தந்தை பெருமரம் நூல் குறிப்பு - லால்குடி தினேஷ்
1.தந்தை பெருமரம்
Baobab மரம் எனும் பெரும் மரத்தை குறித்த கட்டுரை இது. ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் பகுதியை பூர்விமாகக் கொண்டது இந்தியாவில் சுமார் 1500 மரங்களுக்கு மேல் இருப்பதாகவும் மத்திய பிரதேஷ் பகுதியில் குறிப்பிட்ட ஒரு மாவட்டத்தில் அதிக அளவில் இருப்பதாகவும். பிற பகுதிகளில் ஆங்காங்கே சில பகுதிகளில் மட்டும் உள்ளது. எவ்வாறு இந்தியாவிற்கு வந்தது என்பது மர்மமாகவே உள்ளது என்று கூறுகிறார், பல ஊகங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. இந்த மரம் ஒரு மலை போல் வளரக்கூடிய தனிப் பெரும்பரம். இதன் அத்தனை பகுதிகளும் மனிதர்கள் பயன்படுத்தக்கூடியவை எனவேதான் இதை தந்தை பெரும் மரம் என்னும் அர்த்தத்தில் பாவோபாப் என்று அழைக்கின்றனர். இந்த சொல்லின் வேறு சொல் அரபு லத்தின் மொழியை சார்ந்தது.
2. காய்ச்சல் மரம்-சின்கோனா
உலகை பல நூற்றாண்டுகளாக வாட்டி வதைத்த தொற்றுநோய் மலேரியா. அந்த மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் முக்கிய மருந்தாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டது சின்கோனா மரத்தின் பட்டை. பெருநாட்டின் ஆன்டிஸ் மலைத்தொடரில் பூர்விமாக இருந்த இந்த மரத்தின் பயனை கண்டு கொண்டு அதை ஐரோப்பியர்கள் உலகம் முழுவதும் நட்டு வளர்த்து அதன் பட்டையை மருந்தாக பயன்படுத்தினர். ஏனென்றால் ஐரோப்பிய போர் வீரர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காட்டுப் பகுதியில் செல்லும் பொழுது அங்குள்ள கொசுக்களால் மொத்த படைக்கும் மலேரியா வந்து அவர்கள் அனைவரும் இறக்கும் நிலை ஏற்பட்டு கொண்டிருந்தது. போரில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியான மலேரியாவை கட்டுப்படுத்துவது அவர்களுக்கு மிகவும் அவசியமான விஷயமாக இருந்தது. இதனால் அதிக அளவில் பெருவில் இருந்து வெட்டி கடத்தப்பட்டது. அதை தடுக்கும் பொருட்டு காடுகளில் காவல் வைக்கப்பட்டது அதையும் மீறி மமானி என்ற விதை சேகரிப்பாளர் சின்கோனா விதையை சேகரிக்க சென்று காவலர்களிடம் மாட்டி அடிபட்டு இறக்கிறார்.
மனித குலத்தில் தோன்றும் பல நோய்களுக்கு மருந்தாக தாவரங்களே இருக்கின்றன. தாவரத்தின் பயன் இன்னும் கூட நம்மால் முழுமையாக கண்டறியப்படாதது. ஒவ்வொரு முறையும் தாவரத்திலிருந்து பெறப்படும் வேதிப்பொருட்களால் மனிதனின் ஏதோ ஒரு இடர் களையப்படுகிறது. கோவிட் காலங்களில் கூட நிலவேம்பு கசாயம் எவ்வாறு பலனை கொடுத்தது என்பதை நான் பார்த்திருக்கிறேன்.
3. தீதும் நன்றும் - சீமகருவேலம்
Prosopis Juliflora(இதன் பெயரில் உள்ள Opis என்பது கிரேக்க துன்மக் கடவுளான சனி பகவானின் மனைவியின் பெயர்.அதீத வளத்திற்கும் நிலத்திற்குமான கடவுள். இதிலிருந்தே சீமை கருவேலத்தின் அதீத வளர்ச்சியை நாம் ஊகிக்கலாம்)- என்ற தாவர பெயரை கொண்ட சீமை கருவேல மரம் 2016 ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பின் படியால் அளித்த ஒழிக்கப்பட வேண்டிய மரமாக பொதுமக்கள் மனதில் ஊடகங்களால் நிலைநிறுத்தப்பட்டது. R.H.Bendome என்ற பிரிட்டிஷ் அதிகாரியால் ஜமைக்கா நாட்டிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டது சீமை கருவேல மரம். வறட்சியை தாங்கிக் கொண்டு வேகமாக வளரும் இம்மரம் வீடுகளிலும் சிறிய தொழிற்சாலைகளிலும் பிறராக பயன்படுத்தப்பட்டது அதனால் நம் நாட்டு மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்பட்டது இதன் கனிகள் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்த முடியும் வெனிசுலா போன்ற தென் அமெரிக்கா நாடுகளில் இதன் கனிகளை பொடித்து பாலுடன் கலந்து பானம் தயாரித்து பயன்படுத்துகின்றனர். நீர்வளம் மிகுந்த இடத்தில் வளரும் இந்த மரத்தின் பூக்களில் இருந்து அதிகளவு தேன் சேகரிக்கப்படுகிறது. காமராஜர் ஆட்சி காலத்தில் இவை தமிழகத்தில் நன்றாக பரவலாக்கப்பட்டது விவசாயிகள் வேலி அமைப்பதற்கும் விறகு தேவைக்காகவும் விரும்பியதை வளர்த்தனர் ஆனால் இப்பொழுது எல்லா பயனும் முடிந்து விட்டதால் இந்த மரம் வேண்டாத ஒரு மரமாக பாவிக்கப்பட்டு அவிக்கப்படுகிறது.
