Skip to main content

Posts

நட்சத்திரவாசிகள் வாசிப்பனுபவம்

நட்சத்திரவாசிகள் - 2021ம் ஆண்டிற்கான சாகித்ய யுவ புரஸ்கார் விருதுபெற்ற நாவல், ஆசிரியர் கார்த்திக் பாலசுப்ரமணியன்.காலச்சுவடு பதிப்பக வெளியீடு,  நூலின் வாசிப்பனுபவம். இத்தலத்தில் நான் பகிரும் அனைத்து நூல் குறித்த பதிவுகளுக்கும் நூலிலிருந்து நான் கண்ட அனுபவப் பகிர்வு மட்டுமே. விமர்சனம் எழுதும் அளவிற்கு என் வாசிப்பு தளம் விரிவடையவில்லை. 2019ம் ஆண்டில் பொறியியல் படித்து முடித்தேன். இதுவரை மூன்று மென்பொருள் நிறுவனங்களில் பணி செய்திருக்கிறேன், செய்துகொண்டிருக்கிறேன். கார்த்திக் எந்த அலுவலகத்திலிருந்து என்னை பின் தொடர்ந்து வருகிறார் என்று எனக்கும் ஐயம் உள்ளது. தோராயமாக நான் கடந்து வந்த எந்த ஒரு நண்பனை குறித்து பதிவெழுதினாலும் அது நித்திலனையோ, சாஜுவையோ, வேணுவையோ, சத்தியையோ, அர்ச்சனாவையோ, பனிமலரையோ  அல்லது  ராமசுப்புவையோ குறித்த பதிவாகவோ இருக்கக் கூடும், கண்ணடிக்கு அந்த பக்கம் இருக்கும் மனிதர்களின் முகங்கள் சாயம் பூசப்பட்ட கண்ணாடிகளால் தடுத்துவைக்கப் பட்டிருப்பதைப்போல அவரது வாழ்கைகளையும் வெளி உலகத்திலிருந்து மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது.  இன் நாவல் அந்த அத்தனை மனிதர்களின் வா...

பூனாட்சி - வாசிப்பனுபவம்

  பூனாட்சி அல்லது வெள்ளாட்டின் கதை. பெருமாள் முருகன் அவர்களின் நாவல் வாசிப்பனுபவம். 3 நாட்களுக்கு முன் மாலை ஏழு மணிக்கு மூட்டை முடிசைகளை கட்டி கிளம்ப எத்தனித்த நூலகரை காத்திருக்க வைத்துவிட்டு எடுத்து வந்து படிக்க தொடங்கி இன்று மாலை படித்து முடித்தேன். பூனாட்சி என்கிற வெள்ளாட்டுக்குட்டி தான் நாவலின் கதை நாயகி. பகாசுரன் கிழவனிடம் ஒரு ஈத்திற்கு ஏழு குட்டிகள் போடும் அதிசய வெள்ளாட்டுக்குட்டியை விட்டுச் செல்கிறான். கிழவனும் அவன் துணைவியும் எவ்வாறு அக்குட்டியை வளர்த்தெடுக்கின்றனர் என்ற கதையை நாவல் விவரிக்கிறது.  நாவலின் தொடக்கத்திலன்றி எந்த பத்தியிலும் பூனாட்சியை ஆடு என்ற ஒரு வார்த்தையால் கூட குறிக்கவில்லை. தீப்பெட்டி குச்சிகள் போன்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் எனக்கு ஒரு செல்லப்பிராணி வளர்ப்பதென்பதே அடையமுடியா அனுபவம். அவ்வகையில் நாவல் இதுவரை நான் கண்டிராத ஒரு புத்தம் புதிய அனுபவத்தை கொடுத்தது. கட்டாந்தரை எங்கும் அலைந்து திரிந்து பூனாட்சி மேயும் காட்சி வர்ணனைகள் புதுப் புனல் போன்று மகிழ்வை தருகிறது. பூனாட்சி, கட்டிக்கொடுத்துவிட்ட தன் மகளை தவிர வேறு எந்த உறவுகளும் இல்லாத கிழ...

