Skip to main content

Posts

ஆகாயத்தாமரை - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் ஆகாயத்தாமரை நாவல் வாசிப்பனுபவம்.   2 3 வாரங்களாக மிக மெல்ல, அல்லது நகராது இருந்த வாசிப்பை மீட்டெடுக்க சரளமான easy read ஏதேனும் தேடிக்கொண்டிருந்தபோது புத்தக கண்காட்சியில் வாங்கிய ஆகாயத்தாமரை நாவல் கண்ணில் பட்டது.  வாழ்விலே ஒருமுறை தொகுப்பு, தண்ணீர் நாவல், மற்றும் சில  அசோகமித்திரனின் படைப்புக்களை வாசித்திருக்கிறேன். எளிமையான அதே நேரம் திடமான, முடித்து விட்டு நாம் தனியாக அமர்ந்து சிந்திக்க பல துளிகளை வழங்கும் எழுத்து அசோகமித்திரனுடையது.  பகடியும் அங்கதமும் இரு இறகுகளாக கொண்டு பறப்பவர். ஒரு சிறுகதையில் நெற்றி நிறைய திருநீறுடன் நடந்து வந்தார். எங்கே குப்புற விழுந்து விடுவாரோ என்று பயமாக இருந்தது என்கிறார். அந்த ஒரு வரியை கொண்டே நாளை கடத்திவிடமுடியும். அன்றைக்கான எல்லா சத்துக்களும் அந்த ஒரு வரியில் உள்ளன. நான் இலக்கிய வாசிப்பை இரண்டு வகையாக பிரித்துக்கொள்வேன் எனக்கு புரிதலுக்காக. முதல் வகை கற்பனையில் எட்ட முடியாத தூரத்திற்கு கதையையும் மாந்தர்களை சிருஷ்டித்து கதை சொல்வது. வெண்முரசு கொற்றவை போன்ற பெருங்காவியங்கள்  உதாரணம் . முழுவதுமாக நம்மை ஒப்புக்கொடுப...

திருமயிலை 😍

     திருமயிலை கபாலீஸ்வரம்.           புத்தக விழா முடித்து மறுநாள் காலை சென்னையை சுற்றி பார்க்க கடற்கரை ரயில் ஏறினேன். என்னை போன்ற சென்னை வாசி அல்லாத ஒருவனுக்கு இந்நகரம் ஒரு  வரலாற்றின் பேரகராதி. கற்கால மனித நாகரீகத்திலிருந்து வெள்ளையர் ஆட்சி காலம் வரைக்கும் அறுபடாத அத்தியாயங்களை கொண்ட புத்தகம் . ஒவ்வொரு தெருக்களிலும் கட்டிடங்களிலும் வரலாற்று எச்சங்களை இந்நகரம் கொண்டிருக்கிறது.           மூன்று மாதங்கள் தொடர்ந்து அலைந்து திரிந்தாலும் பார்த்து முடிக்க முடியாத அத்தனை வரலாற்று பண்பாட்டு தலங்கள் இந்நகரத்தில் உள்ளன. அரைநாளுக்குள் இல்லம் திரும்புவதால் கபாலீஸ்வரத்திற்கு மட்டும் சென்று வர திட்டம். குளக்கரையில் இறக்கிவிட்ட ராபிடோ நண்பர் இது தான் ராஜகோபுரம் என்று சொல்லிவிட்டு சென்றார். தேவதேவனின் கவிதை ஒன்று  மார்கழி மாதம் – வேறென்ன வேண்டும்? உயிரின் உயிரைத் தீண்டுகிறது குளிர். கோலங்களில் வந்தமர்கிறது மலர். கொடியதொரு காலம். உயிரை ஜில்லிட வைத்து மரக்கச் செய்கிறது ஆரம்பத் திகில். அலங்கோலமெங்கும் தெறிக்கும் குருதி அ...

கனவு நிலம்

          ஆகுதி ஒருங்கிணைத்த மொழிபெயர்பாளர் நிர்மால்யாவின் ஒருநாள் கருத்தரங்கில் ஆசான் ஜெயமோகன் அவர்களின் உரையின்போது "ஒரு படைப்பு எழுதப்படும்போதே ஒரு மொழி பெயர்ப்பு நடந்துவிடுகிறது, முதலில் படைப்பு நிகழ்வது என்பது கனவில் தான், கனவிலிருந்து அரூபமான அது மொழியென்னும் ரூபத்தை அடைகிறது" என்றார். எந்த ஒரு படைப்பும் முதலில் நிகழ்வது கனவில்.           தஞ்சை பெருங்கோயிலிருந்து அஜந்தா ஓவியங்கள் வரை, எகிப்து கோபுரங்களில் இருந்து ஆனந்த தாண்டவ மூர்த்தி வரை, அத்தனை படைப்புகளும் முதலில் கனவில் நிகழ்கிறது. அதற்கு மொழி என்னும் வடிவம், எனக்கு இன்னும் கற்பனைக்கான இடத்தை கொடுக்கிறது. குதிரையில் சென்று கொண்டிருக்கும் வீரன் என்ற வரியை படிக்கும்போது நான் சோழ தேசத்து வீரனை கற்பனை செய்கிறேன், மற்றொருவருக்கு அது ராஜபுத்திர வீரராக இருக்க கூடும். இப்படி பல்லாயிரம் மனிதர்களின் கனவுகள் உருக்கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு கனவு நிலம் புத்தக கண்காட்சி. அறுபத்துமூவர் சன்னதியின் அடுக்கப்பட்டிருக்கும் அத்தனை செப்பு படிமங்களையும் ஒருசேர காண்பது போன்ற பேரனுபவம். ...