இயற்கையில் அப்படி ஒரு மரம் முழு தீமை கொண்டதாக ஆவதில்லை அதைக் கட்டுப்படுத்த தவறிய நம்மீது தான் தவறு இருக்கிறது. இம்மரத்தை நீர் நிலைகளுக்கு அருகில் கட்டுப்படுத்தி வைத்தாலே போதுமானது. வெட்ட வெளியில் வளர்ப்பதற்கு மிகுந்த ஏற்புடையது இந்த மரம் அதனால் மண்ணரிப்பை தடுக்கவும் பாலைவனமாக்கலை தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இம்மரம் மட்டும் இல்லையென்றால் செங்கல் சூளைகளுக்காக பனைமரம் முழுவதும் வெட்டி அழிக்கப்பட்டிருக்கும். எனவே எந்த ஒரு புரிதலும் இன்றி இதை அதிக அளவு ஆக்சிஜனை இழுக்கும் 150 அடி வரை சென்று தண்ணீரை இழுக்கும் போன்ற வதந்திகளை நம்பாமல் தேவையற்ற இடங்களில் மட்டும் கட்டுபடுத்தி தேவையான இடத்தில் இம்மரத்தை வளர்த்து பலன் பெறுவோமாக. இம்மரம் தவிர்த்து எந்த ஒரு பயனும் இல்லாத விஷச் செடியான பார்த்தீனியம், கழிவு நீரில் வளர்ந்து தண்ணீரில் உள்ள நச்சுக்களை தன் இலையில் சேமித்து வைக்கும் பொன்னாங்கண்ணி கீரை போலவே உள்ள சீமை பொன்னாங்கண்ணி கீரை, நீர் நிலையை அழிக்கும் நெய்வேலி கத்தாழை மற்றும் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் வாரன் ஹஸ்டிங் மனைவியால் ஹூப்ளி நதியில் அறிமுகப்படுத்திய ஆகாயத்தாமரை போன்ற ஆபத்து நிறைந்த செடிகளை கட்டுப்படுத்த நாம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
4. மரவுரி
வெண்முரசில் பல இடங்களில் பழங்குடிகள் அணிவதாகவும் நாடு துறந்து காடு செல்லும் அரசகுடியினர் உடுத்துவதாகவும் மரபுரி குறிப்பிடப்படும் அது குறித்த கட்டுரை இது என்றும் உலகில் உகாண்டா நாட்டில் பிரதானமாக மரபுரி பயன்படுத்தப்படுகிறது சமயச் சடங்குகளின் போதும் சில விசேஷ வழிபாடுகளின் போதும் மரவொறியை அங்குள்ளவர்கள் அணிகின்றனர் குறிப்பிட்ட சிலவகை அத்திமரம் பலாமரம் மற்றும் காகித மரம் ஆகியவற்றின் பட்டையை உரித்து வெந்நீரில் கொதிக்க வைத்து தட்டி நீளமாக்கி சில சமயம் சாயம் ஏற்றியும் உடை போல பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் முன்பு மரவுரி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது ஆனால் பருத்தி ஆடைகள் மற்றும் பல புதிய ரக ஆடைகளின் பெருக்கத்தால் இன்று கணிசமாக பயன்படுத்தப்படவில்லை. கொங்கு வட்டாரத்தில் சாவு சடங்கு பொழுது சாவு நடந்த வீட்டினர் கையில் ஒரு சிறு மரவுரியை வைத்திருப்பர் அதை தொட்டுத்தான் வரும் உறவினர்கள் துக்கம் விசாரிப்பர்.
மழைக்காலங்களில் நனைந்திருக்கும் மரத்தின் பட்டையை உரித்து மரவுரி செய்வர். உரிக்கப்பட்ட மரத்தின் மீது வாழை இலையைக் கட்டி நோய் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வர். அடுத்த வருடம் மீண்டும் அந்த மரத்திலிருந்து பட்டையை உரிக்க முடியும். என் அம்மா என்னை திட்டும் பொழுது பட்டையை உரித்து விடுவேன் என்று அடிக்கடி கூறுவார்.
5. பெருங்காயம்
உலகின் பெருங்காய உற்பத்தியில் 60 சதவீதத்தை இந்தியா பயன்படுத்துகிறது ஆனால் அவை எதையுமே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவது இல்லை நாம் நமது பெருங்காயத்திற்கு ஆப்கானிஸ்தானையும் கசகஸ்தானையும் ஈரானியுமே நம்பி இருக்க வேண்டி இருக்கிறது. 1890 இல் காபுலில் இருந்து மும்பையில் வந்து பெருங்காய வியாபாரம் செய்த ஒரு வியாபாரி இடமிருந்து லார்ஜி என்பவர் பெருங்காயத்தை பெற்று ஒரு நிறுவனத்தை தொடங்கினார் அதுதான் நம்மிடையே புகழ்பெற்றிருக்கும் எல்ஜி பெருங்காய நிறுவனம் இன்று ஐந்து தலைமுறைகளாக வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிறுவனம் கசகஸ்தானில் இருந்தே தனக்கு தேவையான பெருங்காயத்தை இறக்குமதி செய்கிறது இந்த பெருங்காயத்துடன் ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கருவேல மரத்தின் பிசினையும் கோதுமை மாவு அரிசி மாவு அல்லது மைதா மாவு கலந்து பொடியாக்கி கூட்டுப் பெருங்காயமாக நமக்கு விற்பனை செய்கின்றனர்.