இந்திய இலக்கிய சிற்பிகள் - ஏ கே செட்டியார்

சாகித்ய அகாதமி இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற பெயரில் இலக்கிய முன்னோடிகளின் வாழ்க்கை வரலாற்றை இலக்கியவாதிகளை கொண்டே வெளியிட்டு வருகிறது. அப்பர் , ஞானசம்பந்தர், அழ வள்ளியப்பா, பேரறிஞர் அண்ணாதுரை, ஜெயகாந்தன் என்று பலதரப்பட்ட ஆளுமைகளின் நூல்கள் வெளிவந்துள்ளன.  அந்த வரிசையில் ஏ கே செட்டியார் குறித்து சா. கந்தசாமி எழுதிய நூலை நேற்று முன்தினம் நூலகத்திலிருந்து எடுத்துவந்து நேற்றும் இன்றும் வாசித்து முடித்தேன். அதன் வாசிப்பனுபவ பகிர்வு,  இப்பதிவு.   ஏ கே செட்டியார் தமிழில் பயணக் கட்டுரைகளின் முன்னோடி, இதழாசிரியர், முதன் முதலாக முழு நீள காந்தியின் ஆவணப் படத்தை தயாரித்தவர் என்ற மூன்று பரிமாணங்களை குறித்த முன்னுரையை சா கந்தசாமி அளிக்கிறார். உலகம் சுற்றிய தமிழன் என்று பெயர் பெற்ற செட்டியார், தென்னாபிரிக்கா,இலங்கை, லண்டன், ஜெர்மனி, ரங்கூன்  என்ற எண்ணற்ற நாடுகளுக்கு பயணம் செய்து பயணக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மலேயா முதல் கனடா வரை என்ற அவரது பயணக் குறிப்பு முக்கியமான பயணக் கட்டுரைகளில் ஒன்று. கப்பல், விமானம், ரயில், டிராம் பேருந்து, கட்டை வண்டி என்று பலவகையான பயணங்கள...

விஷ்ணுபுரம் விருது விழா

இந்தாண்டு விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களுக்கு வழங்கப் படுகிறது. சென்ற ஆண்டைப் போலவே இந்தாண்டும் விழாவிற்காக ஆவலாக உள்ளேன். சென்ற ஆண்டை காட்டிலும் வாசிப்பு செழுமை அடைந்திருப்பதால் வளர்ந்த நல்ல உரையாடல்களை உருவாக்க திட்டம். ஜெ இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது அதன் சுட்டி . சாரு நிவேதிதா தமிழ் விக்கி சுட்டி .

பொன்னியின் செல்வன் - அரை நூற்றாண்டுக் கனவின் காட்சி வடிவம்

Image Courtesy : asianet  அனேகமாக இது எனது முதல் திரைப்பட காட்சி அனுபவக் குறிப்பாக இருக்கக் கூடும். வேலை நிமித்தமாக பெங்களூருவில் தங்கியிருந்த தொடக்க காலத்தில் பல நேரங்களில் துணையாக இருந்தது பாப்புலர் கிளாசிக் ஆன பொன்னியின் செல்வன் நாவல். திருச்சியை பற்றிய நாவல் என்ற குறிப்போடு பார்த்திபன் கனவை கல்லூரி நாட்களில் படித்து முடித்த நினைவு இருக்கிறது. பார்த்திப சோழனின் கனவை விக்ரமன் தொடங்கி பிற்கால சோழர்கள் ஆகிய ராசராசன் காலத்தில் நனவாகியது என்று பார்த்திபன் கனவு முடிவுறும்.  ஏறத்தாழ படித்து முடித்த அதே கால கட்டத்தில் தான்  வேலைக்காக  பெங்களூரு சென்றேன். ஆடிப்பெருக்கு நாளில் தொடங்கியது நாவல். எம்மை போன்ற காவிரி கரையோரம் வாழும் மக்களுக்கு ஆடிப்பெருக்கு மகா மங்கலமான ஒரு பெருவிழா. வாலான் அரிசியையும், வெல்லத்தையும், கீறிப்போட்ட தேங்காய் சில்லுகளையும் மஞ்சள் தடவிய கையோடு என் பாட்டி கிளறுகின்ற காட்சி இன்றும் என் மனக்கண்ணில் விரிகின்றது.  பள்ளி அரைநேரம், அலுவலகங்கள் உள்ளூர் விடுமுறை,திருவரங்கம் திருவானைக்காவல் வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்,  பூக்கள், பழங்களின் வி...

