Skip to main content

உலக அரங்கில் நம்மை முன்வைத்தல் !!


தமிழிலக்கியத்தில் சிற்றிதழ் சூழலுக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. கறாரான அளவுகோல்களுடன் அவை தங்களுக்குள் உரையாடிக் கொள்பவை. அந்த உரையாடல்களே விமர்சன மரபை உருவாக்கி நிலை நிறுத்தின. சமீபத்தில் புக்கர் விருது பெற்ற பானு முஷ்டாக் அவர்களின் புத்தகம் நம்முடைய அளவுகோலில் ஒரு குழந்தை விளையாட்டு என்று கூட மதிப்பிட தக்கதல்ல. 

பேரிலக்கியங்களை தன் சொந்த மொழியிலேயே வாசிக்கும் பெரும் பேறு பெற்ற சில இனங்களில் ஒன்று தமிழினம். அதை எத்தனை பேர் வாசிக்கிறோம் எனது பெரிய கேள்வி வாசிப்பவரும் மற்ற பண்பாட்டின் முன் அதை முன்வைப்பதில்லை. ஆனால் நமது சாதனைகள் பலவும் இந்திய மொழிகளுக்கே தெரியாத நிலையில் தற்பெருமை பேசும் குழுவாக இன்றும் இருக்கிறோம். உலக மொழிகளுக்கும் தமிழ் பண்பாட்டிற்குமான இடைவெளியை குறைக்கும் பொருட்டு விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் southboundreview என்ற வாராந்திர ஆங்கில இணைய இதழை தொடங்கியுள்ளனர். ஆசிரியர்கள் பலர் நம் நண்பர்கள். அடுத்த பத்தாண்டுகளாவது தொடர்ந்து இந்த இதழ் வெளி வரவேண்டும் என்னும் முனைப்புடன் பெரும் பணியை தொடங்கி இருக்கின்றனர்.  

ஒவ்வொரு ஞாயிறும் ஒரு இதழ் வெளி வருகிறது. தீவிர இலக்கியம், திரைப்படம், கலை, பண்பாட்டு விவாதங்கள் என இணையத்தில் உள்ள நடுத்தர இதழ் என்ற வகைமையில் கட்டுரைகள், ஆளுமைகளின் நேர்காணல்கள் இடம்பெறுகின்றன. சமீபத்தில் சென்னையில் நடந்த தேவநாயகி கருத்தரங்கம் குறித்த எதிர்வினைகள் முதல் இரண்டு இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன. நண்பர்கள் வாசிக்கலாம், தமிழ் தெரியாத நண்பர்களுக்கும் பகிரலாம். பாரதி "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்பீர்" என்றார். போதுமான அளவிற்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டோம், இது கொண்டு கொடுப்பதற்கான காலம் !

இதழ் சுட்டி - https://www.southboundreview.com/
 

Comments

Popular posts from this blog

செய்நன்றி ❤️✨

எனது கல்லூரி துறைத்தலைவர் இப்போது Pollachi Institute of Engineering and Technology கல்வி ஆலோசகராக பணியாற்றுகிறார். அவர் அழைப்பின் பேரில் Pollachi Institute of Engineering and Technology என்ற கல்லூரியில் சென்ற திங்கள் அன்று முதலாம் ஆண்டு, மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களிடம் உரையாற்றினேன். இதை சொன்னபோது சில நண்பர்கள் ஆர்வத்துடன் என்ன பேசப்போகிறேன் என்று கேட்டனர், 2 நாட்கள் உழைத்து தயார் செய்த உரையென்பதாலும் பொதுவான உரையென்பதாலும் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் ஆற்றிய உரையை இங்கு எழுதுகிறேன். (இது உரையின் எழுத்து வடிவம், சென்ற வாரம் கேட்டுக்கொண்டார்கள் என்பதை, “போன வாரம் கேட்டாங்க” என்று வாசிக்கவும்)  Dear Boys and girls சென்ற வாரம் mam அழைத்து முதலாம் ஆண்டு மாணவர்களிடம் பேசவேண்டும் என்று சொன்னபோது நான் கேட்ட முதல் கேள்வி ஆங்கிலத்திலா தமிழிலா என்று, பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள் அதனால் தமிழ் ஆங்கிலம் கலந்து பேசும்படி சொன்னார். முழுதும் தமிழில் பேசினாலும் செயற்கையாக இருக்கும், முழுதும் ஆங்கிலத்தில் பேசினாலும் பின் தொடர்வதில் சிக்கல் இருக்கும். மறுநாள் தான் ஒப்புக்கொண்ட...

தில்லை அகப்பயணம் ✨ 🤍

      தில்லை கிழக்கு கோபுரம்             ஆலயக்கலை ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன்  ஜனவரி 17-19, 2025  ஆகிய தேதிகளில்  சிதம்பரம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளுக்கு  சென்றுவந்த  பயணக்கட்டுரை.            தில்லை அம்பலம் என்பது ஆதி சன்னிதானம். திருவாசக வகுப்பிலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒற்றை இறகை போல நாவில் வந்தமரும் சொல்  திருச்சிற்றம்பலம்.  சைவர்களுக்கு அம்பலத்தாடும் இறைவன் முது மூத்தோன்.           மார்கழி விட்டு வைத்த பனி மிச்ச மீதியாக காற்றில் உறைந்திருந்தது. பிற்பகல் 1.30 மணிக்கு சிதம்பரம் ரயில் நிலையத்தில் குழுமி அங்கிருந்து தங்குமிடம் செல்வதாக முடிவு. ஆர்வ மிகுதியில் நான் தனியாக ஒரு சுற்று சென்று வரலாமென்று காலை 5.30 மணிக்கு மத்திய ரயில் நிலையத்தில் ரயிலேறி 7.30க்கு சிதம்பரம் சென்றுவிட்டேன். பயணம் முழுக்க இளம்பச்சை போர்வை இருமருங்கிலும். தஞ்சாவூர் நிலையத்தருகில் பெருவுடையார் கோயில் விமானம், மாயவரம் தாண்டும்போது மயூரநாதர் கோயில், வைத்தீ...

குடமுழா குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்குறிப்பு

குடமுழா - நூல் குறிப்பு                     இந்திய வரலாறு குறித்து ஆய்வு முறைகள் 4 நிலைகளை கொண்டது. எழுத்தாளர் ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்த பாராட்டு விழா உரையில் தமிழக, இந்திய வரலாற்று எழுத்தின் முறைகளை இப்படி குறிப்பிடுகிறார்.  காலனியதிக்க வரலாறு - James Miller, JH Nelson போன்ற ஆங்கிலேயர்கள் இந்தியாவை குறித்து எழுதிய புறவயமான ஆய்வு முறை தேசிய வரலாறு - இந்தியர்கள் KA நீலகண்ட சாஸ்திரி TV சதாசிவ பண்டாரத்தார் போன்ற அறிஞர்களின் கல்வெட்டு ஆய்வு முறை.  சமூக வரலாறு - Noboru karashima, Burton stein, KK பிள்ளை  போன்ற அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தில் இருந்த சமூக அமைப்பு, சாதி அமைப்பு குறித்து  செய்த பண்பாட்டு ஆய்வு முறை.   நுண் வரலாறு - ஒரு குறிப்பிட கூறை எடுத்துக்கொண்டு அதனை விரிவாக்கி ஆய்வுக்குட்படுத்துவது.           பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் நான்காவது முறையை சார்ந்தவர். தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழீஸ்வரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் போன்ற பெருங்கோ...