குருகு 28வது இதழில் திருவானைக்கா சுந்தரபாண்டியன் கோபுரம் குறித்த அடியேனின் கட்டுரை ஆங்கில மொழியாக்கத்தில் பிரசுரமாகியுள்ளது.
எங்கள் கோயில் முழுவதிலும் பிடித்த இடமாக சுந்தரபாண்டியன் கோபுரம் சிறு வயதில் இருந்தே போர் அடித்தால் சென்று அமரும் இடமாக இருந்தது. நெடிந்து நிற்கும் அதன் பிரம்மாண்டம், பெயர் தெரியாத தெய்வ உருவங்கள், நூற்றுக்கணக்கான சுதை சிற்பங்கள் முதல் முறையாக பார்த்த பிரமிப்பு இன்னும் உள்ளது. இதுவரை வாசித்த வற்றையும், இதற்கெனவே தேடி வாசித்தவையும் தொகுத்து சிற்பவியல் மற்றும் கோயில் கட்டிடக்கலை கூறுகள் அடிப்படையில் சுந்தரபாண்டியன் கோபுரத்தின் தோற்றம், பல அரச வம்சத்தின் திருப்பணிகள், தில்லை கோபுரத்துடன் உள்ள ஒப்புமை என பல கண்ணிகளை இணைத்து ஒரு வரைபடத்தை அளிக்க முயற்சித்திருக்கிறேன்.
இந்த இதழில் புதுச்சேரி தாமரையின் பதுமை சொன்னது தொடரின் முதல் கட்டுரையும், நண்பர் லால்குடி தினேஷின் காளாமுகா கோயில் குறித்த வசுந்தரா பியோசெவின் நூல் அறிமுகமும், அனங்கனின் வேதங்கள் குறித்த கட்டுரை தொடரும், டாக்டர் ஜெகனின் யதியின் நான்கு யுதர்களுக்கிடையான உரையாடல் கட்டுரையின் மொழிபெயர்ப்பும், சஜுவின் பரணேற்று ஆய்வு கட்டுரையும், அவிநாசி தாமரையின் கொங்குநாடு நூல் குறித்த கட்டுரையும், பொன் மகாலிங்கம் எழுதும் டுடன்காமுன் கட்டுரை தொடரும் இன்னும் பல கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
கட்டுரையை படித்து மேம்படுத்திய நண்பர்கள் பாண்டிச்சேரி தாமரை கண்ணனுக்கும், லால்குடி தினேஷுக்கும் நன்றியும் அன்பும். என்னளவிற்கே இதில் உழைத்து செறிவான ஆங்கில மொழியாக்கம் செய்த ஹெலன் அக்காவிற்கு நூறு நன்றிகளும் அன்பும். தமிழில் எழுதிய மூல கட்டுரை கூட கொஞ்சம் நீண்டது. முதன் முதலில் ஆங்கிலத்தில் படித்த போது நெகிழ்வாக இருந்தது.
இன்று செய்த ஒரு செயலுக்காக பெருநாளில் நிறைவு கொள்வேன் என்றால் இந்த கட்டுரை நிச்சயமாக ஒன்று. இன்னும், இன்னும் பெரியவை நிகழ்வதாக !!
கட்டுரை சுட்டி - https://www.kurugu.in/2026/11/Tiruvanaikaval-Sundarapandyan-Gopuram.html

Comments
Post a Comment