Skip to main content

Posts

பாதாமி பயணம் - இயற்கையின் பேரன்பு 💙

     அக்டோபர் 17-20, 2024 சாளுக்கிய ஆலய கலை மரபை அறிவதற்கு பாதாமி, ஐஹொளே, பட்டடக்கல், லக்குண்டி ஆகிய தலங்களின் பயணக்குறிப்பு. பட்டடக்கல்   மழைக்குப்பின் பூதநாதர் கோயில்   சென்ற வாரமே இரண்டு இணைய அமர்வுகளாக செல்லவிருக்கும் தளங்களை குறித்த முன்னுரையை ஆசிரியர் ஜெயக்குமார் அண்ணா அளித்திருந்தார். மேலும் George Michellன் பாதாமி குறித்த பயணக்கட்டுரை நூலை பரிந்துரைத்திருந்தார். அதையும் படித்து முன்னரே தயாராகியிருந்தோம். இணைய வகுப்பிலேயே இந்த முறை வெறும் பயணமாக அல்லாமல் காணும் அனைத்து கோயில்களையும் சிறிய பதிவுகளாக தமிழ் விக்கியில் பதிவேற்றவேண்டும் என்ற பீடிகையும் இட்டிருந்தார்.      நாசிகையை கவக்ஷம் என்பது போன்ற கலைச்சொற்கள் வேறுபாட்டை முன்னரே அறிவித்து எங்களை தயார் செய்திருந்தார்.       16 அக்டோபர் மாலை க்ரந்திவீர சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தில் சில நண்பர்களை சந்தித்த போதே, பள்ளிக்கு மீண்டும் சென்ற உணர்வு வந்தது. ஒத்த மனதும் ரசனையும் உள்ளவர்களை சந்தித்து உரையாடும்போதும் தன்னை போன்ற சக கிறுக்கனிடம் உரையாடும் ஒரு நிறைவு வருகிறது. ...

இன்றைய காந்தி

இன்றைய காந்தி இன்றைய தினம் அக்டோபர் 2, காந்தியாரின் பிறந்த தினம். Courtesy: Wikipedia     மகாத்மா காந்தி, தேசப்பிதா. தன்னைப்போல ஆயிரம் காந்திகளை உருவாக்கிய பிரஜாபதி. சுதந்திர போருக்கு அகிம்சை ஆயுதம் ஏந்தியவர்.  ஒருபோதும் வன்முறைக்கு என் 30 கோடி மக்களை இட்டுச்செல்லாதவர். சுதந்திர வேள்வியில் சிந்தவிருந்த பல்லாயிரக்கணக்கான குருதி துளிகளை தடுத்தவர். நேற்று இன்று நாளை என்று என்றென்றைக்குமான சிந்தனைகளை விட்டு சென்றவர். இன்றைய தினம் அவர் சிலைக்கு மாலை அணிவித்து கற்பூரம் காட்டி காந்தி சாமி என்று தொன்மமாக ஆக்குவது ஒருவகை விளக்கத்தையே அளிக்கும்.  நேற்று நேருவிற்கு காந்தி முக்கியமாக இருந்தார். இன்று எனக்கும் முக்கியமாக இருக்கிறார். நாளை வரப்போகும் ஒருவனுக்கும் காந்தி முக்கியம்.    21ம் நூற்றாண்டிற்கு காந்தி விழுமியங்கள் என்று சிலவற்றை சிந்தித்து பார்க்கிறேன். Us vs them !  இருபதாயிரம் ஆண்டுகளாக மனித சமுதாயம் உருவாக்கிய நாம், அவர்கள் (Us Vs Them ) என்ற கட்டமைப்பை தகர்த்தெறிந்தவர் காந்தி. என் பிடரியில் பூட்ஸ் கால்களை வைத்து முன்னூறு ஆண்டுகாலம் அமிழ்த்திக்கொண்ட...