Ready to Fire - Book Experience

Ready to fire , the autobiography of an indian rocket scientist, Mr Nambi Narayanan, who is involved in the fabricated ISRO spy case. This book forms the base of a    recently released  motion picture " Rocketry Nambi Narayanan Effect ". This book is one of the best autobiographies I have  ever read and this is in par with the Gandhiji's autobiography "My Experiments with truth", "சத்திய சோதனை" in tamil, theses books doesn't portray the storyteller as a hero rather explains his journey through all his/her ups and downs. The book uses parallel narration with two threads, one narrates his journey of a young aspiring engineering student who went on to lead liquid propulsion system in VSSC Vikram sarabhai space centre, and another thread narrating how he has been falsely accused in the fabricated case and he got rid of it. The first thread is interesting, exciting and inspirational indeed. The second story is full of the bureaucratic attrocities and ho...

திருச்சி புத்தகத் திருவிழா

மாலை ஆறுமணிக்கு S ரா சொற்பொழிவு என்ற அறிவிப்பை பார்த்து ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினேன். அரை மணி நேரம் ஆகவேண்டிய பயணம் காவிரி பாலத்தின் குறுக்காக புதிய பாலம் கட்டும் வேலைகள் நடைபெறுவதால் மாற்று வழியில் ஒருமணி நேரம் பிடித்தது. முதல் முறையாக மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் பிரிட்டிஷ் காலத்திய ராணுவ மைதானத்தின் கல்வெட்டை கண்டேன்.  வெஸ்ட்ரீ பள்ளி மைதானத்தை நெருங்கும் போதே கலைநிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. இந்த ஆண்டு சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்காக ஒரு அரங்கும் புத்தக கடைகளுக்காக தனி அரங்குமாக இரண்டு அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன. கலை நிகழ்ச்சிகள் அப்போது தான் தொடங்கியிருந்ததால் முதலில் புத்தகங்களை பார்த்துவிட்டு பிறகு சொற்பொழிவு அரங்கத்திற்கு செல்லலாம் என்று நுழைந்தேன். பொன்னியின் செல்வன் வாங்குவதற்காக புத்தக கண்காட்சிக்கு வரும் மரபார்ந்த நிகழ்விற்கு திருச்சியும் விதிவிலக்கல்ல என்பதாக எந்த அரங்கில் நுழைந்தாலும் "பொன்னியின் செல்வன் இருக்கா" என்ற குரலை கேட்க முடிந்தது. கடந்த எழுபது ஆண்டுகளில் பொன்னியின் செல்வன் நாவ...

ஆதி வெள்ளறை

            மூன்றாவது முறையாக அலாரத்தை அனைத்தபோது மணி 6 அடித்திருந்தது, இங்க் பில்லெரில் ஒவ்வொரு துளியாக உரிவது போல் நீளம் நீங்கி வானம் வெளுத்துக் கொண்டிருந்தது. சட்டென்று கிளம்பி பேருந்து நிறுத்தத்தில் ஒரு டீ குடித்துவிட்டு பேருந்துக்காக காத்திருந்தபோது  துறையூர் பேருந்து வந்ததும் 2 மூட்டைகளை ஏற்றுக்கொள்ள சொல்லி நடத்துனரிடம் பாட்டி சண்டை பிடித்துக் கொண்டிருந்தார். சுவாரசியமா நடந்து கொண்டிருந்த சண்டையை இடைமறித்து திருவெள்ளறை கோவில் போகுமா என்று கேட்டபோது "போகும் பின்னாடி ஏறுப்பா" என்றவர் கடைசி படியில் கால்வைத்தபோது என்ன நினைத்தாரோ தெரியவில்லை "கோவில் போகாது வளைவுல இருந்து நடந்து போங்க" என்றார் சரி என்று சொல்லி, ஏறி கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டேன் நல்லவேளையாக பேருந்தில் ஒலிபெருக்கி ஒன்றுமில்லை. காலை அமைதியை குலைக்காமல் ஊர்ந்து சென்றது.           இருபுறமும் கரைதொட்டு ஓடும் கொள்ளிடத்தை பார்த்தபோது வாழ்நாள் முழுக்க வறுமையில் வாடிய ஒரு மனிதன் ஊருக்கெல்லாம் செல்வம் கொழித்து பெருகுவது போன்று கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தத...

