சித்தாந்தம் இணைய இதழில் அடியேனின் முதல் மொழிபெயர்ப்பு கட்டுரை பிரசுரமாகியுள்ளது.
நண்பர்கள் பவித்ரா, முத்துமாணிக்கம் மற்றும் அவிநாசி தாம்ரைக்கண்ணன் இணைந்து உருவாக்கும் சித்தாந்தம் இணைய இதழ் சைவ சித்தாந்தம் குறித்த உரையாடலை முன்னெடுக்கிறது. இந்த இதழில் மறைந்த அறிஞர் JM நல்லுசாமி பிள்ளை அவர்களின் studies in saiva siddhantha நூலில் உள்ள அஷ்டமூர்த்தம் ஆங்கில கட்டுரையை தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறேன்.
JM நல்லுசாமி பிள்ளை, வழக்கறிஞர், சைவ சமய அறிஞர். சித்தாந்த தீபிகா இதழில் இவரது பல கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. இவரது கட்டுரைகள் studies in saiva siddhantha நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
மூல கட்டுரை, செறிவான கச்சிதமான மொழிநடை, பல வடமொழி நூல்கள் மற்றும் சாத்திர நூல்களின் குறிப்புகளுடன் அஷ்ட மூர்த்தி தத்துவத்தை விளக்குவது. முதல் மொழிபெயர்ப்பு முயற்சி என்பதால் அதிக உழைப்பை கோரியிருந்தாலும் முடித்த பின் நிறைவாக இருந்தது. வாசித்து திருத்தங்கள் சொன்ன நண்பர்கள் ஸ்வேதா, பவித்ரா, லால்குடி தினேஷ், முத்துமாணிக்கம் அனைவருக்கும் நன்றியும் அன்பும்.
இந்த இதழில் தியான ஆசிரியர் தில்லை செந்தில் பிரபு அவர்களின் இருள் வெளி ஒளி தொடரும், தாமல் கோ சரவணனின் ஐந்தொழில், அருணாசலம் மகராஜனின் துரியம் கடந்த சுடரின் 10வது அத்யாயமும், அருணை வடிவேல் முதலியாரின் சித்தாந்த வினா விடை பகுதியும் உள்ளன. நண்பர்கள் வாசிக்கலாம்.
JM நல்லுசாமி பிள்ளை தமிழ் விக்கி - தமிழ் விக்கி சுட்டி
JM நல்லுசாமி பிள்ளை சித்தாந்தம் இதழ் கட்டுரை - https://www.siddhantham.in/2024/12/blog-post_18.html
கட்டுரை சுட்டி - https://www.siddhantham.in/2026/10/blog-post.html

Comments
Post a Comment