கும் 4 ஆண்டுகள் 48 தேர்வுகள் internals Re test re-re test என்ற இந்த பயணத்தை 7 ஆண்டுகளுக்கு முன் முடித்தவன். இந்த பயணத்தின் உட்சபட்ச சாத்தியமான அதிகபட்ச சம்பளம் கொண்ட வேலை என்பதை அடையாமல் பயணத்தில் எல்லா Possiblities ஐயும் அடைந்தவன். 78 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளேன். 2 நிறுவனங்களில் வேலை பெற்றேன். கல்லூரி வாலிபால் அணியில் இருந்திருக்கிறேன். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன், தமிழ் மன்றத்தில் இருந்திருக்கிறேன் பட்டிமன்றம் பேசி இருக்கிறேன். இரண்டு IV ஒருங்கிணத்திருக்கிறேன். 2 semester class rep ஆக இருந்திருக்கிறேன். இத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டவன் என்ற முறையில் என்னை அழைத்திருப்பதாக எண்ணுகிறேன். உங்களுக்கு நான் சொல்லவரும் முதல் கருத்து இதுதான் இங்கிருக்கும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். முதல் இரண்டாண்டுகளுக்குள் உங்களுக்கு என்ன வாராது என்ன வரும் என்பதை தெரிந்துகொள்ள அது உதவும்.
மதிய உணவிற்கு பின் உரை கேட்பது கடினம் தான், 3 கருத்துக்களை மட்டும் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.
நாம் கடந்து வந்த பாதை
இன்றிருக்கும் நிலை
செல்லவேண்டிய பாதை, அதன் difficulties
நாம் கடந்து வந்த பாதை
1608ல் இன்றிருக்கும் சூரத் நகரில் வணிக குழுவாக இந்தியாவிற்குள் நுழைந்தனர் ஆங்கிலேயர். 1857ல் சிப்பாய் கலகத்திற்கு பின் விக்டோரியாவின் நேரடி ஆட்சி இங்கு நிறுவப்பட்டது. பின் சுதந்திரம் கிடைக்கும் வரையில் பக்கிங்ஹாம் அரண்மனையின் பூட்ஸ் கால்களுக்கு கீழ் தான் நாம் இருந்தோம். இந்த ஆங்கிலேயே ஆட்சி இரண்டு முக்கியமான பிரச்சனைகளை கொடுத்தது.
மாபெரும் பஞ்சங்கள்
1940 வரையில் தொடர்ந்து பஞ்சங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருந்தன சமீபத்தில் நான் படித்த Churchill secret war என்ற புத்தகத்தில் தரவுகளுடன் இந்த பஞ்சத்தின் விரிவான சித்தரிப்பு உள்ளது. எனது ஆசிரியர் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வெள்ளை யானை நாவலை வாசித்து பார்க்கலாம். அந்த பஞ்ச காலம் மக்களை மேலும் மேலும் பிழைப்பு வாதிகளாக மாற்றியது இன்று நாம் ஒருவரையொருவர் பார்த்தால் சாப்டிங்களா என்று கேட்பது அதன் தொடர்ச்சிதான்.
சராசரி கல்வி
இங்கு ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களுக்கான உழைக்கும் வர்க்கம் Working class ஐ அவர்களே உருவாக்கினர். ஒரு லட்சத்திற்கும் குறைவான ஆங்கிலேயர்கள் இங்கு வந்து இந்த மக்களுக்கு உழைக்கும் வர்க்கத்திற்கு போதுமான அளவிற்கு மட்டுமே கல்வி கொடுத்து அவர்களை பணியில் அமர்த்தினர். அது தான் மெக்காலே கல்வி முறை. இதன் முக்கியமான இடர் மரபான கூர்மையான கல்வியின் இடத்தை, இந்த பொதுவான எல்லருக்குமான சராசரி கல்வி எடுத்துக்கொண்டது என்பது தான். இதில் பொதுவான கணிதம் கொஞ்சம் அறிவியல் துரை சொல்வதை புரிந்துகொள்ளும் அளவிற்கு கொஞ்சம் ஆங்கிலம் என்று கொடுக்கப்படும். இது சராசரி கூட்டத்தை வளர்த்தெடுக்கவே உருவாக்கப்பட்ட ஒன்று.