அலெக்சாண்டர் இன் படையெடுப்பால் மத்திய ஆசியாவில் இருந்து பெருங்காயம் ஐரோப்பாவிற்கு பரவியது. இதற்கு முக்கிய காரணம் அங்கு ஏற்கனவே பெருங்காயத்தை ஒத்த ஒரு மசாலா பொருளான Silphium பயன்படுத்தப்பட்டு வந்தது. அதீத நுகர்வால் அவை அழிந்து விட்டதால் பெருங்காயம் உடனடியாக ஐரோப்பாவில் வரவேற்பை பெற்றது. இறைச்சியை மிருதுவாக்கவும் மருந்தாகவும் பெருங்காயம் அங்கு பயன்படுத்தப்பட்டது. மேலும் ஐந்தாம் நூற்றாண்டு சீனாவின் மருத்துவ நூல்களில் பெருங்காயம் குறிப்பிடப்படுகிறது. அதன் பின்பு தொடர்ச்சியாக சீனாவில் இவை மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டது. மேலும் கெட்ட ஆவிகளை விளக்கும் தன்மையுடையதாகும் குறிப்பிடப்படுகிறது. சோழர்கள் காலத்தில் சீன அரசர்களுக்கு பரிசாக கிராம்பு பன்னீர் காண்டாமிருகத்தின் பல் மிருதுவான துணி மற்றும் பெருங்காய கட்டிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிற் கால ஐரோப்பியர்கள் இதை சாத்தானின் மலம் என்று கூறுகின்றனர். சற்று அதிக சுவையுடைய எதையுமே அவர்கள் அப்படித்தான் குறிப்பிடுவர். இந்தியாவின் அலங்காரங்களும் அவர்களுக்கு அவ்வாறுதான் சாத்தானின் வெளிப்பாடாக தெரிந்தது.
பல நாடுகளில் பல்வேறு மருத்துவ காரணங்களாக பயன்படுத்தப்பட்ட பெருங்காயம் இந்தியாவில் சமையலுக்கும் அஜீரண கோளாறை சரி செய்யும் மருந்தாகவும் ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. மூன்று அல்லது ஐந்து அடி உயரம் உடையதாகவும் மிருதுவான தண்டுகளையும் மஞ்சள் நிற பூக்களையும் கொண்டிருக்கும் நீண்ட கால பயிரான பெருங்காய செடியில் நட்டதிலிருந்து ஐந்து ஆறு ஆண்டுகள் கழித்து அதன் வேர் பகுதியை கீரி மண் வைத்து மூடி விடுவர் பிறகு மூன்று நாள் கழித்து அதிலிருந்து வெளியேறும் பிசினை சேகரிப்பர். பின் மீண்டும் அவ்விடத்தை கீரி இவ்வாறு மூன்று அல்லது நான்கு மாதங்களில் ஒரு கிலோ வரை பிசினை எடுப்பர். வேரை கீறி காயப்படுத்தி எடுக்கப்படுவதால் தான் இதை பெருங்காயம் என்று தமிழில் அழைக்கின்றனர். இந்தியாவில் சோதனை முயற்சியாக பெருங்காயம் வளர்க்கப்பட்டு தோல்வியடைந்து விட்டது இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் இப்பொழுது வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் வெற்றி பெறுமா என்று சில ஆண்டுகள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
6. ஆலிவ்கனி மரம்
மனி வரலாற்றில் ஆலிவ் மரம் அளவிற்கு கொண்டாடப்பட்ட மரம் இல்லை. ஆலிவ் பற்றிய தொன்மம் கிரேக்க புராணங்களில் இருந்து நமக்கு கிடைக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு நகரத்தின் தெய்வமாக யார் ஆவது என்று ஞானத்தின் கடவுளான ஏத்தினாவுக்கும் கடலின் கடவுளான பொசைடனுக்கும் போட்டி ஏற்படுகிறது. அந்நகரத்தின் மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் பேரிலேயே அந்த நகரம் அழைக்கப்படும் என்று முடிவாகிறது. பொசைடன் தன் சூலத்தை நிலத்தில் குத்தி ஒரு உப்பு நீர் ஊற்றை உருவாக்குகிறார் அதிலிருந்து