Skip to main content

Posts

நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை - பவா செல்லதுரை

நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை - ஒரு பேரன்புக்காரனின் பூங்கொத்து ! பவா செல்லதுரை சமீபத்திய கலை இலக்கிய வட்டாரத்தில் பெரிதும் புழங்கும் பெயர். பெருங்கதையாடல் என்னும் கதை சொல்லும் வடிவத்தை என் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியவர். ஜெயமோகனின் யானை டாக்டர், வெள்ளையானை, S ராமகிருஷ்ணனின்  இடக்கை, இமையத்தின்  செல்லாத பணம், சமீபத்தில் நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானை, செந்தில் ஜெகநாதனின் நித்தியமானவன் என்று பல நாவல்களை கதையாக சொல்லி பெரும் வாசகபரப்பிற்கு கொண்டு சேர்த்திருக்கிறார். சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய அவரது நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை என்ற  சிறுகதை தொகுப்பினை குறித்த வாசிப்பனுபவம். முதலில் பவாவின் கதைகள் அறிமுகம் செய்வது பெரும் பாறைகளாலும் கட்டாந்தரைகளாலும் ஆன மலைப்பிரதேசத்தை. எங்கும் பச்சையம் நிறைந்த காவிரிக்கரையில் வாழும் எனக்கு பாறை முடுக்குகளும், பழங்குடியின மக்களும்,  நள்ளிரவு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஜெபங்களும் நான்  கண்டிராத கதைக்களம்.   முகம் - ஒரு திருமணமும் அதில் ஒவ்வொரு முகத்திலும் காணும் உணர்ச்சி கொப்பளிப்புகளும் திருமண ஆல...

ஆடு ஜீவிதம் - நாவல் வாசிப்பனுபவம்

வேலை நிமித்தமாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் புலம் பெயர் தொழிலாளி ஒருவரின் வாழ்க்கையை சற்றும் புனைவில்லாமல் கூறும் வாழ்க்கை வரலாற்று நூல். 2009ம் ஆண்டு மலையாளத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். குடும்ப வறுமை காரணமாக 1992ம் ஆண்டு பல்லாயிரம் கனவுகளோடு சவுதிக்கு செல்லும் நஜீப் தான் கனவில் கண்ட எந்த ஒரு குணாதிசயமும் அல்லாத ஒரு வெற்று பாலை நிலத்தின் நடுவில் ஆட்டுப்பட்டியில்(மஸாரா) ஆடுமேய்க்க விதிக்கப் படுகிறார். கர்ப்பமுற்ற தன் மனைவியையும், உப்பா, உம்மாவையும் தனியாக விட்டுவிட்டு பிறக்கவிருக்கும் தன் மகன்/மகளுக்கு நல்லதொரு எதிர்காலத்திற்காக வெளிநாடு செல்ல முடிவு செய்கிறார் நஜீப். மலபார் மண்ணில் அன்றாடம் நீரை சுவாசித்தது மணல் அள்ளும் வேலையை செய்யும் நஜீப்பிற்கு குளிப்பதற்கும் இதர அன்றாட தேவைகளுக்கும் கூட சிறிதளவு நீர் தர மறுக்கும் அர்பாபிடம் மூன்று ஆண்டுகள் சிக்கி அவர் படும் இன்னல்களும் அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதும் தான் முழு நாவல். காலை கடனை முடித்து சுத்திக்காக ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீரை சிறிதளவு எடுத்த நஜீப்பிற்கு முதன் முதலாக அர்பாபிடமிருந்து முதுகை பிளக்கும் படியான...