இந்திய பயணம் நூல் வாசிப்பனுபவம் 🤍

இந்திய பயணம் ஜெயமோகன் மற்றும் அவரது நண்பர்கள் 2008ம் ஆண்டு ஈரோட்டிலிருந்து காசி வரைக்கும் செய்த பயணத்தின் பயணக்கட்டுரை நூல். வரலாறு மற்றும் இலக்கியத்திற்கு இணையாகவே பயணக்கட்டுரைகளும் சுவாரசியமானவை. ஒவ்வொரு கட்டுரைக்கும் முற்றிலும் புதிதாக நிகழும் காட்சிகள், மனிதர்கள், உணவு, கால நிலை, மொழி என்று ஒவ்வொரு மின்னல் வெட்டாக வந்து போகும் பின்புலங்கள். அத்தனை மின்னல் வெட்டுகளுக்கும் பொதுப்பண்பாக ஒளி கீற்று ஒன்றிருப்பது போன்று தோன்றும். முன்பு சிட்டி, தி ஜா வின் நடந்தாய் வழி காவேரி  கட்டுரை , ஏ கே செட்டியாரின் பயணக்கட்டுரைகள், தொ.மு பாஸ்கர தொண்டைமானின் வேங்கடம் முதல் குமரி வரை நூலின் சில கட்டுரைகள், சமீபத்தில் S ராமகிருஷ்ணனின் தேசாந்திரி போன்ற பயணக்கட்டுரைகளை படித்திருக்கிறேன். இந்திய பயணம் நூல் 20 நாட்களுக்குள் சில நகரங்களை மட்டும் கண்டு செல்லும் சிறிய பயணம் குறித்த அனுபவங்கள், அவதானிப்புகள் அடங்கிய தொகுப்பு. பயணக்கட்டுரைகளில் காட்சி அனுபவங்கள் மட்டும் அன்றி இடை இடையில் வரும் இலக்கிய வரிகளுக்காக வாசிக்கலாம், அந்த நிலக்காட்சி, மனிதர்கள், மொழி, போன்ற பருவடிவங்கள் ஆழ் மனதில் பதிந்து அப்போது ப...

இந்திர நீலம் முழுமை

    இன்று இந்திர நீலம் படித்து முடித்தேன். துவாரகையிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். முதற்கனல் தொடங்கி பிரயாகை வரையிலான நாவல்களை காட்டிலும் வெண்முகில் நகரம் எனக்கு மிகுந்த நெருக்கமான ஒரு பகுதி. இந்த குருபூர்ணிமா நாளன்று நித்தியவனத்தில் நடைபெற்ற கேள்வி பதில் போட்டியில் பீமனுக்கு எப்போது துரியோதனன் மீது வன்மம் பிறக்கும் என்ற கேள்விக்கு பதில் சொல்லியதற்காக பரிசாக கையெழுத்திட்டு ஜெயமோகன் அவர்கள் அளித்த நூல். முழு வீச்சாக இந்திர பிரஸ்தத்தின் ஆயுத்த பணிகளை படித்து முடித்தேன். நன்றி - முகநூல் Chitrayog Art Boutique           வெண்முகில் நகரம் முடித்த அதே நாளில் இந்திர நீலத்தை தொடங்கினேன். எட்டு திருமகள்களும் கிளம்பி சென்ற இடமான விண்ணளந்தோனின் வலமார்பினை அடையும் கதை இந்திர நீலம். நீலத்தில் வரும் கிருஷ்ணன் மாயன், பொற்பாதங்கள் நிலத்தை தொடாது பறந்தும் பின் சில சமயம் நடந்தும் மாயம் காட்டுபவன், இந்திர நீலத்தில் அவன் பேரரசன், அரசியல் மதியூகி, ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பும் பெரு வீரன். ஒவ்வொரு இளவரசியின் திருமணமும் இந்த பெரும் பகடையாட்டத்தின் காய் நகர்த...

பனை உறை தெய்வம் - குடவாயில் பாலசுப்ரமணியம் வாசிப்பனுபவம்

பனை உறை தெய்வம், வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு.   குடவாயில் அவர்கள் கலை இலக்கிய தளத்திலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் அறிஞர்.  இந்த 25 கட்டுரைகளுக்கும் மைய சரடாக இருப்பது ஒவ்வொரு தலத்தின்  கல்வெட்டுகளும்,  மூவர் பாடல் குறிப்புகளும். ஒவ்வொரு கட்டுரையை குறித்த சிறு அறிமுகமும் குறிப்பும். பனை உறை தெய்வம் - சிவனின் ரூபத்திற்கும் மரங்களுக்கும் உள்ள ஒப்புமையும், கார்த்திகை தீப திருநாளில் அழல் வடிவான சொக்கன் பனையின் தத்துவத்தையும் விவரிக்கும் கட்டுரை. குடந்தை கிடந்த மாமாயன் - குடந்தை சாரங்கபாணி கோயில் சிற்பங்கள் குறித்தது.  சிவாலயங்களில் ராமாயண சிற்பங்கள் - 12ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றுவதற்கு முன்னர் எடுக்கப்பெற்ற கற்றளிகளில் இடம் பெற்றுள்ள ராமாயண சிற்பங்களை குறித்த விளக்கங்கள்.  யாதும் சுவடு படாமல் - நாவுக்கரசர் சமண நெறி ஒழுகி, பின் சைவத்திற்கு திரும்பி, கயிலை காட்சி காண வாவியில் விழுந்ததும், பிரணவ சரீரம் பெற்று திருவாரூர் பூங்கோயிலில் ஈசன் கண்டு கண்டு "மாதர் பிறை கண்ணியானை"...

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...