நீரதிகாரம்

 நீரதிகாரம்            ஆனந்த விகடனில் வாரம் தோறும் எழுத்தாளர் அ வெண்ணிலா அவர்கள் நீரதிகாரம் என்னும் தொடரை எழுதிவருகிறார். முல்லை பெரியாறு அணையின் நெகிழ்ச்சியான  சரித்திரத்தை விவரிக்கும் தொடராக வெளிவருகிறது.            தாது வருடப் பஞ்சத்தில் (1870 களில்) தேசம் முழுதும் 2 கோடி மக்கள்  செத்து மடிந்தனர். மெட்ராஸ் ப்ரெசிடென்ஸியில் மட்டும் லட்சக் கணக்கில் மனிதப் பிணங்கள் குவித்துவைக்கப் பட்டன.குலக்கொடி வையை முழுதும் பொய்த்துப் பொய் தென் மாவட்ட மக்கள் மலையகத் தீவுகளுக்கு  கப்பலில் அடிமைகளாகவும் பஞ்சம் பிழைக்கவும் ஆயிரக் கணக்கில் தினந்தோறும் வெளியேறிக் கொண்டிருந்தனர்.            பஞ்சத்தில் இருந்து எஞ்சிய மக்களை காக்கும் பொருட்டு மேற்காக ஓடும் பேரியாற்றை மதுரைக்கு திருப்ப அணை கட்டப் படுகிறது. ஒரு அணைக்  கட்டுமானம் அதுவும் நூறாண்டுகளாக கிடப்பில் இருக்கும் திட்டம் தொடங்குவதற்கு முன்னும், தொடங்கியபிறகும் அதனை சார்ந்துள்ள அத்தனை ஜீவராசிகளையும் எவ்வகையில் தொட்டு செல்கிறது ...

நூறு நாற்காலிகள் - வாசிப்பனுபவம்

  புத்தகங்கள் தான் தனக்கான வாசகனை தீர்மானிக்கின்றன என்ற கூற்றில் எனக்கு அதீத நம்பிக்கை உண்டு. Youtubeல் பவா செல்லதுரை அவர்கள் இந்த கதை சொல்லிய காணொளியை பார்த்து புத்தகத்தை படித்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே உறங்கினேன். மறுநாள் காலை நூலகத்திற்கு சென்ற போது தவழ்ந்து இப்புத்தகம் என்கைகளில் விழுந்தது. நூறு நாற்காலிகள் ஜெயமோகன் அவர்களின் அறம் என்கிற உண்மை மனிதர்களை பற்றிய சிறுகதை தொகுதியில் உள்ள ஒரு கதை. நாயாடிக் குறவர்களில் ஒரு இளைஞன் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று திருவனந்தபுரத்தில் பணியமர்த்தப் படுகிறான். தான் வளர்ந்த வாழ்வியல் கட்டமைப்பிற்கு முற்றிலும் மாறான அதிகார வர்கத்தை அடைந்த அந்த இளைஞனின் வாழ்க்கை விவரிக்கும் கதை, நூறு நாற்காலிகள். என்னளவில் புத்தகம் என்பது இதுவரை நான் காணாத ஒரு வாழ்க்கையை வாழ வைக்க வேண்டும். அவ்வகையில் இப்புத்தகம் தலைசிறந்த ஒரு வாசிப்பனுபவத்தை கொடுத்தது. படித்து முடித்து இரண்டு மூன்று நாட்கள் இக்கதையின் பாதிப்பில் இருந்து மீளவியலாது உலுக்கி போட்டது. அதிகாரத்தின் அரியணையில் அமர்ந்த தர்மனை சாதிய ஒடுக்குமுறையின் தீக் கங்குகள் அவ்வப்போது தீண்டி...