பஞ்சபாராரிகளாக, சராசரி அறிவு கொண்டவர்களாக ஆனோம் என்பதை past ஆக சொல்லலாம்
இன்றிருக்கும் நிலை
சுதந்திரத்திற்கு பின் பஞ்சங்களை குறைக்கும் வழியை நேருவும் அவரை தொடர்ந்த இந்திய தலைவர்களும் கண்டடைந்தனர். Mission ISRO என்ற Harsha bhogle வின் spotify podcast ஐ கேட்டு பார்க்கலாம். சோத்துக்கு வக்கத்த ஒரு தேசத்திற்கு விண்வெளி கனவை கொடுத்தார் நேரு. மெல்ல மெல்ல பஞ்சத்திலிருந்து விடுபட்டோம். ஆனால் இந்த கல்வி முறையில் நம்மால் மாற்றம் செய்ய முடியவில்லை. இந்தியா போன்ற ஒரு தேசத்திற்கு இந்த முறை தான் சாத்தியம். நான் படித்த பள்ளியில் ஒரு வகுப்பில் 120 பேர் இருந்தனர். யாருக்கு என்ன திறமை இருக்கிறதென தனியாக கண்டுபிடிக்க துணிந்தால் அதற்கே அரையாண்டு கடந்துவிடும்.
இப்படி நல்ல உடை நல்ல கல்வி அமைப்பு நமக்கெல்லாம் கிடைத்திருக்கிறதென்பதே நாம் பஞ்சத்தை கடந்து வந்ததற்கான சாட்சி ஆனால் கல்வி முறையை மாற்ற முடியாது. We hav to live with it.
இந்த சராசரி கல்வியில் நாம் படித்துக்கொண்டிருக்கும்போதே உலகம் நொடிக்கு ஒன்றென மாறிக்கொண்டிருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன் ஒரு Chatgpt மாடல் வந்திருக்கிறது Astra என்று.
நாம் செல்லவேண்டிய தொலைவு, அதன் difficulties
ஒவ்வொரு மாதமும் ஒரு அணுகுண்டு போல புதிய தொழில்நுட்பங்கள் வரும் இந்த காலத்தில் Growth என்பதை விட survival யே சிக்கலாகி இருக்கிறது. The thinking game என்ற ஆவணப்படத்தை பார்க்கலாம். Demis hassabis இப்போது google deepmind இன் தலைவராக இருப்பவர். AI துறையில் முக்கியமான விஞ்ஞானி. முதன் முதலில் protein structure ப்ரொப்ளேத்தை எப்படி அவரது குழு தீத்தது என்று.
சமீபத்தில் linkedin VP ஒருவர் முன்பெல்லாம் growth என்பது இன்னும் அதிக சம்பளம் கொடுக்கும் வேலைக்கு மாறிக்கொண்டே இருப்பது என்றிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு வேலையில் நிலைத்திருப்பதே growth என புரிந்துகொள்ளப்படுகிறது என்றார்.
அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்துவிட்ட நாம் இன்னும் பெரிய கனவுகளை காண வேண்டும். ஒரு வேலைக்கு செல்வதுடன் உனது வாழ்க்கையை முடித்துகொள்ளக்கூடாது. Passion ஐ நோக்கி ஓடு என்ற டிரெண்டின் பின்னால் சென்றுவிடாதீர்கள் என்று மன்றாடி கேட்கிறேன். எல்லோரும் வேலைக்கு செல்லவேண்டும் அதற்காகத்தான் உங்கள் அம்மா அப்பா கூலி வேலை செய்து இங்கு அனுப்பி இருக்கிறார்கள். முதலில் ஒரு நல்ல பணியில் சேருங்கள் passion இருந்தால் அது உங்களை விட்டு போகாது.
இந்த AI தொழிநுட்பங்கள் வந்த பின் அறிவுசமூகம் இன்னும் democratic ஆக மாறியுள்ளது. இது வரை மானுட இனம் சேர்த்த மொத்த அறிவெனும் ஆலமரமும் உங்களுக்கு விதையாக்கி Chat interface ஆக கொடுக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் நீங்க தான் ஆலமரமாக மாத்தணும்.
இன்று நீங்கள் IEEE ல் ஒரு patent file செய்தால் sweden டென்மார்க் என்று எந்த நாட்டில் இருந்தாலும் அவன் அதை பயன்படுத்திக் கொள்ளமுடியும். இந்த சமூகத்திற்கு மீண்டும் கொடுங்கள். உங்களோடு படித்த பல boys இப்போது petrol பங்கில் வேலை செய்துகொண்டிருக்கலாம் பெண்ணாக இருந்தால் கட்டாய திருமணம் செய்து வைத்திருப்பார்கள். அவர்களுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பிற்காகவும் நீங்க படிக்கணும்.