கொட்டுக்காளி - Subtlety 🤍

இன்று மாலை கொட்டுக்காளி படம் பார்த்தேன். அதனை பற்றிய ரசனைக்குறிப்பு. வெகு நாட்களுக்குப்பின் ஒரு முழு தமிழ் படம் பார்த்த உணர்வு. சமீபத்தில் பார்த்த ஏறத்தாழ அனைத்து தமிழ் படங்களிலும் துப்பாக்கி குண்டுகள் முழங்கியவண்ணம் இருந்தன. சண்டைக்காட்சிகளின் மொத்த தொகுப்பாகவும் இடைச்செருகலாக சிறு வசனங்களாகவும் இருந்தன. கொட்டுக்காளி உண்மையில் பாலமலைக்கு ஷேர் ஆட்டோவில் நானும் நெருக்கி பிடித்துக்கொண்டு சென்று வந்த உணர்வை கொடுத்தது. ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால்  பல அடுக்குகள் கொண்ட உண்மைக்கு மிக நெருக்கமான சினிமா,  கொட்டுக்காளி . பின்னணி இசை இல்லை என்பது படத்தின் இன்னொரு தனித்துவம். அந்த இடைவெளியை இயற்கையின் சப்தத்தையும், நிசப்தத்தையும் கொண்டு நிரப்பியிருக்கிறார்கள். ஒரு பேட்டியில் படத்தொகுப்பாளர் கதை ஒரே நாளில் நடப்பதால் வெயிலின் தொனி(tone) ஒன்றாக இருப்பதற்காக மெனக்கெட்டோம் என்று சொல்லியிருந்தார். ஒவ்வொரு காட்சியின் ஒளிக்கலவையிலும் ஒவ்வொரு புல்லின் அசைவில் வரும் ஒலியிலும் மெனக்கெடல் தெரிந்தது.   முதல் காட்சியில் மீனாவிற்கு வைக்கப்படும் திருநீறு நெற்றிப்பொட்டிற்கு நேராக அல்லாம...

பாரத தருணங்கள்

ஓவியம் - ஷண்முகவேல் மகாபாரதத்தின் நவீன ஆக்கமான உலகின் மிகப்பெரும் நாவல் வரிசைகளில் ஒன்றான வெண்முரசு படித்துக்கொண்டிருக்கிறேன். 26 நாவல்கள் 25000 பக்கங்கள் என வாழ்நாள் முழுமைக்கும் துணைவரும் நாவல் தொகுதி, வெண்முரசு. அதில் எனக்கு பிடித்த தருணங்களை தொகுக்கும் பொருட்டு இந்த கட்டுரை வரிசை.  தற்போது படித்துக்கொண்டிருப்பது பிரயாகை, நாவல் 5. வரனாவதத்தின் அரக்கு மாளிகையிலிருந்து தப்பித்த பாண்டவரும் குந்தியும் காட்டில் மறைந்து வாழ்கின்றனர். இடும்பியை மணந்து கடோத்கஜனை பெற்றெடுக்கிறான் பீமன். பீமன், இடும்பி,  கடோத்கஜன் மூவரும் பொன்னொளிர் வீசும் சூரிய அஸ்தமனத்தை மரத்தின் மீது அமர்ந்து கண்டு கழிக்கின்றனர். பீமன் இடும்பி மற்றும் தன் மகனிடம் மிக நெருக்கமாக உணரும் ஒரு கவித்துவ தருணம் இது  அத்தியாயம் - 63 . ஒரு மந்தனுக்கு மிகவும் உவப்பான ஒரு Couple goal இந்த தருணம். இத்தனை அத்தியாயத்தில் பீமன் வேறு எந்த மானுடருடனும் அணுக்கமாக இருக்கும் காட்சி நான் படித்ததில்லை.  அந்த பொழுது விடிவதற்குள் அவர்கள் காட்டை விட்டு விலகும்படி ஆகிறது. இரவில் இடும்பர் குலத்தில் எவரும் காட்டை விட்டு விலகக்கூடாத...