நீர் நிலத்தில் வழிந்து ஓடுகிறது. ஆனால் ஏதினா ஒரு சிறு செடியை நட்டு வைக்கிறார் அது கிளை விட்டு வளர்ந்து கனிகளை கொடுக்கிறது அந்த செடிதான் ஆலிவ் மரம். மக்களுக்கு ஊற்றை விட மரம் பிடித்துப் போகவே அந்த நகரத்திற்கு ஏத்தேன்ஸ் என்று பெயர் வைக்கிறார்கள். அந்த மரமும் அவர்களது சின்னமாக மாறுகிறது. பிற்காலத்தில் பெர்சிய படையெடுப்பில் ஏத்தேன்ஸ் நகரம் சூறையாடப்பட்டு அவர்களின் சின்னமாக இருந்த ஆலிவ் மரம் தீ வைத்து கொளுத்தப்பட்ட பொழுதும் அடுத்த நாளே அந்த மரம் ஒரு அடி வளர்ந்ததாக தொன்மம் கூறுகிறது. சாம்பலில் இருந்து மீண்டும் எழும் கிரேக்கர்களின் குறியீடாகவே இது கூறப்படுகிறது. இன்றும் அந்த கோட்டைக்குள் இருந்த ஆலிவ் மரத்திலிருந்து கிளைகள் எடுத்து வைக்கப்பட்டு அதே ஆலிவ் மரம் இன்று வரை பராமரிக்கப்படுகிறது. புராணங்களில் மட்டுமல்லாமல் மக்களிடையே பேச்சு மொழி கதைகளாகவும் பல கதைகள் ஆலிவ் மரம் குறித்து உலாவுகிறது அதில் ஒன்று ஐரோப்பாவின் மிக வயதான ஆலிவ் மரம் இத்தாலி நகரம் டஸ்கனில் உள்ளது இந்த மரம் ஒரு தேவாலயத்தின் பின்புறம் உள்ளது 3500 வருட வயதுடையது இம்மரம் இதில் வருடத்தின் குறிப்பிட்ட நாளில் சூனியக்காரிகளும் மனித மிருக உருவம் உள்ள பிசாசுகளும் கோடி தங்களுள் வலிமையானவர் யார் என்பதை தேர்ந்தெடுத்து நடனமாடும் என்றும் அடுத்த ஒரு வருடம் அந்த சூனியக்காரி பூனையாக மாறி அந்த மரத்திற்கு காவல்ிருப்பர் என்றும் கூறுவர்.
நோவாவிற்கு உலகில் நிலப் பகுதி இருப்பதை அறிவிப்பதை போல வரும் கதையில் புறா ஒன்று ஆலிவ் இலையை வாயில் கவ்வியவாறு வரும். அமெரிக்காவின் முதல் அதிகாரப்பூர் சின்னத்தில் கழுகு தன் காலில் ஆலிவ் கிளையை கவ்வியிருப்பதைப் போல இருக்கும் வலிமை மற்றும் அமைதியை உலகிற்கு சொல்லும் சின்னம் இது. வெற்றி வீரர்களின் தலையில் ஆலிவ் கிளைகள் கிரீடங்களாக சூட்டப்படும். நம்பிக்கைக்குறிய நண்பர்கள் தங்களுக்குள் கொடுத்துக் கொள்ளும் பரிசாக ஆலிவ் கிளைகள் உள்ளன. பைபிள் குர்ஆன் போன்ற புனித நூல்களிலும் ஆலிவ் மரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
6000 வருடங்களாக ஆலிவ் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன கிரேக்கத்திலிருந்து இத்தாலி மற்றும் ஸ்பெயினுக்கு ஹாலிவுட் பரவியது ஆனால் இன்று உலகின் முன்னணி ஆலிவ் எண்ணெய் உற்பத்தியாளராக ஸ்பெயின் இட்டாலி அதன் பிறகு கிடைக்கும் வருகிறது. ஆலிவ் எண்ணெய் சமையலுக்கு மட்டும் அழகு சாதன பொருட்களாக உலகின் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் இதை இடலிமரம் விரலிக்காய் மரம் என்று கூறுவர். இந்தியாவில் இதன் பயன்பாடு அநேகமாக இல்லை என்றே கூறலாம் தற்பொழுது சமையல் எண்ணையாக இவை உயர்குடியினரால் பயன்படுத்தப்படுகிறது. ஆலிவ் மரம் விதையிலிருந்து முளைக்காது வேர்கள் தண்டுகள் மூலம் முளைக்கும் தன்மையுடையவை. சராசரியாக 500 600 ஆண்டுகள் வாழும், ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழும் பல மரங்கள் உலகத்தில் உள்ளன.