நாம் அடையவேண்டிய இலக்கை அடையமுடியாமல் தடுக்கும் problems
இன்று நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இருக்கும் முதல் threat AI. மனிதனுக்கு மூன்று அறிதல் முறைகள் உள்ளன. Logic, Imagination, Intuition. இது வரை நாம் சேர்த்த மொத்த அறிவும் feed பண்ணப்பட்ட ஒரு datacenter நிச்சயமாக நம்மை விட பல்லாயிரம் மடங்கு லோஜிக்கலாகத்தான் யோசிக்கும். அதை நாம் பீட் செய்ய இருக்கும் ஒரே வழி கற்பனையை புகுத்துவது தான். கற்பனை அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் Be Creative.
இதை விட fundamental ஆன ஒரு பிரச்சனை கவன குறைவு. ஒரு மணி நேர வகுப்பு அதிலும் முதல் பத்து நிமிடமும் இறுதி பத்து நிமிடமும் ஜோக்குகள் அல்லது attendance என்ற இந்த structure ஐ வைத்துக்கொண்டு ஒன்றையும் நாம் கற்றுகொள்ளமுடியாது. 3 மணி நேரம் ஒரு வகுப்பை தொடர்ந்து கவனிக்க முடியவில்லை என்றால் இந்த அறிவு கல்வி knowledge work நமக்கானதில்லை. வேறு வேலை பார்த்துக்கொள்ளலாம். The social dielemma என்ற Netflix ஆவணப்படத்தை பார்க்கலாம். சமூக ஊடகமும் அது அளிக்கும் depressionம் குறித்த டாக்குமெண்டரி. The defining decade என்ற புத்தகத்தில் Megg Jay 20-30 ஆண்டுகள் தான் வாழ்வை தீர்மானிக்கும் ஆண்டுகள் என்று சொல்கிறார்.இந்த இரண்டு ஆடுகளுக்குள் நீங்கள் என்னவாக ஆக முடியாது என்று ஒவ்வொன்றாக விளக்கி என்ன ஆகவேண்டும் என்று கண்டடைந்து அதில் செயலாற்ற தொடங்குங்கள்.
2019 ஆகஸ்டில் எங்களுக்கு முதல் கம்பெனி வரும் fresher க்கு ஆண்டிற்கு 38 லட்சம் சம்பளம் கொடுக்கக் கூடிய கம்பெனி. ஆனால் நாங்கள் செப்டம்பர் வரைக்கும் எந்த நிறுவனத்திலும் தேர்வாகாமல் அதன் பின் தான் படிக்க ஆரம்பித்து select ஆக தொடங்கினோம். மீண்டும் சொல்கிறேன். You guys don't have that time. Act now. Act fast. இன்னும் 4 ஆண்டுகள் கழித்து என் இடத்தில் நின்று நீங்களும் இதையே உங்கள் juniors க்கு சொல்லலாம்.
இப்போது கருப்பு படம் வந்த பிறகு உங்க எல்லாத்துக்கும் PSG i Tech என்று சொன்னால் தெரியும். ஆனால் நிறுவனங்களில் நாங்கள் இருப்பதனால் தான் எங்கள் கல்லூரியின் பெயர் நிறுவனங்களுக்கு தெரிகிறது நீங்க பெரிய கம்பெனிக்கு வேலைக்கு போனா தான் உங்க கல்லூரியும் வெளியே தெரியும்.
சட்டசபை live போட்றாங்க என்று நாள் முழுக்க அதை பார்த்துக்கொண்டிருந்தால் உங்கள் நேரம் வீணாகும். தளபதி அவர் வேலையை பாக்கட்டும் நம்ம நம்ம வேலையை பார்போம்.
இது வரைக்கும் நான் பேசியதை இப்படி சுருக்கலாம். காலனியத்திக்க காலகட்டத்தில் பிழைப்பு வாதிகளான நாம் அதிலிருந்து வெகு தூரம் மீண்டு வந்திருக்கிறோம். இன்று இன்னும் அறிவு துறையில் சாதிக்க வேண்டியதுள்ளது. தான் தனது வேலை என்று மட்டும் இல்லாமல் இன்னும் பெரு வாழ்விற்கு முயலுங்கள்.