பொன்னி

  நடந்தாய் வாழி காவேரி பயணக்கட்டுரை நூல் வாசிப்பனுபவம்.  நடந்தாய் வாழி காவேரி சிட்டி, தி ஜானகிராமன் இனைந்து எழுதிய பயணக்கட்டுரை. தமிழ் பயணக்கட்டுரை வரலாற்றில் ஏ கே செட்டியார் அவர்களின் பயணக்குறிப்புகளை போன்று குறிப்பிடத்தக்க ஒரு நூல். தி ஜா நாவல் உலகத்தில் ஒரு ஆசான், சு வேணுகோபால் போன்ற சமகால பல எழுத்தாளர்களுக்கு குருவாக விளங்குபவர். சிட்டி என்கிற பெ கோ சுந்தரராஜன் மணிக்கொடி இதழின் ஆசிரியராக இருந்தவர். சிட்டி, தி ஜா மட்டுமல்லாமல் உடன் ஒரு புகைப்பட கலைஞர், ஓவியர் மற்றும் மகிழுந்து ஓட்டுநர் என்று ஒரு குழுவுடன் செல்லும்  பயணம் மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது.    1. தலைக்காவேரி - ஹொகேனக்கல் பயனைக் கொண்டுதான் பெரியவர்கள் தொடங்கும் பணியின் நோக்கங்களையும் நுட்பங்களையும் அறிய முடியும் என்று காளிதாசன் அருளிய வாக்குக்கு ஒரு சான்று வேண்டுமானால் தலை காவேரியின் இந்த மௌனச் சுனையைதான் காணவேண்டும்.   தலைக்காவேரி தொடங்கி கிருஷ்ணராஜசாகர், ஸ்ரீரங்கப்பட்டணம், மேகதாட்  வழியாக ஹொகேனக்கல் வரை சென்றடைந்துள்ளனர். வழியில் ஒரு முதியவரை சந்திக்கும் குழுவை குறித்து நவீன வசதிகளான மின...

புல்லின் தழல்

சென்ற ஞாயிற்றுக்கிழமை நூலகத்திலிருந்து புல்லின் தழல் என்ற குறுநாவலை எடுத்துவந்தேன், 13 நிமிடங்களுக்கு முன் படித்து முடித்தேன். வெண்முரசு நாவல் வரிசையின் 26 நாவல்கள் அல்லாது, அதன் உட்கதைகளை தொகுத்து சில குறுநாவல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. செம்மணிக்கவசம் என்ற குறுநாவல்  கர்ணனின் கதையில் ஒரு சிறு பகுதியை மட்டும் கொண்டுள்ள ஒன்று. அதே போல் புல்லின் தழல், துரோணரின் கதையை மட்டும் கொண்டது. இந்த குறுநாவல்களின் சிறப்பென்பது ஒவ்வொரு நாவலும் தன்னளவில் ஒரு முழு கதையம்சம் கொண்டது, அதை மட்டுமே தனியாக வசிக்கவும் வழிசெய்வது. பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் குறுகுலக் கல்வியின் இறுதிநாளில் கதை தொடங்குகிறது. துரோணர் குருகாணிக்கையாக துருபதனை தேர்க்காலில் கட்டி இழுத்துவரும்படி கோருகிறார். ஏன் என்ற காரணத்தோடு துரோணரின் கதைக்கு செல்கிறது (yes, non linear narration). பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் மாணவனாக இருந்த காலத்தில் , பதின் பருவத்தை கடந்து வந்து மாணவனாக துருபதன் ஆசிரமத்தில் இணைவது.  பரத்வாஜர் பயிற்சி அளிக்க மறுத்துவிட  துரோணரே குருவாக இருந்து அவருக்கு  விற்பயிற்சி அளித்தது, பய...

இடக்கை வாசிப்பனுபவம்

இடக்கை, S ரா. நூலின் வாசிப்பனுபவம். உலகம் முழுக்க நீதிக்காக காத்திருக்கும் அபலை மக்களின் கதையை தூமகேது வழியாக கடத்தியிருக்கிறார் S.ரா. இடக்கை, ஒரு magical realistic நாவல். மண்ணாலான பெண், அவளை தினந்தோறும் கரைத்துக் குடித்துக் கொண்டிருக்கும் கணவன், கிணற்றில் வாழும் மனிதன், மன்னனின் சபையில் முறையிட்டும் நீதி கிடைக்காததால் விண்ணுலகம் சென்று கடவுளிடம் முறையிடும் புழு, குரங்குடன் சதுரங்கம் ஆடும் பிஷாடன் என்று பறக்கும் கம்பள கற்பனைகள் நூல் முழுக்க நிரம்பியிருக்கிறது.  கண்ணாடி பிரமிட்டை போன்று இடக்கை நாவலுக்கு பல கோணங்கள் உள்ளன.  1. பாதுஷாவின் பாரம்  பதவிக்காக நடைபெறும் கொலைகள் வரலாறு முழுக்க நிகழ்ந்துள்ளது. (நிகழ்காலத்து கொலைகள் உங்கள் சிந்தைக்கு வந்தால் நானோ வரலாறோ பொறுப்பல்ல !) தன் அந்திம காலத்தில் மாமன்னன் ஒளரங்கஷீப்பும் இதே கவலையில் ஆழ்ந்திருக்கிறார். தந்தையை கொன்றுவிட்டு அரியணை ஏறிய தனக்கும் அதே முடிவு ஏற்பட்டுவிடுமோ என்ற கேள்வி பாதுஷாவை துளைக்கிறது. "மாபெரும் இந்துஸ்தானத்தை ஆட்சி செய்யும் பாதுஷாவாக இருந்தாலும் உறக்கத்தின் முன் ம...