7. சந்தனம்
இந்தியா மீது படையெடுத்த கஜினி முகமது சோம்நாத் கோவிலில் இருந்த சந்தன மரத்தால் செய்யப்பட்ட கதவுகளை தன் நாட்டிற்கு எடுத்துச் சென்றார் அது அவரது கல்லறையில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் 1842 ல் இந்தியாவிலிருந்து ஒரு படை கஜினி முகமதின் கல்லறையில் இருந்து அந்தக் கதவுகளை மீட்டு ஆக்ரா கோட்டைக்கு கொண்டு வந்தது கொண்டு வந்த பிறகு தான் தெரிந்தது அவை போலீகள் என்று என்றும் ஆக்ரா கோட்டையில் அவை கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நறுமணம் என்றே நாம் சந்தன த்தை குறிப்பிடலாம் அந்த அளவிற்கு இந்திய புராணங்களிலும் சமய சடங்குகளிலும் மக்களாலும் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு நறுமணப் பொருள் சந்தனமாகும். இந்த அதீத முக்கியத்துவத்தாலேயே அதிகமாக நுகரப்பட்டு இன்று அழிவின் விளிம்பில் இருக்கிறது ஆஸ்திரேலிய ஹவாய் போன்ற நாடுகளில் இருந்து பெருமளவில் ஆன சந்தன மரங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன எனினும் அங்கும் அதிக நுகர்வால் அழிந்து பின்பு பலரது முயற்சியால் மீண்டும் வளர்க்கப்பட்டு இன்று நிலையான ஒரு உற்பத்தியை அவர்கள் அடைந்து இருக்கிறார்கள். இந்தியாவில் கடந்த 10 15 ஆண்டுகளாகத்தான் தனியா நிறத்தில் சந்தனம் வைக்கும் இயக்கம் தொடங்கப்பட்டு ஏறத்தாழ 22,000 எட்டேரில் வளர்க்கப்பட்டு வருகிறது இவை பலன் தருவதற்கு இன்னும் சில காலம் பிடிக்கலாம். ஆஸ்திரேலியா ஹவாய் போன்ற நாடுகளில் சந்தன மரம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டாலும் இந்திய சந்தனமே முதல் தரமானது சந்தனத்திற்கு நறுமணம் தரும் santalol என்ற வேதிப்பொருள் ஆஸ்திரேலியா சந்தனத்தில் 40% என்றால் இந்திய சந்தன மரத்தில் 90 சதவீதம் உள்ளது. ஹவாயில் சந்தன மரம் வெட்டி எடுக்க கூலிகள் ரத்தம் சிந்தி உழைத்தனர் அந்த சோக வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளை சந்தனம் என்பது மிக அரிதான ஒன்று இலட்சத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மரங்கள் தான் வெள்ளை சந்தனம் இருக்கும். அதில் செய்யப்படும் இறை விக்ரகங்கள் மிகுந்த மதிப்பு மிக்கவை என்று கூறப்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகளவில் சந்தன மரம் வளர்ந்தாலும் கர்நாடக மாநிலமே சந்தன மர உற்பத்தியில் முதன்மையில் இருக்கிறது. Chadi என்ற மகிழ்வு என்ற அர்த்தம் தரும் சமஸ்கிருத சொல்லின் வேரிலிருந்து தான் தமிழ் வார்த்தையான சந்தனம் தோன்றியது.
மற்றொரு சுவாரசியமான விஷயம் திப்பு சுல்தான் தன் ஆட்சிக்கு உட்பட்ட நிலத்தில் சந்தன மரங்களை வெட்டுவதை தடை செய்திருந்தார் அவரது அரண்மனையில் ஏராளமான சந்தன மரக்கட்டைகளை சேகரித்து வைத்திருந்தார்.
8. யூகலிப்டஸ்
Murray Bail ஆஸ்திரேலியரான இவர் ஒரு நாவலாசிரியர். 1998 இல் இவர் எழுதி வெளியிட்ட நாவலின் பெயர் ‘யூகலிப்டஸ்”. பல விருதுகளை வென்ற புகழ்பெற்ற நாவல் இது. அந்த நாவலில் ஹாலண்ட் என்பவர் பிரசவத்தில் தன் மனைவி இறந்து விடவே தனது மகள் எலனுடன் ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய யூகலிப்டஸ் பண்ணை ஒன்றை அமைத்து வாழ்ந்து வருகிறார். யூகலிப்டஸ் மீது பெரும் பித்து கொண்ட அவர் 200 வகைக்கும் மேற்பட்ட யூகலிப்டஸ் விதைகளை வாங்கி தன் பண்ணையில் நட்டு வளர்க்கிறார். அந்தப் பண்ணையில் வளரும் அவரது மகள் எலன் பேரழகி. திருமண வயது வந்த அவளை மணக்க ஹாலண்ட் ஒரு வினோதமான போட்டியை அறிவிக்கிறார். தன் பண்ணையில் இருக்கும் 200 யூகலிப்டஸ் மரவகைகளை சரியாக அடையாளம் கண்டு செல்பவருக்கு எலனை மணமுடித்து தருவேன் என்கிறார். போட்டியில் பலர் பங்கெடுத்தாலும் யாராலும் வெல்ல முடியவில்லை. எலனும் யூகலிப்டஸ் மரக்காடுகளிலேயே சுற்று திரிகிறாள். அப்பொழுது அங்கு வசீகரமான ஒரு இளைஞனை பார்த்து காதல் வயப்படுகிறாள். அதே நேரத்தில் எல்லா மர வகைகளையும் இனம் காணும் அபார திறமை பெற்ற கோக் என்ற இளைஞன் அவள் தந்தையின் போட்டியில் வென்று