நித்யவனம்

வெகுநாட்களுக்கு பின் ஒரு பதிவு. இனி தொடர்ச்சியாக கட்டுரைகள் பதிவிடப்படும்.  எனது இலக்கிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய விஷ்ணுபுரம் என்னும் நாவலின் பெயரிலான வாசகர் வட்ட நண்பர்கள் இனைந்து (முழுமையறிவு) Unified wisdom என்ற அமைப்பை தொடங்கியிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக தத்துவம், பண்பாடு, ஆலய கலை, இலக்கியம், மெய்யியல், தியானம், இசை, யோகம், விபாசனா, கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் புத்த வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன  ஈரோடு அருகே வெள்ளிமலை மலை தங்குமிடத்தில் வெறும் கேளிக்கைகளும் மூன்று நாட்களுக்கு ஒன்றென வந்து செல்லும் Trending குமிழிக்களின் சத்தம் ஏதும் கேட்காத ஒரு தூரத்தில் ஒரு இடத்தை தெரிவு செய்து உருவாக்கியிருக்கிறார்கள் . அனைத்து வகுப்புகளுக்கும் ஆசான் ஆணிவேர். அந்தந்த துறையில் ஆழ்ந்த ஞானம் கொண்ட நிபுணர்களை கொண்டே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. உதாரணம் ஆலயக்கலை - ஜெயக்குமார் அவர்கள். தமிழ்நாட்டில் ஆலயம் மற்றும் சிற்பம் சார்ந்து முழு நேரமாக இயங்கி வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருள் ஒருவர்.  நான் சென்ற ஒரு ஆண்டாக வகுப்புகளில் பங்கு கொண்டிருக்கிறேன். இது ஆய...

S. ரா - A Master

S ராமகிருஷ்ணன்  சமகால  தமிழ் இலக்கிய மாமேதை S.ரா அவர்களின் குறுங்கதை. உங்கள் வாழ்நாளில் இந்த ஒரு கதையை மட்டுமாவது படிக்கவேண்டுமென்று பரிந்துரைப்பேன். https://www.sramakrishnan.com/கடைசி-விலங்கு முதலாம் உலகப்போரின் பின்புலத்தில் எழுதப்பட்ட கதை. உலகமகா யுத்தம் அத்தனை உயிர்களும் துப்பாக்கி குண்டுகளுக்கும் பீரங்கி சத்தத்திற்கும் அஞ்சி கூடடைந்திருக்கையில் ஒரு கரடியின் உணர்வை பதிவு செய்பவனே மகத்தான கலைஞன். ஒரு ரோஜா இதழுக்குள் அமிழ்ந்திருக்கும் மொத்த தோட்டத்தை போன்றது இக்குறுங்கதை. S. ரா வுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். 

நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை - பவா செல்லதுரை

நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை - ஒரு பேரன்புக்காரனின் பூங்கொத்து ! பவா செல்லதுரை சமீபத்திய கலை இலக்கிய வட்டாரத்தில் பெரிதும் புழங்கும் பெயர். பெருங்கதையாடல் என்னும் கதை சொல்லும் வடிவத்தை என் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியவர். ஜெயமோகனின் யானை டாக்டர், வெள்ளையானை, S ராமகிருஷ்ணனின்  இடக்கை, இமையத்தின்  செல்லாத பணம், சமீபத்தில் நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானை, செந்தில் ஜெகநாதனின் நித்தியமானவன் என்று பல நாவல்களை கதையாக சொல்லி பெரும் வாசகபரப்பிற்கு கொண்டு சேர்த்திருக்கிறார். சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய அவரது நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை என்ற  சிறுகதை தொகுப்பினை குறித்த வாசிப்பனுபவம். முதலில் பவாவின் கதைகள் அறிமுகம் செய்வது பெரும் பாறைகளாலும் கட்டாந்தரைகளாலும் ஆன மலைப்பிரதேசத்தை. எங்கும் பச்சையம் நிறைந்த காவிரிக்கரையில் வாழும் எனக்கு பாறை முடுக்குகளும், பழங்குடியின மக்களும்,  நள்ளிரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஜெபங்களும் நான்  கண்டிராத கதைக்களம்.   முகம் - ஒரு திருமணமும் அதில் ஒவ்வொரு முகத்திலும் காணும் உணர்ச்சி கொப்பளிப்புகளும் திருமண ஆல...