சென்னை புத்தகக் கண்காட்சி

https://www.newindianexpress.com/cities/chennai/2023/jan/05/stalin-to-inaugurate-46th-chennai-book-fair-on-jan-6-2534791.html 46வது சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது, 400க்கும் மேற்பட்ட அரங்குகள், தினந்தோறும் புத்தக வெளியீடுகள், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள், நாள்தோறும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் கலை நிகழ்ச்சிகள் என ஒட்டுமொத்த தமிழகத்தின் மாபெரும் அறிவுத் திருவிழா. அதை குறித்த சில கருத்துக்கள்.  கொண்டாட்டம்:  இருபது ஆண்டுகளுக்கு முன் சென்னையை தவிர வேறு எந்த மாவட்டத்திலும் அரிதாகவே புத்தக திருவிழா ஒருங்கிணைக்கப் படும். சென்ற ஆண்டு கொரோனா ஊரடங்கால் விழா தாமதமாக தொடங்கியது. இவ்வாண்டு வழக்கம் போல் ஜனவரி மாதம் தொடங்கியிருக்கிறது. இன்னொரு சிறப்பாக 16-18 ஆகிய தேதிகளில் முதல் முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. புத்தக அரங்குகளுக்குள் நுழைவதென்பது, தேசத்தின் மூளைக்குள் நடை செல்வது போன்ற அனுபவம். தற்கால சிந்தனை, வாசிப்பு, புதிய நண்பர்களின் சந்திப்பு, நல்ல அப்பளம், சுவையான பில்டர் காப்பி, சென்னையை சுற்றிப்பார்பது போன்ற எண்ணற்ற நன்மை...

யுவனுடன்

காலம் உன்னை உயிரோடு வைத்திருக்கிறதென்றால் உனக்காக ஏதோ ஓர் அதிசயத்தை ஒளித்துவைத்திருக்கும்.  22-12-2022, வியாழன்,  மாலை 5 மணி வெறுமனே நடைபயிற்சி சென்று கொண்டிருக்கும் யுவனின்(இளைஞனின்) எதிரில் யுவன் சந்திரசேகர் என்ற ஆதர்ச எழுத்தாளர் எதிர்கொண்டழைத்தால் எப்படியிருக்கும். இரண்டுமணி நேரமளவிற்கு ஜே கிருஷ்ணமூர்த்தியிலிருந்து, தாய் மார்க்ஸிம் கார்க்கி வரை அநேக புள்ளிகள் தொட்டுச் சென்றார். master class என்னும் பதம் இப்போது பிரபலமாகி வருகிறது, மணி ரத்னம் அவர்கள் சினிமா கற்று தருவதுபோல், மெஸ்ஸி கால்பந்து ஆட கற்றுத்தருவதுபோல், மாஸ்டர்கள் தங்கள் துறை பற்றி கத்துக் குட்டிகளுக்கு கற்றுத் தருவது. அப்படியான ஒரு சந்திப்பு இன்று மாலை நிகழ்ந்தது. நன்றி - தமிழ் விக்கி  இரண்டாம் சுற்றின் போது தூறிய தூறல்கள் நாங்கள் பேசியதை ஒட்டுக் கேட்டிருக்கக் கூடும். தான் எழுதிய அற்புதமான வரிகள் சிலவற்றை தான் தான் எழுதினோமா என்று என்னக்கூடுமென்றும் பின்னொரு நாள் அது தன்னை போன்ற ஒரு படைப்பாளன் முன்பே கண்டறிந்த ஒரு உச்சம், அது இருவருக்குமானது அல்ல. இப் பிரபஞ்சத்திற்கானது என்றார் . நிழல் பிதுங்கி வழிந்த என்ற வர...