விடுகிறான். இறுதியில் எலன் தன் மணம் கவர்ந்தவனை மணம் முடிக்கிறாளா இல்லை போட்டியில் வென்றவனை மணம் முடிக்கிறளா என்று அந்த நாவல் முடியும். ஆஸ்திரேலியாவையும் யூகலிப்டஸ் மரத்தையும் பிரிக்க முடியாது. ஏனெனில் ஆஸ்திரேலியாவின் 70% இருப்பது யூகலிப்டஸ் மரம் தான். சுமார் 20 மில்லியன் ஆண்டுகளாக அந்த நிலத்தில் யூகலிப்டஸ் மரம் வளர்ந்து வருகிறது உலகில் இருக்கும் 800 யூக்கலிப்டஸ் சிற்றின வகைகளில் பெரும்பாலானவை ஆஸ்திரேலியாவை சேர்ந்தது ஒரு சிலவே கினியா மற்றும் நியூசிலாந்தை சேர்ந்தவை. அங்கு வசித்த ஒரே பழங்குடிகள் யூகலிப்டஸ் மரத்தில் இருந்து தங்களுக்கு தேவையான உபகரணங்களையும் அதன் பட்டையை உரித்து மரக்கலன்களையும் செய்து பயன்படுத்தி வந்தனர் மேலும் பெரிய யூகலிப்டஸ் மரத்தின் பட்டையை சிறிய படகு போலவும் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
1770களில் ஐரோப்பியர்கள் குடியேறிய பொழுது அவர்கள் மூலம் யூகலிப்டோப்ஸ் விதைகள் உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது. இந்தியாவில் திப்பு சுல்தானால் யூகலிப்டஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்ப காலத்தில் நீலகிரி தேயிலை தோட்டங்களில் காற்று தடுப்பு மரமாக அறிமுகப்படுத்தப்பட்ட இம்மரம் பின்பு இதன் வேகமாக வளரும் தன்மை வறட்சியை தாங்கும் தன்மை ஆகியவற்றால் சமவெளி பகுதிகளிலும் திருமளவில் வளர்க்கப்படுகிறது. சீமை கருவேலம் போலவே இம்மரத்தையும் சுற்றி ஆதாரமற்ற அறிவியலுக்கு புறம்பான பல கட்டுக்கதைகள் உள்ளன அதாவது இந்த மரம் அதிக அளவிலான நீரை உறிஞ்சும் நிலத்தின் வளத்தை இல்லாமல் ஆக்கும் போன்ற செய்திகள் பரப்பப்படுகிறது. ஆனால் எந்த உறவு அறிவியல் ஆய்வும் இந்த கூற்றை ஆதரிப்பதில்லை இதன் ஆணிவேர் ஐந்து அடிக்கு கீழ் செல்வதில்லை பிற அனைத்து வேர்களும் அதிகபட்சமாக 20 அடி வரைதான் செல்லும். பிற மரங்கள் எந்த அளவு நீரை உறிஞ்சுமோ அவ்வளவு தான் இதுவும் உறிஞ்சுகிறது. மண்ணை வளம் அற்றதாகும் என்பதற்கும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை அப்படி இம்மரம் செய்வதும் இல்லை. வேகமாக வளரும் எதையும் கண்டு நம் மக்கள் கொள்ளும் அச்சம் தான் இம்மரத்தை சுற்றியும் உள்ளது.
9.ரிஸின்
1978-ல் லண்டனில் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் பிபிசியில் பல்கிரிய பிரிவு ஊடகத்துறையில் பணியாற்றும் மார்க்கோ என்பவர் ஒரு இத்தாலிய கொலையாளியாள் நஞ்சுட்டப்படுகிறார். ஒரு மில்லி மீட்டர் அளவுள்ள மிக நுண்ணிய உலோக உருண்டையில் ரிஸின் எனப்படும் நஞ்சை தேக்கி சிறிய ஊசி மூலம் அவர் தொடை வழியாக உள்ளே செலுத்தி அவரைக் கொள்கிறார்கள். இது மட்டுமல்ல நெல்சன் மண்டேலாவின் உதவியாளர் ஒருவரும் இதே வகை ரிசின் நஞ்சை செலுத்திக் கொள்ளப் பட்டிருக்கிறார். வரலாற்றில் அரசியல் ரீதியாக பல கொலைகள் தாவர நஞ்சை பயன்படுத்தி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ரெசின் நஞ்சு ஏதோ மலை உச்சியில் அமைந்திருக்கும் அபூர்வ தாவரத்தில் இருந்து பெறப்படுவது அல்ல கிராமங்களில் அன்றாடம் காணும் ஆமணக்கு விதையின் சதைப்பகுதியில் இருந்து பெறப்படும் ஒரு நஞ்சு என்பது மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.
அதன் ஆபத்தை உணராமல் இட்லி மிருதுவாக வர வேண்டும் என்பதற்காக ஆமணக்கு விதைகளை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். என்பது டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் அந்த நஞ்சு செயலிழந்து விடும் என்றாலும் இது குறித்த புரிதல் நமக்கு இருக்கிறதா என்பதை கேள்வி. விளக்கெண்ணெய் பிரித்து எடுக்கும் பொழுது உருவாகும் வெப்பத்தினால் அந்த நஞ்சு செயலில் இருந்து விடுவதால் விளக்கெண்ணெய் பயன்பாடு பாதுகாப்பானது தான் ஆனால் என்னை பிரித்து எடுத்த பின் வரும் கழிவு அதாவது புண்ணாக்கு நச்சுத்தன்மையுடன் இருக்கும். வாழ்வளிக்கும் பல்லாயிரம் தாவரங்கள் நம்மை சுற்றியுள்ளன அதேபோல் உயிரைப் பறிக்கும் நஞ்சம் தாவரங்களில் உள்ளதை நாம் அறிய வேண்டும்.