ஒரு துளி இலக்கியம்

ஒரு துளி இலக்கியம் வாசிப்பு நேரம் - 4 நிமிடங்கள்              ஒவ்வொரு புலரியும் புதிய தன்னளவில் முழு வாழ்க்கை. நாளின் முதல் ஒரு மணி நேரம் தான் அந்நாளை முழுமையாக எவ்வாறு கடக்கப் போகிறோம் என்பதை தீர்மானிக்கும் என்பர். முதல் ஒரு மணி நேரத்தை ஆக்கப் பூர்வமாக நேர்மறையான எண்ணங்களை கொண்டு நிரப்பிடுவது இன்றியமையாத ஒன்று.            நம்மில் பெரும்பாலானோர் அந்த முதல் ஒரு மணி நேரத்தை பெரும்பாலும் சமூக வலைதளத்தில் கழிக்கின்றோம். பற்குச்சியையும், செல்பசியையும் ஒரு சேர கையில் எடுக்கின்றோம். சமூக விலங்கான மனிதனுக்கும் உலகத்தோடு ஒன்றி இருக்க சமூக வலைத்தளங்கள் பெரும் பங்காற்று கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் நாளில் முதல் வேலையான முகம் காட்ட தயங்கும் கோழையோடு சண்டையிடுதல் இருபத்தி நான்கு மணி நேரத்தை தீயிட்டு கொழுத்துவதற்கு சமம்.          சமூக வலைத்தளங்கள் வசை தலங்களாக பெருகி வருகின்றன. (வன்மமாருகளால் நிரம்பி வழிகின்றன). அவ்வாறு தொடங்கும் நாள் ஒருவகையான இறுக்கத்தை கொடுத்துவிடும்.   ...

விஷ்ணுபுரம் இலக்கிய கூட்ட அனுபவம்

 விஷ்ணுபுரம் விருது விழா பங்கேற்பனுபவம்            வருடம் தோறும் அங்கீகாரம் கிடைக்கப் பெறாத இலக்கிய ஆளுமைகளுக்கு  சிறப்பு செய்யும் விதமாக நடைபெறும் விஷ்ணுபுரம் விருது விழா இவ்வாண்டு டிசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் கோவையில் நடைபெற்றது.            துவக்க நிலை இலக்கிய வாசகனாக முதல் முறை இவ்விழாவில் பங்கேற்ற அனுபவத்தை இங்கே பதிவு சேய்கிறேன். இதுவரை படித்த இன்னும் படிக்க விரும்புகிற அத்தனை ஆளுமைகளையும் சந்தித்து, உரையாடி, விவாதித்து, எழுத்தாளனை அறிந்துகொள்ளும் முயற்சியில் இன்னும் ஓர் அடி முன்வைக்க உதவும் பரந்துபட்ட வெளி தான் இவ்வகையான இலக்கிய கூட்டங்கள்.            அவ்வகையில் முதல் நாள் முழுவதும் எழுத்தாளர் வாசகர் சந்திப்புகள் நடைபெற்றன. நேரடியாக வாசகர்கள் தங்கள் வினாக்களை எழுத்தாளர்களிடம் கேட்கவும் அனுபவத்தை ஒரு துளி சுவைத்துப் பார்க்கவும் வழிவகை செய்தது.           பொதுவாக இலக்கிய விழாக்களுக்கு சென்றால் அங்கு நிறைய புதிய நண்பர்களை கண்டடைவோம். ஆனால் ...

குமரித் துறைவி

  சித்திரையோடு ஓட்டிப் பிறந்தது மதுரைக் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தொடர்ந்து நடை பெற்றுவரும் இந்த பெரு நிகழ்வின் தொடக்கத்தை விவரிக்கும் நூல். தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்திருக்க வேண்டிய, இன்னும் அறிந்திராத வரலாற்றை ஜெ அவரது இயல்பான மொழி நடையிலேயே விவரித்திருக்கிறார். டில்லி சுல்தானியர்கள் படையெடுப்பின் போது தமிழகத்தின் அனேக கோயில்களின் பொன்னும் மணியும் இறைவர் இறைவி விக்கிரகங்களும் போர்படையிடம் சிக்காதிருக்க மக்கள் அவற்றை வெகு தூரம் உள்ள பிற இடங்களில் மறைத்து அடை காத்து வந்தனர் . திருவரங்க பெருமாள் உற்சவர் சிலையும் இதைப் போல தெற்கே கொண்டு சென்ற வரலாற்று கதை உண்டு. அவ்வாறே மாமதுரை நகரின் அரசி அன்னை மீனாட்சி சிலையையும், சொக்கனின் சிலை பிரம்மாண்ட ஸ்வரூபம் ஆததால் ஒரு சிறு கல்லில் அவரை ஆவாகனம் செய்து அந்த கல்லையும் ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா  கோயிலில் மறைத்து வைத்து பூஜித்து வந்தனர், படைகள் முற்றிலும் வடக்கே திரும்பி கூடடைந்தது உறுதியான பின், பாண்டியர் ஆட்சி காலம் தொடங்கியதும் மக்கள் மீண்டும்  அம்மைய...