பெங்களூர் இலக்கிய விழா

நேற்றும் இன்றும் பெங்களூர் இலக்கிய விழா நடைபெறுகிறது. " இரண்டுவேளை உணவை இந்த சமூகம் எனக்கு கொடுத்திருக்குமாயின் இன்னும் பல நல்ல கதைகளை எழுதியிருப்பேன்"   என்று சொன்ன பிரபஞ்சன் வாழ்ந்த தேசத்தில் ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஒரு இலக்கிய விழா. பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள எந்த ஒரு கவிஞனுக்கோ படைப்பாளனுக்கோ இங்கு இடமில்லை. நன்கு குளிரூட்டப்பட்ட அறையில் புத்தக விற்பனை அரங்குகள், மூன்று இலக்கத்திற்கு குறைவான எந்த ஒரு பதார்த்தமும் கிடைக்காத உணவு அரங்குகள், நிரம்பி வழியும் வெள்ளை பலகையிட்ட மகிழுந்து நிறுத்தங்கள் என மேல்தட்டு மக்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இலக்கிய கூட்டமாக அமைந்தது.                                    மதியம் இரண்டு மணிக்கு VVS லக்ஷ்மன் பங்கேற்ற  ஒரு அரங்கில் அமர்ந்து அவரது வாழ்க்கை குறிப்புகளாக 281 and beyond என்ற புத்தகத்தை குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது(இதற்கும் இலக்கியத்திற்கும் என்ன சம்மந்தம் என்று அடியேனும் அறியேன் !). பின் உவே சாமிநாதய்யர் அவர்களின் கட்டுரைகள் சிலவ...

நட்சத்திரவாசிகள் வாசிப்பனுபவம்

நட்சத்திரவாசிகள் - 2021ம் ஆண்டிற்கான சாகித்ய யுவ புரஸ்கார் விருதுபெற்ற நாவல், ஆசிரியர் கார்த்திக் பாலசுப்ரமணியன்.காலச்சுவடு பதிப்பக வெளியீடு,  நூலின் வாசிப்பனுபவம். இத்தலத்தில் நான் பகிரும் அனைத்து நூல் குறித்த பதிவுகளுக்கும் நூலிலிருந்து நான் கண்ட அனுபவப் பகிர்வு மட்டுமே. விமர்சனம் எழுதும் அளவிற்கு என் வாசிப்பு தளம் விரிவடையவில்லை. 2019ம் ஆண்டில் பொறியியல் படித்து முடித்தேன். இதுவரை மூன்று மென்பொருள் நிறுவனங்களில் பணி செய்திருக்கிறேன், செய்துகொண்டிருக்கிறேன். கார்த்திக் எந்த அலுவலகத்திலிருந்து என்னை பின் தொடர்ந்து வருகிறார் என்று எனக்கும் ஐயம் உள்ளது. தோராயமாக நான் கடந்து வந்த எந்த ஒரு நண்பனை குறித்து பதிவெழுதினாலும் அது நித்திலனையோ, சாஜுவையோ, வேணுவையோ, சத்தியையோ, அர்ச்சனாவையோ, பனிமலரையோ  அல்லது  ராமசுப்புவையோ குறித்த பதிவாகவோ இருக்கக் கூடும், கண்ணடிக்கு அந்த பக்கம் இருக்கும் மனிதர்களின் முகங்கள் சாயம் பூசப்பட்ட கண்ணாடிகளால் தடுத்துவைக்கப் பட்டிருப்பதைப்போல அவரது வாழ்கைகளையும் வெளி உலகத்திலிருந்து மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது.  இன் நாவல் அந்த அத்தனை மனிதர்களின் வா...