ஆடு ஜீவிதம் - நாவல் வாசிப்பனுபவம்

வேலை நிமித்தமாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் புலம் பெயர் தொழிலாளி ஒருவரின் வாழ்க்கையை சற்றும் புனைவில்லாமல் கூறும் வாழ்க்கை வரலாற்று நூல். 2009ம் ஆண்டு மலையாளத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். குடும்ப வறுமை காரணமாக 1992ம் ஆண்டு பல்லாயிரம் கனவுகளோடு சவுதிக்கு செல்லும் நஜீப் தான் கனவில் கண்ட எந்த ஒரு குணாதிசயமும் அல்லாத ஒரு வெற்று பாலை நிலத்தின் நடுவில் ஆட்டுப்பட்டியில்(மஸாரா) ஆடுமேய்க்க விதிக்கப் படுகிறார். கர்ப்பமுற்ற தன் மனைவியையும், உப்பா, உம்மாவையும் தனியாக விட்டுவிட்டு பிறக்கவிருக்கும் தன் மகன்/மகளுக்கு நல்லதொரு எதிர்காலத்திற்காக வெளிநாடு செல்ல முடிவு செய்கிறார் நஜீப். மலபார் மண்ணில் அன்றாடம் நீரை சுவாசித்தது மணல் அள்ளும் வேலையை செய்யும் நஜீப்பிற்கு குளிப்பதற்கும் இதர அன்றாட தேவைகளுக்கும் கூட சிறிதளவு நீர் தர மறுக்கும் அர்பாபிடம் மூன்று ஆண்டுகள் சிக்கி அவர் படும் இன்னல்களும் அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதும் தான் முழு நாவல். காலை கடனை முடித்து சுத்திக்காக ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீரை சிறிதளவு எடுத்த நஜீப்பிற்கு முதன் முதலாக அர்பாபிடமிருந்து முதுகை பிளக்கும் படியான...

பொன்னி

  நடந்தாய் வாழி காவேரி பயணக்கட்டுரை நூல் வாசிப்பனுபவம்.  நடந்தாய் வாழி காவேரி சிட்டி, தி ஜானகிராமன் இனைந்து எழுதிய பயணக்கட்டுரை. தமிழ் பயணக்கட்டுரை வரலாற்றில் ஏ கே செட்டியார் அவர்களின் பயணக்குறிப்புகளை போன்று குறிப்பிடத்தக்க ஒரு நூல். தி ஜா நாவல் உலகத்தில் ஒரு ஆசான், சு வேணுகோபால் போன்ற சமகால பல எழுத்தாளர்களுக்கு குருவாக விளங்குபவர். சிட்டி என்கிற பெ கோ சுந்தரராஜன் மணிக்கொடி இதழின் ஆசிரியராக இருந்தவர். சிட்டி, தி ஜா மட்டுமல்லாமல் உடன் ஒரு புகைப்பட கலைஞர், ஓவியர் மற்றும் மகிழுந்து ஓட்டுநர் என்று ஒரு குழுவுடன் செல்லும்  பயணம் மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது.    1. தலைக்காவேரி - ஹொகேனக்கல் பயனைக் கொண்டுதான் பெரியவர்கள் தொடங்கும் பணியின் நோக்கங்களையும் நுட்பங்களையும் அறிய முடியும் என்று காளிதாசன் அருளிய வாக்குக்கு ஒரு சான்று வேண்டுமானால் தலை காவேரியின் இந்த மௌனச் சுனையைதான் காணவேண்டும்.   தலைக்காவேரி தொடங்கி கிருஷ்ணராஜசாகர், ஸ்ரீரங்கப்பட்டணம், மேகதாட்  வழியாக ஹொகேனக்கல் வரை சென்றடைந்துள்ளனர். வழியில் ஒரு முதியவரை சந்திக்கும் குழுவை குறித்து நவீன வசதிகளான மின...

புல்லின் தழல்

சென்ற ஞாயிற்றுக்கிழமை நூலகத்திலிருந்து புல்லின் தழல் என்ற குறுநாவலை எடுத்துவந்தேன், 13 நிமிடங்களுக்கு முன் படித்து முடித்தேன். வெண்முரசு நாவல் வரிசையின் 26 நாவல்கள் அல்லாது, அதன் உட்கதைகளை தொகுத்து சில குறுநாவல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. செம்மணிக்கவசம் என்ற குறுநாவல்  கர்ணனின் கதையில் ஒரு சிறு பகுதியை மட்டும் கொண்டுள்ள ஒன்று. அதே போல் புல்லின் தழல், துரோணரின் கதையை மட்டும் கொண்டது. இந்த குறுநாவல்களின் சிறப்பென்பது ஒவ்வொரு நாவலும் தன்னளவில் ஒரு முழு கதையம்சம் கொண்டது, அதை மட்டுமே தனியாக வசிக்கவும் வழிசெய்வது. பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் குறுகுலக் கல்வியின் இறுதிநாளில் கதை தொடங்குகிறது. துரோணர் குருகாணிக்கையாக துருபதனை தேர்க்காலில் கட்டி இழுத்துவரும்படி கோருகிறார். ஏன் என்ற காரணத்தோடு துரோணரின் கதைக்கு செல்கிறது (yes, non linear narration). பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் மாணவனாக இருந்த காலத்தில் , பதின் பருவத்தை கடந்து வந்து மாணவனாக துருபதன் ஆசிரமத்தில் இணைவது.  பரத்வாஜர் பயிற்சி அளிக்க மறுத்துவிட  துரோணரே குருவாக இருந்து அவருக்கு  விற்பயிற்சி அளித்தது, பய...