ராணி மங்கம்மாள் - நா பார்த்தசாரதி

        நா பார்த்தசாரதியின் சரித்திர நாவல்களுள் மிக முக்கியமான குறு நாவல் ராணி மங்கம்மாள். வடக்கில் ஜான்சி ராணி பிறப்பதற்கு மூந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த ஒரு வீரப் பெண்மணி. நாயக்க வம்சத்து மன்னரான சொக்கநாத நாயக்கரின் ராணி மங்கம்மாளின் கணவர். சொக்கநாத நாயக்கர், திருமலை நாயக்கரின் பேரன்.     கணவன் சொக்கநாதன் இறப்பிற்கு பின் உடன் கட்டை ஏறாது தன் மகன் ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கனை வளர்த்து ஆளாக்கி அரியணையில் அமர வைத்தார். (ராஜ மௌலி இவரது கதையை படித்திருக்க கூடும்). முது வீரப்ப நாயக்கரின் இறப்பிற்கு பின் அவரது மகன் குழந்தை விஜயரங்க சொக்கநாதன் பிறந்த உடன் அவனது தாய் தந்தை இருவரும் மறித்து விடவே குழந்தைக்கு மகுடம் சூற்றி ஏறத்தாழ 18 ஆண்டுகள் மங்கம்மாளே ஆண்டு வந்தார்.     புத்தகத்தின் சுவாரசிய தகவல்களுள் ஒன்று கன்னட அரசன் சிக்கதேவரயனின் மீது முத்து வீரப்பனின் படை எடுப்பு முயற்சி. தமிழகத்திற்கும் கன்னடதிற்குமான காவிரி விவகாரம் அறுநூறு- எழுநூறு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ஒன்று. சிக்கதேவராயர் காவிரியின் குறுக்கே அணை கட்டி தமிழகத்திற்...

மறைக்கப் பட்ட இந்தியா - S. Ramakrishnan

     வரலாற்றின் மீது எப்போதுமே எனக்கு தீராத ஆர்வம் உண்டு. நாளைய கேள்வியின் பதிலை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு நேற்று தான் வரலாறு. ஒருமுறை S.Ra அவர்கள் அமரிக்காவில் மிகத் தொன்மையான பொருள் என்றால் அதற்கு 500 ஆண்டுகள் தான் ஆகியிருக்கும். அனால் நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு மரக்காபடி பத்து தலைமுறையாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு பொருள் என்று கூறியுள்ளார். நாம் மட்டுமல்ல வரலாற்றில் எந்த தலைமுறையுமே தனது வரலாற்றின் மீது அதீத ஆர்வம் கொண்டதாக இருந்ததில்லை.       பள்ளி நேரத்தில் படித்து மறந்து போன யுவன் சுவாங் அவர்களின் இந்தியப் பயணத்தில் தொடங்கி ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் வரை கிட்ட தட்ட மூவாயிரம் ஆண்டுகால வரலாற்றை இந்த புத்தகத்தில் தொகுத்திருக்கிறார் எஸ்.ரா.       எஸ்.ரா வின் பெரும்பாலான புத்தகங்கள் சாமானியனுக்கானவை. எளிய நடையில் அதே நேரம் காலத்தை தாண்டி நிற்கும் ஒரு படைப்புலகம் எஸ்.ரா வுடையது.  புத்தகத்தில் உள்ள சில சுவாரசிய வரலாற்று குறிப்புகள்: உஷா மெத்தா என்ற பெண் 1942ம் ஆண்டே ரகசிய ரேடியோ ஒன்றை நடத்தி வந்து அதற்காக ஆங்கிலேய அரசால...