10. தொன்மங்களில் தாவரங்கள்
உலகின் அனைத்து சமூகங்களிலும் தாவரங்கள் சடங்கு முக்கியத்துவம் கொண்டதாகவும் வழிபடப்படுவதாகவும் இருப்பதை இக்கட்டுரை விளக்குகிறது அரசமரம் ஆலமரம் வேப்பமரம் போன்றவை இந்திய சமூகங்களில் தெய்வமாகவே வணங்கப்படுவது. கிறிஸ்தவ துன்பங்களின் படி இலைய நுனியில் சிவப்பு இருக்கும் பல தாவரங்களை இயேசுவின் குருதிப்படைந்து அப்படி ஆகியது என்ற பெயரில் அழைப்பர் கொள்முதல் மலரை கேரளத்தில் கல்வாரி மலர் என்று அழைக்கின்றனர். இஸ்லாத்திலும் பழம் தரும் மரங்களை நட்டு வளர்ப்பது அதிலிருந்து கனிகளை பெறுவது அல்லாஹ்வின் நேரடி கருணை என்றும் பல மரங்களை வெட்டுவது பாவத்துக்கு உரிய செயலகம் கூறப்பட்டுள்ளது. பௌத்தத்தில் அரசமரம் புத்தரின் வாழ்வோடு நெருங்கி தொடர்புடையது. தமிழ் மரபில் சங்க பாட்டில் தான் நட்டு வளர்த்த புன்னை மரம் தனக்கு தங்கை போன்றது என்று கூறி அம்மறத்தடியில் காதல் கொள்ள நானும் தலைவி குறித்து வருகிறது. மேலும் சங்க பாட்டில் பல தாவரங்களின் தன்மைகள் உவமைகளாக எடுத்தாளபட்டுள்ளன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பல தாவரங்கள் இருக்கையில் சில தாவரங்கள் நச்சுத்தன்மை உடையது, அதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். உதாரணமாக ரெசின் என்ற நச்சுப்பொருள் நிறைந்த ஆமணக்கு விதையின் சதைப்பகுதி, தெரியாமல் கடித்தால் உயிரை பறிக்கும் குன்றிமணி, நீண்ட கால பயன்பாட்டில் விந்துக்களின் அளவையும் பாலுணர்வையும் மட்டுப்படுத்தும் துளசி, பொன்னரளியின் விதையில் உறைந்திருக்கும் விஷம், காந்தள் மலரின் விதைகளும் விஷம், பல கிழங்குகள் விஷத்தன்மை கொண்டவை, குங்கும பூவை அதிக அளவில் எடுத்தால் அவை கருச்சிதைவையே உருவாக்கும் போன்ற எச்சரிக்கைக்குரிய விஷயங்களையும் நாம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
11. காடழித்தலும் காலநிலை மாற்றமும்
நாம் சாதாரணமாக கடந்து செல்லும் எந்த ஒரு நாளில் ஒரு கால்பந்து மைதானம் அளவிற்கான காடு உலகில் எங்கோ அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது இன்னும் தகவல் அதர் செழிக்க கூடியதாக உள்ளது. உலகச் சமநிலையை பேணும் காடுகள் கடந்த நூறாண்டுகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக அளிக்கப்பட்டிருப்பதை இந்த கட்டுரை சுட்டிக்காட்டுகிறது சூழ்நிலை அறிந்திருப்பது அதை பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. நமக்காகவும் நம் எதிர்கால சந்ததிக்காகவும் காடுகளை மீட்டு உருவாக்கம் செய்வதின் அவசியத்தை இந்த கட்டுரை உணர்த்துகிறது.
வாசிப்பு
தாவரங்கள் குறித்த கட்டுரை தொகுப்பில் திப்பு சுல்தான் இரண்டு முறை இடம்பெறுவார் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஆங்கிலேயருக்கு எதிரான கலககாரனாகவும் போர் களத்தில் மடிந்த பெருவீரனாகவும் எனக்குத் தெரிந்த திப்பு தான் தன் ஆட்சிகாலத்தில் சந்தன மரங்கள் வெட்டப்படுவதை தடைசெய்யும் ஆணை பிறப்பித்து காத்தவர் என்றும் இந்தியாவிற்கு முதன் முதலில் யூகலிப்டெப்ஸ் மரத்தை அறிமுகப்படுத்தியவர் என்பதும் மிகப் புதிய செய்தி. “தந்தை பெருமரம்” என்ற இக்கட்டுரை தொகுதியில் 11 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன அவற்றில் பத்து கட்டுரைகள் தாவரங்கள் குறித்தும் ஒரு கட்டுரை சூழியல் குறித்தும் உள்ளது. என்னுள் தன்னரம் நூல்வெளி மற்றும் மனு அறச்சாலை என்ற அமைப்பின் மூலம் விலையில்லா பதிப்பாக அச்சிடப்பட்டு கொடுக்கப்பட்டது. இந்த நூலின் அட்டையை வழக்கமாக இருக்கும் நெகிழிக்கு பதில் எளிதில் மக்கும் காகிதால் உருவாக்கி இருக்கிறார்கள்.