இடக்கை வாசிப்பனுபவம்

இடக்கை, S ரா. நூலின் வாசிப்பனுபவம். உலகம் முழுக்க நீதிக்காக காத்திருக்கும் அபலை மக்களின் கதையை தூமகேது வழியாக கடத்தியிருக்கிறார் S.ரா. இடக்கை, ஒரு magical realistic நாவல். மண்ணாலான பெண், அவளை தினந்தோறும் கரைத்துக் குடித்துக் கொண்டிருக்கும் கணவன், கிணற்றில் வாழும் மனிதன், மன்னனின் சபையில் முறையிட்டும் நீதி கிடைக்காததால் விண்ணுலகம் சென்று கடவுளிடம் முறையிடும் புழு, குரங்குடன் சதுரங்கம் ஆடும் பிஷாடன் என்று பறக்கும் கம்பள கற்பனைகள் நூல் முழுக்க நிரம்பியிருக்கிறது.  கண்ணாடி பிரமிட்டை போன்று இடக்கை நாவலுக்கு பல கோணங்கள் உள்ளன.  1. பாதுஷாவின் பாரம்  பதவிக்காக நடைபெறும் கொலைகள் வரலாறு முழுக்க நிகழ்ந்துள்ளது. (நிகழ்காலத்து கொலைகள் உங்கள் சிந்தைக்கு வந்தால் நானோ வரலாறோ பொறுப்பல்ல !) தன் அந்திம காலத்தில் மாமன்னன் ஒளரங்கஷீப்பும் இதே கவலையில் ஆழ்ந்திருக்கிறார். தந்தையை கொன்றுவிட்டு அரியணை ஏறிய தனக்கும் அதே முடிவு ஏற்பட்டுவிடுமோ என்ற கேள்வி பாதுஷாவை துளைக்கிறது. "மாபெரும் இந்துஸ்தானத்தை ஆட்சி செய்யும் பாதுஷாவாக இருந்தாலும் உறக்கத்தின் முன் ம...

சென்னை புத்தகக் கண்காட்சி

https://www.newindianexpress.com/cities/chennai/2023/jan/05/stalin-to-inaugurate-46th-chennai-book-fair-on-jan-6-2534791.html 46வது சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது, 400க்கும் மேற்பட்ட அரங்குகள், தினந்தோறும் புத்தக வெளியீடுகள், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், நாள்தோறும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் கலை நிகழ்ச்சிகள் என ஒட்டுமொத்த தமிழகத்தின் மாபெரும் அறிவுத் திருவிழா. அதை குறித்த சில கருத்துக்கள்.  கொண்டாட்டம்:  இருபது ஆண்டுகளுக்கு முன் சென்னையை தவிர வேறு எந்த மாவட்டத்திலும் அரிதாகவே புத்தக திருவிழா ஒருங்கிணைக்கப் படும். சென்ற ஆண்டு கொரோனா ஊரடங்கால் விழா தாமதமாக தொடங்கியது. இவ்வாண்டு வழக்கம் போல் ஜனவரி மாதம் தொடங்கியிருக்கிறது. இன்னொரு சிறப்பாக 16-18 ஆகிய தேதிகளில் முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. புத்தக அரங்குகளுக்குள் நுழைவதென்பது, தேசத்தின் மூளைக்குள் நடை செல்வது போன்ற அனுபவம். தற்கால சிந்தனை, வாசிப்பு, புதிய நண்பர்களின் சந்திப்பு, நல்ல அப்பளம், சுவையான பில்டர் காப்பி, சென்னையை சுற்றிப்பார்பது போன்ற எண்ணற்ற நன்மை...