பூனாட்சி - வாசிப்பனுபவம்

  பூனாட்சி அல்லது வெள்ளாட்டின் கதை. பெருமாள் முருகன் அவர்களின் நாவல் வாசிப்பனுபவம். 3 நாட்களுக்கு முன் மாலை ஏழு மணிக்கு மூட்டை முடிசைகளை கட்டி கிளம்ப எத்தனித்த நூலகரை காத்திருக்க வைத்துவிட்டு எடுத்து வந்து படிக்க தொடங்கி இன்று மாலை படித்து முடித்தேன். பூனாட்சி என்கிற வெள்ளாட்டுக்குட்டி தான் நாவலின் கதை நாயகி. பகாசுரன் கிழவனிடம் ஒரு ஈத்திற்கு ஏழு குட்டிகள் போடும் அதிசய வெள்ளாட்டுக்குட்டியை விட்டுச் செல்கிறான். கிழவனும் அவன் துணைவியும் எவ்வாறு அக்குட்டியை வளர்த்தெடுக்கின்றனர் என்ற கதையை நாவல் விவரிக்கிறது.  நாவலின் தொடக்கத்திலன்றி எந்த பத்தியிலும் பூனாட்சியை ஆடு என்ற ஒரு வார்த்தையால் கூட குறிக்கவில்லை. தீப்பெட்டி குச்சிகள் போன்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் எனக்கு ஒரு செல்லப்பிராணி வளர்ப்பதென்பதே அடையமுடியா அனுபவம். அவ்வகையில் நாவல் இதுவரை நான் கண்டிராத ஒரு புத்தம் புதிய அனுபவத்தை கொடுத்தது. கட்டாந்தரை எங்கும் அலைந்து திரிந்து பூனாட்சி மேயும் காட்சி வர்ணனைகள் புதுப் புனல் போன்று மகிழ்வை தருகிறது. பூனாட்சி, கட்டிக்கொடுத்துவிட்ட தன் மகளை தவிர வேறு எந்த உறவுகளும் இல்லாத கிழ...

இந்திய இலக்கிய சிற்பிகள் - ஏ கே செட்டியார்

சாகித்ய அகாதமி இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற பெயரில் இலக்கிய முன்னோடிகளின் வாழ்க்கை வரலாற்றை இலக்கியவாதிகளை கொண்டே வெளியிட்டு வருகிறது. அப்பர் , ஞானசம்பந்தர், அழ வள்ளியப்பா, பேரறிஞர் அண்ணாதுரை, ஜெயகாந்தன் என்று பலதரப்பட்ட ஆளுமைகளின் நூல்கள் வெளிவந்துள்ளன.  அந்த வரிசையில் ஏ கே செட்டியார் குறித்து சா. கந்தசாமி எழுதிய நூலை நேற்று முன்தினம் நூலகத்திலிருந்து எடுத்துவந்து நேற்றும் இன்றும் வாசித்து முடித்தேன். அதன் வாசிப்பனுபவ பகிர்வு,  இப்பதிவு.   ஏ கே செட்டியார் தமிழில் பயணக் கட்டுரைகளின் முன்னோடி, இதழாசிரியர், முதன் முதலாக முழு நீள காந்தியின் ஆவணப் படத்தை தயாரித்தவர் என்ற மூன்று பரிமாணங்களை குறித்த முன்னுரையை சா கந்தசாமி அளிக்கிறார். உலகம் சுற்றிய தமிழன் என்று பெயர் பெற்ற செட்டியார், தென்னாபிரிக்கா,இலங்கை, லண்டன், ஜெர்மனி, ரங்கூன்  என்ற எண்ணற்ற நாடுகளுக்கு பயணம் செய்து பயணக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மலேயா முதல் கனடா வரை என்ற அவரது பயணக் குறிப்பு முக்கியமான பயணக் கட்டுரைகளில் ஒன்று. கப்பல், விமானம், ரயில், டிராம் பேருந்து, கட்டை வண்டி என்று பலவகையான பயணங்கள...

விஷ்ணுபுரம் விருது விழா

இந்தாண்டு விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களுக்கு வழங்கப் படுகிறது. சென்ற ஆண்டைப் போலவே இந்தாண்டும் விழாவிற்காக ஆவலாக உள்ளேன். சென்ற ஆண்டை காட்டிலும் வாசிப்பு செழுமை அடைந்திருப்பதால் வளர்ந்த நல்ல உரையாடல்களை உருவாக்க திட்டம். ஜெ இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது அதன் சுட்டி . சாரு நிவேதிதா தமிழ் விக்கி சுட்டி .