இக்கட்டுரை தொகுதியின் சிறப்பம்சம் என்பது தாவரங்கள் குறித்து வெறும் தகவல்களை மட்டும் சொல்லாமல் ஒவ்வொரு தாவரங்களை அதனோடு சேர்த்த வரலாற்று செய்திகளுடனும் உணர்வுபூர்வமான சம்பவங்களுடனும் கலந்து சொல்வது தான். சூழியல் மற்றும் தாவரங்கள் பற்றி தகவல்களை மட்டும் சொல்லும் சில புத்தகங்களை நான் வாசித்துள்ளேன் ஆனால் அவை எவையுமே இன்று என் நினைவில் நீடிக்க வில்லை. அதற்கு காரணம் தகவல்கள் அனுபவமாகாமல் போவது தான் என்று நினைக்கிறேன். ஆனால் லோகமா தேவி அவர்களின் இக்கட்டுரைகளில் ஒரு தாவரத்தை குறிப்பிட்ட உணர்வுநிலையுடன் சேர்த்து விவரிக்கிறார் உதாரணத்திற்கு மடகாஸ்கரை பூர்வீகமாகக் கொண்ட பாவோபாப்(Baobab) மரத்தை தந்தை பெருமரம் என்று கூறி அதனுடன் தொடர்புடைய அனைத்து ஆப்ரிக்க தொன்மங்களை கூறுவதன் வழியாக நாம் அதை பெருந்தந்தை என்றே உணரத்தொடங்குவோம். மற்றொரு உதாரணம் சீமை கருவேலம் மற்றும் யூகலிப்டஸ் மரங்களை சில ஆண்டுகளாக நமது ஊடகங்களும் சில அமைப்புகளும் எதிர்மறையாக சித்தரித்து அதை வேரோடு அழிக்க வேண்டும் என்ற கருத்து பரப்பப்பட்டது. இக்கருத்துக்கள் முற்றிலும் அறிவியல் ஆதாரமற்றவை என்றும் அந்த மரங்கள் அப்படி ஒன்றும் அதிக நீரை உறிஞ்சி மண்வளத்தை கெடுப்பது அல்ல என்று ஆசிரியர் விளக்குகிறார். மாறாக இந்த இரண்டு மரங்களும் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு விறகு தேவைகளுக்காக பனை வேம்பு போன்ற நாட்டு மரங்கள் வெட்டப்படுவது குறைந்து அவை காக்கப்பட்டன என்றும் வறண்ட நிலத்திலும் பசும்பரப்பை உருவாக்குவதில் இம்மரங்கள் ஆற்றிய பங்கையும் விவரிக்கிறார். பலன் முடிந்த பின் கைவிடப்படும் ஒன்றின் குறியீடாக இந்த இரண்டு மரங்களும் என்னுள் பதிந்து விட்டன. எனது கல்லூரி காரங்களில் இந்த பிரச்சாரங்களை நம்பி நானே பலநூறு சீமை கருவேல மரங்களை வெட்டி இருக்கிறேன். அம்மரங்களிடம் இன்று மானசீகமாக மன்னிப்பு கோருகிறேன்.
வெண்முரசு வாசித்தவர்கள் “மரவுரி” என்ற சொல்லை அதிகம் கேள்விப்பட்டிருப்பர் அது குறித்தும் ஒரு கட்டுரை விரிவாக விளக்குகிறது. மலேரியாவில் இருந்து பல நூற்றாண்டுகள் உலகை காத்த “சின்கோனா”, நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆனால் இந்தியாவிலேயே விளையாத “பெருங்காயம்”, கிரோக்க தொன்மத்தின்படி ஞானத்தின் கடவுள் ஏத்தினாவால் வளர்க்கப்பட்ட “ஆலிவ்”, இந்தியாவின் வாசனையென்றே சொல்லத்தக்க “சந்தனம்”, கிராமங்களில் நம்மைச் சூழ்ந்திருக்கும் ஆமணக்கு விதையில் உறைந்திருக்கும் ஆளைக் கொல்லும் விஷமான “ரிஸின்”, மதங்களிலும் சடங்குகளிலும் முக்கியத்துவம் பெறும் தாவரங்கள் குறித்து என ஒவ்வொரு கட்டுரையும் மிக விரிவான வரலாற்று மற்றும் தாவரவியல் தகவல்கள், தொன்மங்கள் என சுவாரஸ்யமான வாசிப்பை தருவது.
இன்றைய தாவரவியல் அறிவுத்துறை என்பது தாவரங்கள் குறித்த செய்தியோடு மட்டுமல்லாமல் சூழியல் பாதுகாப்பையும் சேர்த்து தான் இருக்க முடியும் என்பதை இறுதிக் கட்டுரை கூறுகிறது. நாம் எளிதாக கடந்த செல்லும் இந்த ஒரு நாளில் உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவிற்கான காடுகள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கும் என்ற செய்தி நம்மை பதை பதைப்பில் ஆழ்த்துகிறது. நாம் வசிக்கும் ஊர் நமக்கு உணவளிக்கும் வயல் எல்லாம் முன்பு காடாக இருந்தவைத்தான் என்றெண்ணும் போது காட்டழிப்பின் பாவக்கரை நம் ஒவ்வொருவரின் கைகளிலும் உள்ளது. அதனால் நாம் ஒவ்வொருவருக்கும் சூழியலை பாதுகாக்கும் பொறுப்புணர்வும் உள்ளது. தந்தை பெருமரம் எனும் பவோபாப் மரங்களின் புகைப்படங்களை இணையத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன் அவை ஒவ்வொன்றும் பிரம்மாண்டமான கைகள் வானை நோக்கி இறைஞ்துவதைப் போல எனக்கு தோன்றியது, எங்கள் பாவங்களுக்காகவா இறைஞ்சுகிறீர் தந்தையே?
- லால்குடி தினேஷ்
lalgudidinesh@gmail.com

Comments
Post a Comment