ஒரு கேள்வியுடன் முடிக்கலாம் என்று நினைக்கிறேன். 2 மாதங்களுக்கு முன் எகிப்தில் சிகை கொற்றன் என்ற தமிழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் பல இடங்களில் வாயில் படிகளுக்கு மேலே சிதைவுறாத படி வெட்டி வைத்து சென்றிருக்கிறார். தமிழி எழுத்துருவின் காலம் 2500 ஆண்டுகளாக இருக்கலாம். 2500 ஆண்டுகளுக்கு முன் குதிரையிலும் அத்திரியிலுமாக நடந்தே செங்கடலை கடந்து இங்கிருந்த ஒரு வணிகன் அவ்வளவு தூரம் சென்றிருக்கிறான். அங்கிருந்து அவன் நம்மிடம் கேட்பது எந்த தொழில்நுட்பமும் இல்லாமல் என்னால் இவ்வளவு தூரம் வர முடிந்திருக்கிறது. இன்று தொழில்நுட்ப உச்சங்களில் நின்றுகொண்டு Chatgpt Claude Copilot cursor என்று இவ்வளவையும் வைத்துக்கொண்டு நீங்க எவ்வளவு தூரம் போ போரீங்க ? என்று கேட்கிறார். நம்ம எவ்வளவு தூரம் போ போறோம் ?
With that thought, I’ll leave you all guys. Wish you all reach greatest of the greatest heights. Stay in touch. Thank you !!
சென்ற ஆண்டு நான் mentor செய்த கௌதம் என்ற பையனும் வந்திருந்தான். இறுதியாண்டு தொடக்கத்தில் இருந்து அவனுடன் உரையாடிகொண்டிருக்கிறேன். இப்போது industry நிலமையால் சிறிய நிறுவனத்தில் பணியாற்றுகிறான். அடுத்து ஒரு பெருநிறுவனத்தில் நிச்சயம் சேர்வான் என்று உறுதியாக சொல்லமுடியும். நான் கோவை PSG போன்ற சிறந்த கல்லூரி கிடைக்கப்பெற்றதும் அங்கு நல் வாய்ப்புகள் அனைத்தும் முன்னோர் செய்த நல்லூழ். அந்த வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு எனது ஆசிரியர் செய்யும் பணி மகத்தானது. இது அவர்கள் எனக்கு கல்லூரி காலத்தில் செய்ததற்கு கல்வியை தாண்டி வாழ்கையையும் கல்வியை விடவும் வாழ்க்கையை அதிகம் கற்பித்ததற்கான நன்றிக்கடன். அழைத்த HOD mam ற்கு ஜெ வின் (சுசித்ராவின்) Daughter of kumari புத்தகத்தையும் கௌதமிற்கு யானை டாக்டர் புத்தகத்தையும் பரிசளித்துவிட்டு பெருநிறைவுடன் வீடு வந்து சேர்ந்தேன்.
இங்கு உரையாடிய 200 முதலாம் ஆண்டு மாணவர்களில், 50க்கும் மேற்பட்ட 3,4ம் ஆண்டு மாணவர்களில் 10 பேராவது நல்ல நிறுவனைத்தில் வேலைக்கு சேர்ந்தால் பெருநிறைவு கொள்வேன்.
பிகு 1 : மூன்றாம் ஆண்டு மாணவர்களிடம் Placement குறித்து மட்டுமே உரையாடியதால் அதை இங்கு குறிப்பிடவில்லை.
பிகு 2 : உரையின் முடிவில் சிகை கொற்றன் கல்வெட்டு குறித்து குறிப்பிட்டது சமீபத்தில் பார்த்த எழுத்தாளர் பேச்சாளர் செல்வேந்திரன் அவர்களின் உரையில் இருந்து எடுத்தாண்டது. கட்டுரை எழுதும்போதே குறிப்பிட நினைத்து தவறி விட்டேன். பல நண்பர்கள் அதை பாராட்டினர், That credit goes to him !!. இதற்காகவும் மேடைப்பேச்சின் பொன் விதிகள் நூலில் குறிப்பிட்டுள்ள பல குறிப்புகள் பயனுள்ளவையாக அமைந்தன இரண்டிற்காகவும் அவருக்கு நன்றி.
12 செப் 2026
திருச்சி
🤍🤍
ReplyDeleteSuper anna
ReplyDeleteYou have lot of talents Manoj.
ReplyDeleteGreat speech
ReplyDeleteஅத்திரி என்றால் என்ன குதிரை புரிகிறது
ReplyDeleteவாழ்த்துக்கள் தம்பி
ReplyDeleteஎன்றேன்றும்
எங்கள் ஆசிகள்