பொன்னியின் செல்வன் - அரை நூற்றாண்டுக் கனவின் காட்சி வடிவம்

Image Courtesy : asianet  அனேகமாக இது எனது முதல் திரைப்பட காட்சி அனுபவக் குறிப்பாக இருக்கக் கூடும். வேலை நிமித்தமாக பெங்களூருவில் தங்கியிருந்த தொடக்க காலத்தில் பல நேரங்களில் துணையாக இருந்தது பாப்புலர் கிளாசிக் ஆன பொன்னியின் செல்வன் நாவல். திருச்சியை பற்றிய நாவல் என்ற குறிப்போடு பார்த்திபன் கனவை கல்லூரி நாட்களில் படித்து முடித்த நினைவு இருக்கிறது. பார்த்திப சோழனின் கனவை விக்ரமன் தொடங்கி பிற்கால சோழர்கள் ஆகிய ராசராசன் காலத்தில் நனவாகியது என்று பார்த்திபன் கனவு முடிவுறும்.  ஏறத்தாழ படித்து முடித்த அதே கால கட்டத்தில் தான்  வேலைக்காக  பெங்களூரு சென்றேன். ஆடிப்பெருக்கு நாளில் தொடங்கியது நாவல். எம்மை போன்ற காவிரி கரையோரம் வாழும் மக்களுக்கு ஆடிப்பெருக்கு மகா மங்கலமான ஒரு பெருவிழா. வாலான் அரிசியையும், வெல்லத்தையும், கீறிப்போட்ட தேங்காய் சில்லுகளையும் மஞ்சள் தடவிய கையோடு என் பாட்டி கிளறுகின்ற காட்சி இன்றும் என் மனக்கண்ணில் விரிகின்றது.  பள்ளி அரைநேரம், அலுவலகங்கள் உள்ளூர் விடுமுறை,திருவரங்கம் திருவானைக்காவல் வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்,  பூக்கள், பழங்களின் வி...

Ready to Fire - Book Experience

Ready to fire , the autobiography of an indian rocket scientist, Mr Nambi Narayanan, who is involved in the fabricated ISRO spy case. This book forms the base of a    recently released  motion picture " Rocketry Nambi Narayanan Effect ". This book is one of the best autobiographies I have  ever read and this is in par with the Gandhiji's autobiography "My Experiments with truth", "சத்திய சோதனை" in tamil, theses books doesn't portray the storyteller as a hero rather explains his journey through all his/her ups and downs. The book uses parallel narration with two threads, one narrates his journey of a young aspiring engineering student who went on to lead liquid propulsion system in VSSC Vikram sarabhai space centre, and another thread narrating how he has been falsely accused in the fabricated case and he got rid of it. The first thread is interesting, exciting and inspirational indeed. The second story is full of the bureaucratic attrocities and ho...

திருச்சி புத்தகத் திருவிழா

மாலை ஆறுமணிக்கு S ரா சொற்பொழிவு என்ற அறிவிப்பை பார்த்து ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினேன். அரை மணி நேரம் ஆகவேண்டிய பயணம் காவிரி பாலத்தின் குறுக்காக புதிய பாலம் கட்டும் வேலைகள் நடைபெறுவதால் மாற்று வழியில் ஒருமணி நேரம் பிடித்தது. முதல் முறையாக மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் பிரிட்டிஷ் காலத்திய ராணுவ மைதானத்தின் கல்வெட்டை கண்டேன்.  வெஸ்ட்ரீ பள்ளி மைதானத்தை நெருங்கும் போதே கலைநிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. இந்த ஆண்டு சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்காக ஒரு அரங்கும் புத்தக கடைகளுக்காக தனி அரங்குமாக இரண்டு அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன. கலை நிகழ்ச்சிகள் அப்போது தான் தொடங்கியிருந்ததால் முதலில் புத்தகங்களை பார்த்துவிட்டு பிறகு சொற்பொழிவு அரங்கத்திற்கு செல்லலாம் என்று நுழைந்தேன். பொன்னியின் செல்வன் வாங்குவதற்காக புத்தக கண்காட்சிக்கு வரும் மரபார்ந்த நிகழ்விற்கு திருச்சியும் விதிவிலக்கல்ல என்பதாக எந்த அரங்கில் நுழைந்தாலும் "பொன்னியின் செல்வன் இருக்கா" என்ற குரலை கேட்க முடிந்தது. கடந்த எழுபது ஆண்டுகளில் பொன்னியின் செல்வன் நாவ...